நாட்டின் முன்னணி மல்டிபிளக்ஸ் நிறுவனங்களான பிவிஆர் - ஐநாக்ஸ் நிறுவனங்கள் ஒன்றாக இணைந்துள்ளன. பிவிஆர் லிமிடெட் - ஐநாக்ஸ் லிமிடெட் நிறுவனங்களின் இயக்குனர்கள் குழு கூட்டத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
பிவிஆர் தற்போது 73 நகரங்களில் உள்ள 181 சொத்துகளில் 871 திரையரங்குகளை நடத்தி வருகிறது. அதேபோல், ஐநாக்ஸ் தற்போது 72 நகரங்களில் உள்ள 160 சொத்துகளில் 675 திரையரங்குகளை நடத்தி வருகிறது. இரு நிறுவனங்களும் தற்போது இணைவதால் 109 நகரங்களில் உள்ள 341 சொத்துகளில்1,546 திரையரங்குகளை நடத்தும் மிகப்பெரிய திரைப்பட கண்காட்சி நிறுவனமாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்