நாள்: 21.03.2024 - வியாழன்கிழமை
நல்ல நேரம்:
காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை
இராகு:
பகல் 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை
குளிகை:
காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை
எமகண்டம்:
காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை
சூலம் - தெற்கு
மேஷம்
நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும். திறமைக்கேற்ப புதிய வேலைவாய்ப்பு சாதகமாகும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். வியாபாரத்தில் ஆதரவான சூழல் உண்டாகும். அரசு தொடர்பான உதவிகள் சாதகமாகும். உத்தியோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். நலம் நிறைந்த நாள்.
ரிஷபம்
பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வியாபாரத்தில் பொறுமையை கையாளவும். உத்தியோகத்தில் மறைமுக வாய்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். புகழ் நிறைந்த நாள்.
மிதுனம்
மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். குடும்ப உறுப்பினர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபாரத்தில் தனவரவுகள் தேவைக்கேற்ப இருக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வழக்குகளில் சில திடீர் திருப்பங்கள் உண்டாகும். உதவி கிடைக்கும் நாள்.
கடகம்
கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். அலுவலகப் பணிகளில் ரகசியம் காப்பது நல்லது. மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் சிந்தித்துச் செயல்படவும். எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். வாடிக்கையாளர்களிடத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். ஜெயம் நிறைந்த நாள்.
சிம்மம்
நினைத்த பணிகளில் அலைச்சல் உண்டாகும். குழந்தைகளிடத்தில் பொறுமையை கையாளவும். எதிர்மறையான சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். வாகன பழுதுகளை சரிசெய்வீர்கள். சக ஊழியர்களால் அலைச்சல் ஏற்படும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பதற்கான மனப்பக்குவம் உண்டாகும். உடன் இருப்பவர்களால் புதிய கண்ணோட்டங்கள் பிறக்கும். ஆர்வம் நிறைந்த நாள்.
கன்னி
பெற்றோர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கடினமான சூழ்நிலைகளை வெற்றி கொள்வீர்கள். வியாபாரத்தில் லாபம் ஏற்படும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் மதிப்பு மேம்படும். மனதில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். நிதானம் வேண்டிய நாள்.
துலாம்
பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். அலுவலகத்தில் மதிப்பு மேம்படும். முதலீடு தொடர்பான விஷயங்களில் சந்தை நிலவரங்களை அறிந்து முடிவெடுக்கவும். தனிப்பட்ட திறமைகளை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்பாடுகளால் விரயம் ஏற்படும். நட்பு நிறைந்த நாள்.
விருச்சிகம்:
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். அணுகுமுறையில் மாற்றம் ஏற்படும். கால்நடை தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். உறவினர்கள் பற்றிய புரிதல் மேம்படும். வியாபாரத்தில் இடமாற்றம் தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் ஏற்படும். சில அனுபவங்களால் புதிய அத்தியாயம் பிறக்கும். அனுபவம் மேம்படும் நாள்.
தனுசு
விமர்சன பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் அலைச்சல் உண்டாகும். சக ஊழியர்களிடத்தில் கவனத்துடன் செயல்படவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடியான சூழல் ஏற்படும். அனுபவ அறிவினால் சில மாற்றங்கள் உண்டாகும். மாற்றம் நிறைந்த நாள்.
மகரம்
கடினமான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதரர்களின் வழியில் அனுகூலம் ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாகும். வாழ்க்கைத் துணைவரின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். அலுவலகத்தில் நிர்வாக திறமை வெளிப்படும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் ஏற்படும். தனம் நிறைந்த நாள்.
கும்பம்
உறவினர்களிடத்தில் மதிப்பு மேம்படும். அரசு வழியில் அனுகூலம் உண்டாகும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்பு உண்டாகும். தனவரவுகள் சாதகமாக இருக்கும். திட்டமிட்ட காரியங்கள் கைகூடிவரும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். நன்மை நிறைந்த நாள்.
மீனம்
மனதளவில் புதிய சிந்தனை ஏற்படும். குழந்தைகளின் எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு மேம்படும். உத்தியோகத்தில் அனுசரித்துச் செல்லவும். நினைத்த பணிகளை திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றமான தருணங்கள் உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.