Rs 2,000 notes Exchange: ரிசர்வ் வங்கி திரும்பப் பெறுவதாக அறிவித்த 2000 ரூபாய் நோட்டுகளை, தற்போது சென்னை உட்பட நாடு முழுவதும் 19 இடங்களில் மட்டுமே மாற்ற முடியும்.


2000 நோட்டுகள்:


2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு அறிவித்தது. அதைதொடர்ந்து, பொதுமக்கள் தங்களது கைகளில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில் செலுத்தி தங்களது கணக்கில் வரவு வைக்க கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், இதுதொடர்பான விவகாரங்கள் அறியாத பலர் இன்னும் தங்களது கைகளில் 2000 ரூபாய் நோட்டுகளை வைத்துக்கொண்டுள்ளனர். அவர்களுக்கான கடைசி வாய்ப்பாக, நாடு முழுவதும் 19 இடங்களில் உள்ள பிராந்திய ரிசர்வ் வங்கி  அலுவலகங்களில் 2000 ரூபாய் நோட்டுகளை வழங்கி, அந்த பணத்த தங்களது கணக்கில் வரவு வைக்கலாம். நேரில் செல்ல இயலாதவர்கள் அஞ்சல் மூலமாகவும் குறிப்பிட்ட ஆர்பிஐ அலுவலகங்களுக்கு பணத்தை அனுப்பி, அதனை தங்களது வங்கிக் கணக்கில் வரவாக வைக்கலாம்.


ரிசர்வ் வங்கியின் பிராந்திய அலுவலக விவரங்கள்:


அந்த வகையில் இன்னும் 2000 ரூபாய் நோட்டுகளை கைவசம் வைத்திருக்கும் பொதுமக்கள், நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாக அணுகியோ தங்களது பணத்தை மாற்றிக்கொள்ள ஏதுவாக ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.



  • அகமதாபாத்: இந்திய ரிசர்வ் வங்கியின் பொது மேலாளர், வெளியீட்டுத் துறை 2வது தளம், காந்தி பாலம் அருகில் அகமதாபாத் 380 014.

  • பெங்களூரு: பொறுப்பாளர், நுகர்வோர் கல்வி மற்றும் பாதுகாப்பு பிரிவு, இந்திய ரிசர்வ் வங்கி
    10/3/8, ந்ருப்துங்கா சாலை, பெங்களூரு-560 001, தொலைபேசி: 080- 22180397


  • பேலாபூர்: இந்திய ரிசர்வ் வங்கியின் துணைப் பொது மேலாளர், வெளியீட்டுத் துறை பிளாட் எண். 3, பிரிவு 10 ,எச்.எச். நிர்மலா தேவி மார்க், சிபிசி, பேலாபூர், நவிமும்பை - 400 614 

  • போபால்: இந்திய ரிசர்வ் வங்கியின் துணைப் பொது மேலாளர், வெளியீட்டுத் துறை, ஹோஷங்காபாத் சாலை, அஞ்சல் பெட்டி எண். 32, போபால் 462 011.

  • புவனேஸ்வர்: இந்திய ரிசர்வ் வங்கியின் துணைப் பொது மேலாளர், வெளியீட்டுத் துறை, பண்டிதர் ஜவஹர்லால் நேரு மார்க், அஞ்சல் பெட்டி எண்.16, புவனேஸ்வர் - 751 001

  • சண்டிகர்:  இந்திய ரிசர்வ் வங்கியின் துணைப் பொது மேலாளர், இஷ்யூ டிபார்ட்மெண்ட் சென்ட்ரல் விஸ்டா, டெலிபோன் பவன் எதிரில், செக்டார் 17, சண்டிகர் - 160 017.

  • சென்னை:  இந்திய ரிசர்வ் வங்கியின் பொது மேலாளர் , வெளியீட்டுத்துறை கோட்டை கிளாசிஸ் எண். 16, ராஜாஜி சாலை, அஞ்சல் பெட்டி எண். 40, சென்னை - 600 001.

  • கவுகாத்தி: இந்திய ரிசர்வ் வங்கியின் பொது மேலாளர், வெளியீடு துறை நிலையம் சாலை, பான்பஜார், அஞ்சல் பெட்டி எண். 120, கவுகாத்தி - 781 001.

  • ஐதராபாத்: பொது மேலாளர் வெளியீட்டுத் துறை ரிசர்வ் வங்கி 6-1-65, தலைமை செயலக சாலை, சைபாபாத், ஹைதராபாத் - 500 004

  • ஜெய்ப்பூர்:  பொது மேலாளர், வெளியீட்டுத் துறை ரிசர்வ் வங்கி ராம்பாக் வட்டம்,டோங்க் சாலை, அஞ்சல் பெட்டி எண்.12, ஜெய்ப்பூர் - 302 004

  • ஜம்மு: இந்திய ரிசர்வ் வங்கியின் துணை பொதுமேலாளர், வெளியீட்டுத் துறை ரயில் தலைமை வளாகம், ஜம்மு -180 012.

  • கான்பூர்: பொது மேலாளர் வெளியீட்டுத் துறை ரிசர்வ் வங்கி எம்ஜி மார்க், அஞ்சல் பெட்டி எண். 82/142 கான்பூர் - 208001


  • கொல்கத்தா: ஜெனரல் மேலாளர் வெளியீடு துறை இந்திய ரிசர்வ் வங்கி அஞ்சல் பை எண். 49 கொல்கத்தா -700 001



  • லக்னோ: ரிசர்வ் வங்கி, 8-9 விபின் காண்ட், கோமதிநகர், லக்னோ-226010.

  • மும்பை: இந்திய ரிசர்வ் வங்கியின் பொது மேலாளர், வெளியீட்டுத் துறை முதன்மைக் கட்டிடம், ஷாஹித் பகத் சிங் மார்க், கோட்டை, மும்பை - 400 001.

  • நாக்பூர்: இந்திய ரிசர்வ் வங்கியின் பொது மேலாளர், வெளியீட்டுத் துறை முதன்மை அலுவலகக் கட்டடம், டாக்டர் ராகவேந்திர ராவ் சாலை,அஞ்சல் பெட்டி எண். 15, சிவில் லைன்ஸ், நாக்பூர் - 440 001

  • டெல்லி: ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா பொதுமேலாளர், இஷ்யூ டிபார்ட்மெண்ட் 6, சன்சாத் மார்க், புது தில்லி - 110 001.



  • பாட்னா:  இந்திய ரிசர்வ் வங்கியின் துணை பொதுமேலாளர், இஷ்யூ டிபார்ட்மெண்ட், தெற்கு காந்தி மைதான் அஞ்சல் பெட்டி எண். 162 பாட்னா - 800 001.




  • திருவனந்தபுரம்: இந்திய ரிசர்வ் வங்கியின் துணைப் பொது மேலாளர், வெளியீட்டுத் துறை, பேக்கரி சந்திப்பு, அஞ்சல் பெட்டி எண் - 6507, திருவனந்தபுரம் - 695 033