Petrol Diesel Price Today, March 21: சென்னையில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல்,டீசலின் இன்றைய விலை நிலவரத்தை காணலாம்.
எரிபொருள் தேவை
தமிழ்நாட்டில் வாகனங்கள் வாங்குபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் தேவையும் அதிகரித்து வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை கருத்தில் கொண்டு எரிபொருட்கள் விலையானது நிர்ணயிக்கப்பட்டு வந்தது. பெட்ரோல், டீசல் விலையை தினசரி மாற்றி அமைக்கலாம் என்ற நடைமுறை கொண்டு வரப்பட்டது. இதனால் பெட்ரோல், டீசல் விலை எகிறத் தொடங்கியது.
இந்தியாவை பொறுத்தவரை கிட்டதட்ட 80 சதவிகித வாகனங்கள் பெட்ரோல், டீசலில் தான் இயங்கி வருகிறது. இது அன்றாட மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் அனைத்து தரப்பு மக்களாலும் எரிபொருள் விலையானது தொடர்ந்து உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் அன்றாட அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும்.
மாற்றம் கண்ட பெட்ரோல், டீசல் விலை
கொரோனா பாதிப்பால் மக்கள் மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்தித்தனர். இதனை கருத்தில் கொண்டு 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5, டீசல் விலை ரூ.10 என குறைத்தது. இதனைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு மே மாதம் மீண்டும் விலை குறைப்பானது நடந்தது. கலால் வரி குறைப்பால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8, டீசல் விலை ரூ.6 குறைந்தது. ஆனாலும் தொடர்ந்து பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100க்கு மேல் விற்கப்பட்டது. டீசலும் ரூ.94 ஆக விற்பனை செய்யப்பட்டது. இது வாகன ஓட்டிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
கிட்டதட்ட 663 நாட்களுக்கு பிறகு கடந்த மார்ச் 14 ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலையானது மாற்றம் கண்டது. இரண்டுமே லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டது. அதிலிருந்து எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் இன்று (மார்ச் 21) பெட்ரோல் லிட்டருக்கு 100.75 ஆகவும், டீசல் ரூ.92.34 ஆகவும் விற்பனையாகிறது.
மேலும் படிக்க: 31st March Deadline: மார்ச் 31 தேதியுடன் நடப்பு நிதியாண்டு ஓவர் - அதற்குள் முடிக்க வேண்டிய 5 முக்கிய நிதிப்பணிகள்