வருமானத்தின் முதல் செலவு சேமிப்பாக இருப்பது நிதி சார்ந்த பாதுகாப்புகளை வழங்கும் என்று சொல்லப்படுகிறது. மாதந்தோறும் செலவுகள் இருப்பதை போலவே, கொஞ்சம் தொகையை சேமிப்பது சிறந்தது.
அவசரகால நிதி தேவைகளை சமாளிக்க சிறுசேமிப்பு திட்டங்கள் பயனுள்ளதாக இருக்கும். அதற்கு ’Fixed deposits’ சிறந்த தேர்வாக இருக்கும் என்பது நிபுணர்களின் தேர்வாக இருக்கிறது. ஃபிக்சட் டெபாசிட் அல்லது நிலையான வைப்பு நிதி என்ற அழைக்கப்படுகிறது. இந்த முறையிலான சேமிப்பு பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது. நிலையான வைப்பு நிதி பல நன்மைகளை கொண்டிருக்கிறது. நீண்ட காலத்துக்கு முதலீடு செய்து அது முதிர்ச்சி அடையும்போது முதலீட்டாளர்கள் வட்டி மற்றும் அசல் தொகை இரண்டையும் பெறுவார்கள். ரூ.5 லட்சம் வரையிலான வைப்பு நிதிகளுக்கு இந்திய வைப்பு காப்பீட்டு உத்தரவாதக் கழக்கத்தின் காப்பீடும் வழங்கப்படுகிறது. எந்தவித ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்யும் திட்டம் இருப்பவர்களுக்கு நிலையான வைப்பு நிதி சிறந்த தேர்வாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
நிலையான வைப்பு நிதி பாதுகாப்பானது ஏன்?
வைப்பு நிதி திட்டம் அதிக ரிஸ்க் இல்லாதது. பங்குச்சந்தை முதலீடுகள், மியூட்சுவல் ஃபன்ட் உள்ளிட்ட முதலீட்டு திட்டங்கள் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப மாறுப்பட கூடியது. அதற்கேற்றவாறு ரிட்டன்ஸ் கிடைக்கும். வங்கிகள், அஞ்சல் துறை ஆகியவற்றைல் வைப்பு நிதி திட்டத்தை தொடங்க முடியும். போலவே, ரூ.5 லட்சம் வரை வைப்பு நிதி திட்டங்களுக்கு ‘Deposit Insurance and Credit Guarantee Corporation (DICGC)’ காப்பீடு உண்டு. இது உங்களது நிதி முதலீட்டிற்கு பாதுகாப்பு அளிக்கிறது. முதலீடு தொடர்பான ரிஸ்க் ஏதும் இருக்க வேண்டாம் என்றால் வைப்பு நிதி திட்டம் பொறுத்தமானது.
ரிட்டன்ஸ்:
நிலையான வைப்பு நிதி திட்டங்களின் ரிட்டன்ஸ் குறித்து தோராயமான கணிப்புகள் கிடைக்கும். இதில் நீங்கள் முதலீடு செய்யும் தொகை, அதற்கான வட்டி விகிதம் ஆகியவற்றை வைத்து குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு, திட்டம் முதிர்ச்சியடைந்த பிறகு எவ்வளவு தொகை கிடைக்கும் என்பதை கணக்கிடலாம். இது பங்குச்சந்தை முதலீடு ஆகிய திட்டங்களில் கிடைக்கும் அளவிற்கு ரிட்டன்ஸ் கிடைக்காது. ஆனாலும், பாதுகாப்பான அவசரகால நிதி தேவைகளுக்கு இது உதவியாக இருக்கும்.
வங்கி விவரம் | வட்டி விகிதம் (1-2 ஆண்டு கால திட்டம்) |
இந்தஸ்லேண்ட் வங்கி |
7.99% |
Yes Bank | 7.75% |
TNSC Bank |
7.75% |
IDFC Bank | 7.75% |
கரூர் வைசியா வங்கி | 7.50% |
வங்கிகளில் வைப்பு நிதி திட்டங்களை தொடங்கும்போது, குறிப்பிட்ட திட்ட காலத்திற்கு முன்னதாகவே எடுக்க வேண்டிய அவசியம் இருந்தால் தொகையை கட்டணம் செலுத்தி எடுக்கலாம். ‘Easy liquidity’ என்பது வைப்பு நிதி திட்டம் நல்லது.
மேலும் வாசிக்க..