திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் நரியன் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் இவரது மகன் கௌரி சங்கர் (35) . இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறுகுற்ற வழக்குகள் மண்ணச்சநல்லூர், ஸ்ரீரங்கம் ஆகிய காவல் நிலையங்களில் உள்ளன. பிரபல ரவுடி குணா சுந்தரபாண்டி இவரின் நெருங்கிய நண்பர் ஆவார்.  கௌரிசங்கர் மண்ணச்சநல்லூர் அருகே வெங்கங்குடி பகுதியில் உள்ள இவருக்கு சொந்தமான தேங்காய் நார் உரிக்கும் கம்பெனியில் வேலை பார்த்து கொண்டு இருந்தார் அப்போது மாலை ஆறு மணி அளவில் சமயபுரம் புதுத் தெருவைச் சேர்ந்த கார்த்திக் உள்ளிட்ட  7 பேர் கொண்ட கும்பல் கௌரி சங்கர் ஐ தொடர்பு கொண்டு பிறந்தநாள் விழா  ஆசிர்வாதம் வழங்க வேண்டும் என தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளனர்.   பிறந்த நாள் விழாவை கார்த்தி, சித்தார்தன், 7 பேர் கொண்ட கும்பல் தேங்காய்நார் தொழிற்சாலைக்கு சென்று கௌரிசங்கருடன் சேர்ந்து மது அருந்திவிட்டு ஆசிர்வாதம் வாங்குவது போல் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கௌரிசங்கரை சரமாரியாக வெட்டி கொலை செய்த பின்னர் வைத்திருந்த பூ மாலையை அவர் மீது போட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர்.


 




இதுகுறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்தில் கௌரி சங்கரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலை தொடர்பாக சமயபுரம் கார்த்தி , கிளியநல்லூர் சித்தார்த்தன், மகாளிகுடி கிராமத்தைச் சேர்ந்த  சந்திரன் உள்ளிட்டோரை பிடித்து மண்ணச்சநல்லூர் போலீஸார்  விசாரணை செய்து வருகின்றனர்.  மேலும் சம்பவ இடத்தில் காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார்,மற்றும் காவல் துனை கண்காணிப்பாளர் செந்தில்குமார், மண்ணச்சநல்லூர் ஆய்வாளர் ரமேஷ் நேரில்  சென்று விசாரித்து வருகின்றனார். இந்த கொலை செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், கொலை தொடர்பாக 7 பேரை சந்தேகத்திற்கிடமாக விசாரணை செய்து வருகிறோம் மேலும் கொலையாளிகளை பிடிப்பதற்காக ஜீயபுரம் டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் சோமரசம்பேட்டை மனச்சநல்லூர் சமயபுரம் ஆகிய மூன்று இன்ஸ்பெக்டர்கள் கொண்ட  3 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வருவதாக கூறினார்.


 




திருச்சி மாவட்டத்தில்  தொடர்ந்து கொலை, கொள்ளை, கட்டபஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடி குணா, சுந்தரபாண்டி அவர்களின் கூட்டாளி பிரவீன் ஆகியோரை மர்ம கும்பல் இதேபோன்று கொலை செய்தனர். இந்த மூன்று ரவுடிகளும் கொலைஅதே கும்பல் கொலை செய்து இருக்கலாம், முன்பகை காரணமாக புதிதாக ஒரு கும்பல் கொலை செய்து இருக்கலாம் என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தீவிர விசாரனையை மேற்க்கொண்டு வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.