SBI Fake Message Alert:


நாட்டின் பிரபல பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (State bank of india) தனது வாடிக்கையாளர்களின் மொபைல் எண்ணிற்கு வரும் மெசேஜ் போலியானது என்று எச்சரித்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களது தொடர்பு எண்ணிற்கு எஸ்.பி.ஐ. என்ற பெயரில் வரும் குறுஞ்செய்தியை நம்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளது.


எஸ். பி.ஐ. வங்கியின் வாடிக்கையாளர்களின் தொடர்பு எண்ணிற்கு எஸ்.பி.ஐ. யோனோ (SBI Yono) கணக்குடன் இணைப்பதற்கு பான் எண்ணை  ( permanent account number (PAN)) அப்டேட் செய்யுமாறு தகவல் வந்துள்ளது. ஸ்டேட் பேங் ஆஃப் இந்தியா பெயரில் வங்கியி பல வாடிக்கையாளார்களுக்கும் இப்படியான செய்தி சென்றுள்ளது தெரியவந்துள்ளது. 






இதற்கு எஸ்,.பி.ஐ. வங்கி நிர்வாகம், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வரும் மெசேஜ்களை நம்ப வேண்டாம். அதை நாங்கள் அனுப்பவில்லை. என்று விளக்கம் அளித்துள்ளது.


மத்திய அரசின் உண்மை நிலை கண்டறியும் பிரிவு இதுகுறித்து டிவீட் செய்துள்ளது. மேலும், இதுபோன்ற போலி மெசேஜ்களில் வரும் லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. வங்கி எண் அல்லது தனிப்பட்ட தகவல்களை போலி மெசேஜ்களை நம்பி பகிர வேண்டாம் என்று தெரிவித்துள்ளது. 


இது குறுத்து பி.ஐ,பி. வெளியிட்டுள்ள டிவிட்டரில், எஸ்.பி.ஐ. தனது வாடிக்கையாளர்களிடம் தனிப்பட்ட தகவல்களை மெசேஜ் மூலம் கேட்காது என்று குறிப்பிட்டுள்ளது. 


வங்கிகள் கே.ஓய்.சி. தகவல்களை இமெயில் மற்றும் மெசேஜ் மூலம் கேட்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


எஸ்.பி.ஐ.-இன் புதிய சேவை


 


1.எஸ்பிஐ வாட்ஸ்அப் வங்கியில் பதிவு செய்வது எப்படி


எஸ்பிஐ வாட்ஸ்அப் வங்கி சேவைகளைப் பயன்படுத்த, முதலில் உங்கள் கணக்கைப் பதிவு செய்து, அதற்கு எஸ்எம்எஸ் மூலம் உங்கள் ஒப்புதலை வாங்க வேண்டும். சேவைகளைப் பெற முயற்சிக்கும் பதிவு செய்யப்படாத வாடிக்கையாளர், முதலில் பதிவு செய்யும்படி வங்கியிலிருந்து அறிவுறுத்தல் வரும்.


“நீங்கள் எஸ்பிஐ வாட்ஸ்அப் வங்கி சேவையில் பதிவு செய்யவில்லை என்றால். இந்தச் சேவைகளைப் பயன்படுத்துவதற்குப்  பின்வரும் SMS WAREG இன்று டைப் செய்து அதனுடன் உங்களுடைய வங்கி கணக்கு எண்ணை  +917208933148 என்ற மொபைல் எண்ணுக்கு உங்கள் வங்கியில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து அனுப்பவும். 









 


2.எஸ்பிஐ வாட்ஸ்அப் வங்கி சேவைகளை எவ்வாறு பெறுவது


 நீங்கள் பதிவு செய்தவுடன், +919022690226 என்ற எண்ணில் 'Hi' SBI என டைப் செய்யவும் அல்லது வாட்ஸ்அப்பில் நீங்கள் பெற்ற மெசேஜுக்கு "அன்புள்ள வாடிக்கையாளரே, நீங்கள் SBI வாட்ஸ்அப் பேங்கிங் சேவைகளில் வெற்றிகரமாகப் பதிவு செய்துள்ளீர்கள்" என்று உங்கள் பதிவு செய்த எண்ணிற்கு மெசேஜ் வரும்.


3: உங்கள் செய்தியை அனுப்பியதும், நீங்கள் இந்த பதிலைப் பெறுவீர்கள்:


அன்பார்ந்த வாடிக்கையாளரே,


SBI Whatsapp வங்கி சேவைகளுக்கு வரவேற்கிறோம்!


கீழே உள்ள விருப்பங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.


1. கணக்கு இருப்பு
2. சிறு அறிக்கை
3. வாட்ஸ்அப் வங்கியிலிருந்து பதிவு நீக்கம்
தொடங்குவதற்கு உங்கள் விருப்பத்தை  பதிவு செய்யலாம்.


4: உங்கள் கணக்கு இருப்பைச் சரிபார்க்க அல்லது உங்கள் கடைசி ஐந்து பரிவர்த்தனைகளின் சிறு அறிக்கையைப் பெற 1 அல்லது 2 விருப்பங்களிலிருந்து தேர்வு செய்யவும். எஸ்பிஐ வாட்ஸ்அப் பேங்கிங்கில் இருந்து பதிவு நீக்கம் செய்ய விரும்பினால், ஆப்ஷன் 3ஐயும் தேர்வு செய்யலாம்.


5: உங்கள் கணக்கு இருப்பு அல்லது மினி அறிக்கை உங்கள் விருப்பப்படி காட்டப்படும். உங்களுக்கு கேள்விகள் ஏதேனும் இருந்தால் தட்டச்சு செய்யலாம்.