இந்தியாவில் கொரோனா காலங்களில் ஆன்லைன் மூலம் உணவுகள் வாங்குவது மற்றும் மளிகை பொருட்கள் வாங்குவது ஆகியவை மிகவும் அதிகரித்து வருகின்றன. இதனால் பெரிய நிறுவனங்களும் இந்தத் துறையில் தங்களுடைய முதலீடுகளை செலுத்த திட்டமிட்டு வருகின்றனர். அந்தவகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ரிலையன்ஸ் நிறுவனம் தன்ஷோ நிறுவனத்தில் முதலீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. இதன்மூலம் ரிலையன்ஸ் நிறுவனம் இந்த தொழிலும் சற்று அதிகமான தொகையை முதலீடு செய்யும் என்று கூறப்பட்டது. 


இந்நிலையில் பங்குச்சந்தைகளின் மூலம் தன்ஷோ நிறுவனம் அண்மையில் 250 மில்லியன் டாலர் வரை முதலீடுகளை ஈர்க்க திட்டமிட்டுருந்தது. அந்தத் திட்டத்தின்படி தற்போது அந்த நிறுவனம் பங்குச்சந்தைகள் மூலம் 250 மில்லியன் டாலர் முதலீட்டை பெற்றது. அதில் பெரும்பாலான பங்குகளை ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் சுமார் 200 மில்லியன் மதிப்புள்ள பங்குகளை வங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தன்ஷோ நிறுவனத்தின் பங்குகளில் 25.8 % பங்குகளை ரிலையன்ஸ் நிறுவனம் தன்வசப்படுத்தியுள்ளதாக தெரிகிறது. 




ஏற்கெனவே இந்தியாவில் மளிகை பொருட்களின் ஆன்லைன் விற்பனையில் ஃபிளிப்கார்ட் நிறுவனம் பெங்களூருவில் ஃபிளிப்கார்ட் கியூக் என்ற பெயரில் தொடங்கியது. அதைபோல் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் என்ற மளிகை பொருட்களின் டெலிவரியை தொடங்கியது. அத்துடன் ஸ்விக்கி ஜெனி என்ற பெயரில் பிற பொருட்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு டெலிவரி செய்யும் வசதியை தொடங்கியது. சோமேட்டோ நிறுவனம் கிரோஃபர்ஸ் என்ற ஆன்லைன் செயலியில் தன்னுடைய முதலீட்டை செய்தது. அதேபோல் பிக்பாஸ்கேட் நிறுவனத்தில் டாட்டா சன்ஸ் நிறுவனம் பெரும்பான்மையான பங்குகளை வாங்கியது. 


இப்படி அடுத்தடுத்து பல முன்னணி நிறுவனங்கள் இந்த ஆன்லைன் டெலிவரி தொழில்கள் தங்களுடைய முதலீட்டை செய்து வருகின்றனர். இதன்காரணமாக இந்த தொழிலில் போட்டி களம் மிகவும் அனல் பறக்க தொடங்கியுள்ளது. தன்ஷோ நிறுவனத்தை 2015ஆம் ஆண்டு பிஸ்வாஸ், அன்கூர் அகர்வால், தல்விர் சூரி மற்றும் முகுந்த் ஜா ஆகியோர் தொடங்கினர். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த தன்ஷோ நிறுவனம் பங்குச்சந்தைகள் மூலம் 40 மில்லியன் டாலர்களை ஈர்த்தது. இந்தச் சூழலில் இந்தாண்டு மிகப்பெரிய தொகையை இந்நிறுவனம் ஈட்டியுள்ளது அதனுடைய முன்னேற்றத்திற்கு பெரும் படியாக அமைந்துள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண


மேலும் படிக்க: பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் மாற்றமில்லை... 63 வது நாளாக ஒரே விலை!