நாடு முழுவதும் வங்கிகளுக்கு தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.


ரிசர்வ் வங்கியின் அறிவிப்பில், "நாடு முழுவதும் அனைத்து வங்கிகளும் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் செயல்படாது" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


வங்கிகள் ஒவ்வொரு மாதமும் நான்கு ஞாயிறு மற்றும் இரண்டு சனிக்கிழமைகளிலும் வழக்கம் போல மூடப்படும். இருப்பினும், வங்கி விடுமுறைகள் எல்லா மாநிலங்களாலும் கடைபிடிக்கப்படுவதில்லை. மேலும் இது ஒவ்வொரு மாநிலத்தின் வழக்கத்தின் படி மாறுபடலாம். 


ரிசர்வ் வங்கியின் விடுமுறை நாட்காட்டியின்படி, வார இறுதி நாட்களைத் தவிர, பண்டிகை விடுமுறைகள் சில உள்ளூர் அல்லது பிராந்திய கிளைகளுக்கு மட்டுமே. பொது விடுமுறைகள் மட்டுமே நாடு முழுவதும் உள்ள வங்கிகளால் அனுசரிக்கப்படுகின்றன. ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களின்படி, நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளும் இந்த நாட்களில் மூடப்படும். எனவே வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் அதற்கேற்ப தங்கள் பரிவர்த்தனைகளையும், சேவைகளையும் பெற திட்டமிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.


ரிசர்வ் வங்கி வெளியிட்ட விடுமுறை பட்டியல் பின்வருமாறு:


அக்டோபர் 24ம் தேதி 
தீபாவளி பண்டிகையையொட்டி நாடு முழுவதும் அனைத்து வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. சிக்கிம் மாநிலம், காங்டாக்கில் மட்டும் தீபாவளி அன்றும் வங்கிகள் இயங்கும்.


அக்டோபர் 25ம் தேதி
காங்டாக், மணிப்பூர் மாநிலம், இம்பால், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களில் உள்ள வங்கிகளுக்கு இன்று விடுமுறை தினமாகும். இன்று அனைத்து வங்கிகளும் மூடப்பட்டிருக்கும். பிற பிராந்திய அலுவலகங்களில் வங்கிகள் இன்று திறந்திருக்கும்.


அக்டோபர் 26
அகமதாபாத், பெலாபூர், பெங்களூரு, டேராடூன், காங்டாக், ஜம்மு, கான்பூர், லக்னோ, மும்பை, நாக்பூர், சிம்லா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய நகரங்களில் நாளை விடுமுறையாகும்.


அக்டோபர் 27
காங்டாக், இம்பால், கான்பூர், லக்னோ உள்ளிட்ட நகரங்களில் அக்டோபர் 27ம் தேதி வங்கிகள் முடப்பட்டுவிடும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


காந்திஜெயந்தி, ஆயுதபூஜை, விஜயதசமி தற்போது தீபாவளி என தொடர்ச்சியாக பொது விடுமுறைகள் நிரம்பிய மாதமாக அக்டோபர் திகழ்கிறது.  


நவம்பர் மாதத்தில் பொது விடுமுறை எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


பள்ளிகளுக்கு விடுமுறை


முன்னதாக, தமிழ்நாடு முழுவதும் 25ஆம் தேதி (செவ்வாய்கிழமை) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.


தமிழ்நாடு முழுவதும் 25ஆம் தேதி (செவ்வாய்கிழமை) பள்ளி கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அரசு ஊழியர்கள் தீபாவளிக்கு மறுநாள் வரையறுக்கப்பட்ட விடுமுறை ( Restricted Holiday) தினத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என்பதால் அரசு ஊழியர்களுக்கு என்று தனியாக விடுமுறை விடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுகுறித்து தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “ இவ்வாண்டு தீபாவளி பண்டிகை 24.10.2022 அன்று கொண்டாடும் பொருட்டு சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏதுவாக 25.10.2022 அன்று ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்துக்கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 19.11.2022 அன்று பணி நாளாக அனுசரிக்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.