நாள்: 20.03.2024 - புதன்கிழமை


நல்ல நேரம்:


காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை


மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை


இராகு:


நண்பகல் 12.00 மணி முதல் பகல் 1.30 மணி வரை


குளிகை:


காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை


எமகண்டம்:


காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை


சூலம் - வடக்கு


மேஷம்


குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். முதலீடு சார்ந்த எண்ணங்கள் மேம்படும். பெருந்தன்மையான செயல்பாடுகளால் மதிப்பு மேம்படும். கால்நடை தொடர்பான விஷயங்களில் ஆதாயம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். ஆர்வம் நிறைந்த நாள்.


ரிஷபம்


வியாபாரத்தில் சில நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். சோர்வுகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் மேம்படும். நண்பர்களிடத்தில் பொறுமை வேண்டும். தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் அனுபவம் மேம்படும். நட்பு நிறைந்த நாள்.


மிதுனம்


வரவுக்கு ஏற்ப விரயங்கள் ஏற்படும். பேச்சுத் திறமைகளால் புதிய வாய்ப்புகளை உருவாக்குவீர்கள். வெளியூரிலிருந்து சாதகமான செய்திகள் கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். எதிர்காலம் தொடர்பான முதலீடுகள் மேம்படும். பொன், பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.


கடகம்


எதிர்பாராத சில உதவிகளால் மாற்றம் ஏற்படும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். விருப்பமான சில பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய விஷயங்களை திட்டமிட்டு செயல்படுத்துவது நல்லது. கவனம் வேண்டிய நாள்.


சிம்மம்


கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்களை தவிர்க்கவும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். வழக்கு தொடர்பான விஷயங்களில் திருப்பங்கள் உண்டாகும். நண்பர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். நேரம் தவறி உணவு உட்கொள்வதை தவிர்க்கவும். வர்த்தகம் சார்ந்த முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். மற்றவர்களிடத்தில் சுமூகமாக பழகுவது நல்லது. நலம் நிறைந்த நாள்.


கன்னி


மனதில் சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். எதிர்பார்த்த சில தனவரவுகள் சாதகமாகும். இழுபறியான பணிகளை எளிதில் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் லாபகரமான சூழல் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். ஜெயம் நிறைந்த நாள்.


துலாம்


உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனை அதிகரிக்கும். சமூக நிகழ்வுகளால் புதிய கண்ணோட்டம் பிறக்கும். உத்தியோகத்தில் சில நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். பரிவு வேண்டிய நாள்.


விருச்சிகம்:


செலவுகளை சமாளிப்பதற்கான சூழல் உண்டாகும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். உயர் பொறுப்புகளின் மூலம் மதிப்பு மேம்படும். தந்தையின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சில அனுபவங்களின் மூலம் புதிய பாதைகள் புலப்படும். பாகப்பிரிவினை தொடர்பான பிரச்சனைகள் குறையும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். போட்டிகள் நிறைந்த நாள்.


தனுசு


பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். சமூகப் பணிகளில் அலைச்சல் ஏற்படும். எதிலும் முன்கோபம் இன்றி செயல்படவும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. விதண்டாவாத பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். வாடிக்கையாளர்கள் பற்றிய புரிதல் மேம்படும். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். அனுபவம் மேம்படும் நாள்.


மகரம்


எதிர்பாராத சில மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் விலகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். புதிய விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பேச்சு வன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். சுகம் நிறைந்த நாள்.


கும்பம்


தந்திரமாக செயல்பட்டு சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். கடன் தொடர்பான விஷயங்களில் பொறுமை வேண்டும். குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். சில பிரச்சனைகளுக்கு முடிவுகள் பிறக்கும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். நெருக்கமானவர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். சிக்கல் விலகும் நாள்.


மீனம்


உயர் கல்வியில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். வருமான உயர்வு குறித்த எண்ணங்கள் மேம்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பிறமொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மறதி குறையும் நாள்.