ஆரெம்கேவி சில்க்ஸ் இந்த விழாக்காலத்தில் பட்டுச்சேலைகளில் மற்றொரு புதுமையை உருவாக்கி வழங்குகிறது.


கைத்தறி பட்டுப்புடவைகளில் புரட்சிகரமான புதுமைகளை அறிமுகம் செய்வதில் பிரசித்தி பெற்ற ஆரெம்கேவி நிறுவனம். இந்த விழாக்காலத்தில் காலங்காலமாய் தொடர்ந்துவரும் பாரம்பரியத்தில் மற்றொரு புதிய அம்சத்தை அளிப்பதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளது.


ஒருவகையில் கைவினைத்திறனை கொண்டாடும் விதத்திலும் மற்றொரு வகையில் நீடித்த ஃபேஷனுக்கோர் ஈடுபாடாகவும் இந்த கலெக்ஷன் அமைந்துள்ளது. இந்த தொகுப்பில் உள்ள அனைத்துமே இயற்கை முறையில் சாயம் ஏற்றப்பட்டதாகவும், பல ஆசிய கலாச்சாரங்களை மீட்டுருவாக்கம் செய்து பொலிவுடன் வழங்கும் வகையிலும் அமைந்துள்ளது ஓர் சிறப்பு. இந்த பிரமிப்பூட்டும் தொகுப்பில் மூன்று பிரிவுகள் உள்ளன. அவை ஒவ்வொன்றுமே பலதரப்பட்ட கலாச்சார பாரம்பரியம் மற்றும் வியப்பூட்டும் கலைத்திறன் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் உள்ளன.


கிராமப்புறக் கலை


"கிராமப்புறக் கலை' பிரிவில் கிராமப்புறம் சார்ந்த உயரிய ஆடை பாரம்பரிபத்திற்கு எங்கள் மரியாதையை அளித்துள்ளோம். ஒவ்வொரு சேலையுமே நம் நாட்டு சாயமேற்றும் நுட்பங்களின் அழகை காட்சிப்படுத்தும் வண்ணம் இயற்கையின் அற்புதங்களிலிருந்து தருவிக்கப்பட்ட நிறங்களைக் கொண்டு ஓவியமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சேலைகள் ஆசியாவின் பலதரப்பட்ட சமுதாயங்களின் துடிப்பான வரலாறுகள். சடங்குகளின் பிரதிபலிப்புகள் மற்றும் வாழ்க்கை முறைகளின் சங்கமமாகும். சேலையில் சித்தரிக்கப்பட்டுள்ள மைசூர் கிருஷ்ணாவின் தெய்வீக உருவமைப்பு முதல் அன்றாட வாழ்வினை விளக்கும் மினாங்கபாவு நாட்டுப்புறக்கலை, லாய் தாய் அலங்கார வடிவமைப்பின் ஆச்சரியமூட்டும் நேர்த்தி மற்றும் ஹசே சித்தாராவின் நுட்பமான டிசைன்கள் வரை ஒவ்வொன்றுமே ஒரு தனித்துவமான வரலாற்றை காட்சிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.




இந்திய கலாச்சாரம்


நமது இந்திய கலாச்சாரம்' கலெக்ஷன் இந்தியாவை வரையறுக்கும் காலத்தால் அழியாத பாரம்பரியங்கள் மற்றும் கைவினைத்திறன்களை வெளிப்படுத்தும் வகையிலான ஓர் பயணம் என கூறலாம். இதில் நாங்கள் நுட்பமான பனாரஸ் வேலைப்பாடு முதல் பூஜோடியால் ஈர்க்கப்பட்ட உருவச்சின்னங்கள் வரை பல்வேறு பகுதிகளைச்சார்ந்த நேர்த்தியான கலையம்சங்களை இதில் உள்ளடக்கி வழங்கியுள்ளோம். இப்பிரிவில் உள்ள ஒவ்வொரு சேலையுமே இந்தியாவின் ஈடுஇணையற்ற கலாச்சாரத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் அதன் பண்டைய கலையை தற்போதைய பாணியுடன் ஒத்திசைவுடன் இணைத்து மிக அழகாக வழங்கியுள்ளது.


கார்னர் மேங்கோவின் ராஜ கம்பீரம், கோடாலி கருப்பூரின் நுட்பம். புஜோடி சேலையின் ஆழ்ந்த ஈர்ப்பு, வாழைப்பூவின் பின்னிப்பிணைந்த வடிவமைப்புகள், பைத்தானியின் கலாச்சாரத் துடிப்பு மற்றும் உயரிய மஸ்டர்ட் நிறத்தில் உள்ள பிரமிப்பூட்டும் பாரம்பரியமிக்க மீனாகாரி பார்டர் என அனைத்து அம்சங்களுமே இச்சேலையை இந்தியாவின் பலதரப்பட்ட கலை மற்றும் பாரம்பரியத்தில் வேரூன்றிய ஆடை கலாச்சாரத்திற்கு ஓர் நிரூபணமாக அமைந்துள்ளது.


லினோ கலெக்ஷன்


லினோ கலெக்ஷன்' நீடித்த எதிர்காலத்திற்கான ஓர் முயற்சியை சிறப்பித்துக் காட்டுகிறது. சுற்றுச்சூழலுக்கு இணக்கமான நிறமிகளால் இயற்கை முறையில் சாயமேற்றப்பட்டு வடிவமைக்கப்பட்ட இந்த சேலைகள் கம்பீரத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாகவும் சுவாசிக்கும் பட்டுச்சேலை என்ற ஒரு கருத்தை எ அறிமுகப்படுத்தும் வண்ணமும் அமைகின்றன. லினோ கலெக்ஷன் மூலம் நீடித்த தன்மை கொண்ட, நெறியுடன் கூடிய ஆடையை வடிவமைக்கும் ஓர் முக்கிய கட்டத்திற்கு முன்னேறும் அடியெடுத்து வைத்துள்ளோம். இதில் ஒவ்வொரு நெசவு மற்றும் நிறச்சாயலுமே உள்ளத்தெளிவுடன் கூடிய அழகைப் பிரதிபலிக்கின்றன என்றால் அது மிகையில்லை.


மனதை மயக்கும் விவா மெஜந்தா லினோ சேலை, கலையம்சமிக்க தாஜ் லினோ வாணா, நுட்பமான லினோ வர்ணா புட்டா சேலை, வனப்புடன் கூடிய லினோ ஃப்ளோரல் வர்ணா, மற்றும் கிளாஸிக் வினோ வர்ணா ஆகியவை உள்ளடங்கிய லினோ கலெக்ஷனை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமையடைகிறோம். இந்த ரகங்கள் பாரம்பரியத்தின் நவீன விளக்கத்துடன் கூடிய எடைகுறைவான அற்புத படைப்புகள்!


ஆரெம்கேவி 


1924 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஆரெம்கேவி சில்க்ஸ் அதன் கைத்தறியில் நெய்யப்பட்ட காஞ்சிபுரம் பட்டுப்பபுவைகளுக்கு பிரசித்தி பெற்றது. இச்சேலைகள் கைவினைத்திறன் மற்றும் புதுமைகளுக்காக பல தேசிய விருதுகளை வென்றுள்ளன..


ஆரெம்கேவி டிசைன் ஸ்டுடியோ இதுவரை ஏராளமான தனித்துவமான பட்டுப்புடவைகளை உருவாக்கியுள்ளது. இதில் ஹம்ச தமயந்தி பட்டுப்புடவை, ஐஸ்வரியப்பூக்கள் பட்டுப்புடவை, சின்னஞ்சிறு கிளியே பட்டுப்புடவை, தர்பார் கிருஷ்ணா பட்டுப்புடவை, மற்றும் குறளோவியம் பட்டுப்புடவை ஆகியவையும்; பிரமிப்பூட்டும் ரிவர்சிபிள் சேலை, 50000 வண்ணங்கள் கொண்ட பட்டுப்புடவை. வர்ணஜாலம் சேலைத்தொகுப்புகள், புதுமையான இயற்கை பட்டுப்புடவை ரகங்கள் மற்றும் லினோ பட்டுப்புடவை ரகங்கள் ஆகியவை உள்ளடங்கும். இன்று, நீங்கள் 50000 வண்ணங்களில் உங்களுக்குப் பிடித்த வண்ணத்தில் உங்களுக்கேற்ற விதத்தில் ஆரெம்கேவியின் மிகச்சிறந்த கைவினைஞர்கள் மூலம் சேலையை நீங்கள் வடிவமைத்துக் கொள்ளமுடியும். ஆரெம்கேவியிடம் பலரகங்களிலான ஃபேன்சி மற்றும் எம்பிராய்டரி செய்யப்பட்ட சேலைகள். சல்வார் கமீஸ்கள், மற்றும் பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகளுக்கான முழு தயாரிப்பு ரகங்களும் உள்ளன.