Immune Boosting Foods: இந்த கொரோனா பெருந்தொற்றில் இருந்து அனைவரும் உணர்ந்த ஒரு விஷயம் ஆரோக்கியமாக வாழவேண்டும் என்பது தான். ஆரோக்கியமாக வாழ்வதற்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகள் எடுத்து கொள்ள வேண்டும். சரிவிகித உணவு மற்றும் போதுமான ஓய்வு, மற்றும் உடற் பயிற்சி செய்வது உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
தொற்று நோய்களில் இருந்து தன்னை பாதுகாத்து கொள்ள நோய் எதிர்ப்பு சக்தி அவசியம். நோய் எதிர்ப்பு மண்டலம், பாக்டீரியா, வைரஸ் தொற்றுகளுக்கு எதிரான ஆண்டிபாடிகளை உருவாகும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் தொற்றுகளுக்கு எதிராக ஆண்டிபாடிகளை உருவாக்க முடியாது. அதனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஊட்டச்சத்து மிக்க உணவுகள் ஆரோக்கியமான வாழ்வியல் முறைக அவசியம்.
வைட்டமின் சி - இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிக படுத்துகிறது. இது நோய்களுக்கு எதிராக ஆண்டிபாடிகளை உற்பத்தி செய்கிறது. மேலும் தொற்று நோய்கள் வந்தாலும், விரைவாக செயலாற்றி நோய்களுக்கு எதிராக செய்லபடுகிறது. ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லிக்காய், ப்ரோக்கோலி, ஸ்பினாச், கொய்யாப்பழம், பப்பாளி , ஆகியவை வைட்டமின் சி சத்து நிறைந்த உணவுகள். இவைகளை அன்றாடம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
வைட்டமின் ஏ - இது தொற்று நோய்களுக்கு எதிராக செயல்படுகிறது. இது இரண்டு விதமான உணவுகளில் இருந்து கிடைக்கிறது.அசைவ உணவுகளிலும், தாவர உணவுகளிலும் வைட்டமின் ஏ சத்து கிடைக்கிறது. தினம் உணவில் வைட்டமின் ஏ சத்து நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.
அசைவ உணவுகள் மீன் மற்றும் கடல் உணவுகளில் வைட்டமின் ஏ சத்து நிறைந்து இருக்கிறது. தாவர உணவுகளில் சீஸ், யோகர்ட், பப்பாளி, மாம்பழம், பரங்கி காய், கேரட், சர்க்கரை வள்ளி கிழங்கு, உருளை கிழங்கு , ஸ்பினாச் கீரை வகை ஆகிய உணவுகளில் வைட்டமின் ஏ சத்து நிறைந்து இருக்கிறது.
வைட்டமின் டி - இது சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் ஊட்டச்சத்து ஆகும். தினம் வெயிலில் நிற்பதால் வைட்டமின் டி தோலின் வழியே உடலுக்கு கிடைக்கிறது. இந்த வைட்டமின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. தினம் 20- 30 நிமிடம் வெயிலில் நிற்பதால், உடலுக்கு தேவையான வைட்டமின் டி சத்து கிடைக்கிறது. மேலும் இது முட்டை, பால், மஸ்ரூம், சீஸ் போன்ற உணவுகளில் குறைந்த அளவு வைட்டமின் டி சத்துகள் நிறைந்து இருக்கிறது .
வைட்டமின் இ - இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிக படுத்துகிறது. இது இரத்த உறைதலை தடுக்கிறது. மேலும், தொற்று நோய்களுக்கு எதிராக செயல்படுகிறது. இது பாதாம் பருப்பு, நிலக்கடலை, ஸ்பினாச், மாம்பழம் ஆகிய உணவுகள் வைட்டமின் இ சத்து நிறைந்து இருக்கிறது.
ஜின்க் - தினமும் உணவில் ஜின்க் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை எடுத்து கொள்வதால், இது நோய் எதிப்பு மண்டலத்தில் புதிய செல்களை உருவாக்கி புத்துணர்வுடன் வைக்கிறது. தொற்று நோய்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது. ஆளி விதை, பரங்கிக்காய் விதை, எள் , கொண்டை கடலை, பருப்பு ஆகியவைகளில் ஜின்க் சத்து இருக்கிறது.