RBI Update: அனுமதி இல்லாமல் வாடிக்கையாளர்களைச் சேர்க்க வேண்டாம் : Paytm-க்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்

"வர்த்தக மேற்பார்வைச் சிக்கல்கள்" அடிப்படையில் ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Continues below advertisement

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ள அதன் அண்மைய அறிக்கையில், புதிய வாடிக்கையாளர்களை சேர்த்துக்கொள்வதை நிறுத்துமாறு விஜய்சேகர் சர்மா தலைமையிலான Paytm Payments Bank Ltdக்கு உத்தரவிட்டுள்ளது. அந்த வங்கியில் காணப்பட்ட "வர்த்தக மேற்பார்வைச் சிக்கல்கள்" அடிப்படையில் ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. Paytm Payments வங்கியின் 51 சதவிகிதப் பங்குகள் ஷர்மா வசம் உள்ளன.

Continues below advertisement

Paytm Payments Bank அதன் IT அமைப்பின் விரிவான கம்ப்யூட்டர் ஆடிட்டிங்கை நடத்த ஒரு தனி தகவல்தொழில்நுட்ப தணிக்கை நிறுவனத்தை நியமிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று RBI உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. "Paytm Payments Bank Ltd மூலம் இனி புதிய வாடிக்கையாளர்களை இணைத்துக் கொள்வது, IT ஆடிட்டர்களின் அறிக்கையை மதிப்பாய்வு செய்த பிறகு RBI வழங்கும் குறிப்பிட்ட அனுமதிக்கு உட்பட்டதாக இனி இருக்கும்" என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


ஆகஸ்ட் 2016 இல் ரிசர்வ் வங்கியுடன் இணைக்கப்பட்ட Paytm Payments Bank மே 2017 இல் செயல்படத் தொடங்கியது. நொய்டாவில் அதன் முதல் கிளையைத் திறந்தது அந்த நிறுவனம். Paytm Payments Bank டிசம்பர் 2021 முதல் "திட்டமிடப்பட்ட கட்டண வங்கியாக" செயல்பட இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதியைப் பெற்றது, இது அதன் நிதிச் சேவை செயல்பாடுகளை விரிவுபடுத்த உதவியது.

Paytm தாய் நிறுவனமான One97 கம்யூனிகேஷன்ஸ் அதன் லிஸ்டிங்ஸ் பற்றிய சூழ்நிலையை விளக்கிய பின்னர், அதன் மோசமான ஷெட்யூலிங் காரணங்களின் பின்னணியில் RBI வங்கி இந்த நடவடிக்கையைத் தற்போது மேற்கொண்டு உள்ளது. இதன் அடிப்படையில் தற்போது வாடிக்கையாளர் சேர்க்கையில் மாற்றங்களை ரிசர்வ் வங்கி மேற்கொண்டுள்ளது.Paytm Payments Bank கடந்த 2021 டிசம்பரில் 926 மில்லியனுக்கும் அதிகமான UPI பரிவர்த்தனைகளை பெற்றதாகக் கூறியிருந்தது. இந்த மைல்கல்லை எட்டிய நாட்டின் முதல் வங்கி பேடிஎம் என்பது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement
Sponsored Links by Taboola