தொடர் தொழில்முனைவோர் என்னும் வார்த்தையை பலரும் கேட்டிருப்போம். அதாவது ஒரு தொழில் தொடங்கி அதில் இருந்து வெற்றிகரமாக வெளியேறி அடுத்த தொழிலுக்கு செல்வார்கள். இதுபோல பல தொழில்களை செய்தவர்களுக்கு தொடர் தொழில்முனைவோர் என பெயர். சர்வதேச அளவில் மட்டுமல்லாமல் இந்திய அளவிலும் இதற்கு பல உதாரணங்கள் உள்ளன. Roneeie Screwvala  மிகச்சிறந்த உதாரணம். இவரது பெயரை சொல்வதை விட யுடிவி என்று சொன்னால் தமிழ் வாசகர்களுக்கு எளிதில் புரியும். தெய்வ திருமகள், வேட்டை, கலகலப்பு என பல தமிழ் திரைப்படங்களையும் யூடிவி தயாரித்திருக்கிறது.


பார்சி குடும்பத்தை சேர்ந்தவர். பள்ளிக்கல்வியை சிறப்பாக படித்திருந்தாலும் கல்லூரியில் சிறப்பாக படிக்கவில்லை. தியேட்டர் ஆர்டிஸ்டாக படிக்கும்போதே இருந்தார். அப்பாவுக்கு சிஏ படிக்க வேண்டும் என்பது திட்டமாக இருந்தாலும் மீடியாவுக்குள் செய்ய வேண்டும் என நினைத்தார். ஆனால் அப்போது தூர்தர்ஷன் மட்டுமே இருந்தது. நிகழ்ச்சி தொகுப்பாளராக மாறினார். தூர்தர்ஷனுக்காக கேம் ஷோக்களை தொகுத்து வழங்கினார். அதனை தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்தார்.




அப்போது தூர்தர்ஷன் மட்டும் என்பதால் கேபிள் டிவி தொழிலில் இறங்கினார். 1981-ம் ஆண்டு கேபிள் டிவி தொழிலில் இறங்கினார். உங்கள் வீடுகளில் பல சானல்கள் இருக்கும் என்பதை அடிப்படையாக வைத்து கேபிள் டிவி தொழிலில் இறங்கினார். மும்பையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே இந்த தொழிலை நடத்தினார். அதனை தொடர்ந்து மும்பையின் முக்கிய ஓட்டல்களுக்கு விரிவு படுத்தினார். 1986-ம் ஆண்டு இந்த தொழிலை விற்றுவிட்டார்.


டூத் பிரஷ்


இதற்கடுத்து பெரிய டூத் பிரஷ் நிறுவனங்களுக்கு தேவையான டூத்பிரஷ் உற்பத்தி செய்துகொண்டு பல்க் காண்டராக்ட் கிடைத்தது. இவரது அப்பா வேலை செய்த நிறுவனத்தீன் துணை நிறுவனம் லண்டனில் இருந்தது. அந்த நிறுவனம் டூத் பிரஷ் தயாரித்துவந்தது. இரு ஆண்டுகள் பழமையான மெஷினை ஸ்கிரப் செய்வதாக கேள்விபட்ட அந்த மெஷினை இந்தியாவுக்கு கொண்டு டூத் பிரஷ் உற்பத்தியை செய்தார். 1988-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் மிகப்பெரிய டூத் பிரஷ் உற்பத்தி நிறுவனமாக மாறியது. 2006-ம் ஆண்டு இந்த நிறுவனம் விற்கப்பட்டது.


யூடிவி


டூத் பிரஷ் தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டாலும், அதில் தினசரி முதலீட்டாளராக மட்டும் இருந்தார். அதனால் 1990-ம் ஆண்டு யுடிவி சாப்ட்வேர் கம்யூனிகேஷன்ஸ் என்னும் நிறுவனத்தை தொடங்கினார். இதுவரை நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர், தற்போது தயாரிப்பாளராக மாறினார். அப்போதும் தூர்தர்ஷன் மட்டுமே இருந்தது. ஆனால் அடுத்த சில ஆண்டுகள் ஜீ சேவையை தொடங்கியது. தவிர வெளிநாட்டு கார்டூன் சானல்கள் இந்தியாவில் தடம் பதிக்க திட்டமிட்டன. அதனால் அவர்களுக்கு தேவையான அனிமேஷன் மற்றும் டப்பிங் பணிகளையும் செய்ய தொடங்கியது யூடிவி. சாந்தி என்னும் சீரியல் 800 எபிசோட்கள் ஒளிபரப்பானது. ஜீ தொடங்கப்பட்ட காலத்தில் ஒரே ஆண்டில் 10 ஷோக்களில் 520 எபிசோட் ஒளிப்பரப்பானது.




வெற்றி மட்டுமல்லாமல் சிக்கலையும் சந்தித்திருக்கிறார் ரோனி. தூர்தர்னஷில் ஒரு கேம் ஷோவில் சுதந்திரத்தின் போது பாகிஸ்தானின் Show boy என்னும் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. ஆனால் play boy என்பது போல நாடாளுமன்றத்துக்கு தெரியவந்திருக்கிறது. இதனால் சிக்கல் தற்காலிகமாக அந்த ஷோ நிறுத்தப்பட்டது. பெரும் தொகை முதலீடு செய்து பெரும்பாலான ஷோகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் ஆறு மாதங்களுக்கு பிறகே அந்த ஷோ ஒளிபரப்பானதாக ரோனி ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.


நிகழ்ச்சி தயாரிக்க முடியும், விளம்பரம் எடுக்க முடியும் என்பதால் நாமே சானல் தொடங்கலாம் என முடிவெடுத்து 1996-ம் ஆண்டே ஹோம் ஷாப்பிங் சானல் தொடங்குகிறார். ஆனால் அந்த காலத்தில் இந்தியாவுக்கு மிகவும் அட்வான்ஸ்டு நிலை. என்பதால் அந்த திட்டமும் தோல்வியடைகிறது.


ஆனால் அதனை தொடர்ந்து பத்து சானல்கள் தொடங்கப்படுகிறது. திரைப்பட நிறுவனம் தொடங்கப்படுகிறது, கேம் பிரிவு என பல விரிவாக்கப்பணிகள் நடக்கின்றன. பல இந்திய மொழிகளில் யுடிவி படங்களை தயாரித்தது. 2004-ம் ஆண்டு குழந்தைகளுக்கான ஹங்காமா சானல் தொடங்கப்பட்டது. அப்போது கார்டூன் நெட்வொர்க் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் இருக்கும்போது ஹங்காமா வெற்றி அடையாது என பலரும் எச்சரித்தனர். ஆனால் ஹங்காமா குழுந்தைகள் பிரிவில் பெரிய வெற்றி அடைந்தது.


இந்த வெற்றி காரணமாக சர்வதேச நிறுவனமான டிஸ்னியின் அறிமுகம் கிடைக்கிறது. டிஸ்னி நிறுவனம் ஹங்காமா சானலை வாங்க விரும்புகிறது.  அதே சமயம் யுடிவியில் 15 சதவீத பங்குகளை வாங்கவும் டிஸ்னி முடிவெடுக்கிறது. ஹங்காமா சானல் தொடங்கப்பட்ட 22 மாதங்களிகே டிஸ்னி வாங்கிக்கொள்கிறது. (விஜய் மல்லையாவிடம் இருந்து விஜய் தொலைக்காட்சியை வாங்கி நடத்தில் சில காலத்துக்கு பிறகு அதனை ஸ்டார் குழுமத்திடம் விற்றார் ரோனி.)


அடுத்த சில ஆண்டுகளில் யூடிவி நிறுவனத்தில் கூடுதல் முதலீடு செய்து 32 சதவீத பங்குகளை வாங்குகிறது டிஸ்னி.  இதனை தொடர்ந்து மேலும் பங்குகளை வாங்கியது. இதனையடுத்து 2013-ம் ஆண்டு யூடிவி நிறுவனத்தில் இருந்து வெளியேறினார்.




ரோனி 2.0


முதல் ஆட்டத்தை விட இரண்டாம் ஆட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். டிஸ்னியில் இருந்து விலகி பிறகு 10 நாட்கள் நியூசிலாந்துக்கு சுற்றுலா சென்றார். அதன் பிறகு பல முக்கியமான நிறுவனங்களை தொடங்கினார். 2013-ம் ஆண்டு பிரைவேட் ஈக்விட்டி நிறுவனத்தை தொடங்கினார் (unilazer ventures) . ஷாப் குளுஸ், நிகி. லென்ஸ்கார்ட், லிலோ லேர்னிங் உள்ளிட்ட சில நிறுவனங்கள் முதலீடு செய்திருக்கிறது. மேலும் யு ஸ்போர்ட்ஸ் என்னும் நிறுவனம் மூலம் கபடி அணியை வாங்கி இருக்கிறார்.


2015-ம் ஆண்டு எஜுடெக் பிரிவில் அப்கிரேட்(upgrad) என்னும் நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம் 1.2 பில்லியன் டாலருக்கு மேல் சந்தை மதிப்பை கொண்ட நிறுவனமாக மாறி இருக்கிறது. ஏற்கெனவே திரைப்பட தயாரிப்பு அனுபவம் இருப்பதால் மீண்டும் 2017-ம் ஆண்டு ஆர்.எஸ்.விபி மூவிஸ் எனும் நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். இந்த நிறுவனம் மூலம் பெரும்பாலான படங்கள் / சீரியஸ் நெட்பிளிக்ஸுக்கு விற்பனை செய்திருக்கிறது.


யூரி, லஸ்ட் ஸ்டோரிஸ், பாவ கதைகள் உள்ளிட்ட பல கண்டென்களை ஆர்எஸ்விபி மூவிஸ் தயாரித்திருக்கிறது. மீடியா உலகில் தவிர்க்க முடியாத நபர் ronnie screwvala.