Petrol Diesel Price Today, March 20: சென்னையில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல்,டீசலின் இன்றைய விலை நிலவரத்தை காணலாம். 


பெட்ரோல்,டீசல் விலை:


அத்தியவாசியப் பொருட்களின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவற்றில் ஒன்று தான் பெட்ரோல், டீசல் விலை. நாளுக்கு நாள் வாகனங்களின் விற்பனை எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில் பெட்ரோல், டீசலின் தேவையும் அதிகரிக்கிறது. அதேசமயம் மின்சார வாகனங்களின் பயன்பாடும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாப்பதை பொருட்டு மத்திய அரசும்  மின்சார வாகனங்களை ஊக்குவிக்க பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. 


இப்படியான நிலையில் பெட்ரோல், டீசல் விலை கிட்டதட்ட மாற்றமில்லாமல் ஒன்றரை ஆண்டுகளை கடந்த நிலையில் கடந்த மார்ச் 15 ஆம் தேதி மாற்றம் கண்டது. அதாவது 660 நாட்களுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டது. இந்த மாற்றமானது தொடர்ந்து ஒரே விலையில் தான் இருந்து வருகிறது. இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100.75 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.34-ஆகவும் தொடர்கிறது. எரிபொருட்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தான் நிர்ணயிக்கிறது என்றாலும் தேர்தல் நேரத்தில் மாற்றம் கண்டுள்ளது. இது மக்களிடையே ஒருபுறம் மகிழ்ச்சியையும், மறுபுறம் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.