Savings Account Rules: வங்கி சேமிப்பு கணக்குகள் எவ்வாறு கண்காணிக்கப்பட்டு, வரிகள் விதிக்கப்படுகின்றன என்பது கீழே விவரிக்கப்பட்டுள்ளது.


வங்கி சேமிப்பு கணக்கிற்கான விதிகள்:


தனிநபர் ஊதியம் ஒரு குறிப்பிட்ட வரம்பை மீறினால், நீங்கள் வரி செலுத்த வேண்டும். வரி செலுத்த தவறினால் வருமான வரித்துறை உங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். அதேநேரம்,  உங்கள் வருமானம் மட்டுமே வருமான வரித்துறையின் கண்காணிப்பில் நீட்ப்பதில்லை. உங்கள் வங்கி கணக்குகளின் பரிவர்த்தனைகளும் அதன் கண்காணிப்பில் உள்ளன. உங்கள் சேமிப்புக் கணக்கிலிருந்து ஒவ்வொரு நாளும் மற்றும் ஒவ்வொரு வருடமும் எவ்வளவு டெபாசிட் செய்கிறீர்கள் என்பதையும் வருமான வரித்துறை கண்காணிக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.


சேமிப்பு கணக்கிற்கான டெபாசிட் வரம்பு:


ரிசர்வ் வங்கி சேமிப்பு கணக்குகளுக்கான டெபாசிட் தொகைக்கு வரம்பு விதித்துள்ளது. யாருடைய கண்காணிப்புமின்றி ஓராண்டிற்கு ரூ.10 லட்சத்தை உங்கள் சேமிப்புக் கணக்கில் நீங்கள் டெபாசிட் செய்யலாம். ஆனால் இந்த தொகையை நீங்கள் தாண்டியவுடன், வங்கி உடனடியாக வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்கும். அதன்படி,  நீங்கள் துறையிலிருந்து ஒரு நோட்டீஸை பெறலாம். நீங்கள் அதற்கு வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை ஆனால் அந்த பணத்திற்கான ஆதாரம் உங்களிடம் கேட்கப்படும்.


வருவாய் ஆதாரத்தை சமர்பிக்காவிட்டால் என்ன நடக்கும்?


பணம் எப்படி வந்தது என்பதற்கான வருவாய் ஆதாரத்தை கணக்கு வைத்திருப்பவரால் சமர்பிக்க முடியாவிட்டால், அந்தத் தொகைக்கு 60 சதவிகித வரி, 25 சதவிகித கூடுதல் கட்டணம் மற்றும் 4 சதவிகித செஸ் ஆகியவற்றை விதித்து, கணக்குதாரரிடம் இருந்து வருமான வரித் துறை பணத்தை வசூலிக்க முடியும். வருமான வரித்துறை ஒரு வருடத்திற்கு மட்டுமின்றி ஒரு நாளின் பரிவர்த்தனைக்கும் ஒரு வரம்பை நிர்ணயித்துள்ளது என்பதை அறிந்துகொள்ளுங்கள். 


வங்கிக் கணக்கில் இருந்து ஒரு நாளில் ரூ.2 லட்சத்துக்கு மேல் பணப் பரிவர்த்தனை செய்ய முடியாது. பணப் பரிவர்த்தனை என்பது கணக்கிலிருந்து பணத்தை எடுப்பது மட்டுமல்ல. பணத்தை எடுப்பது, கணக்கிலிருந்து வேறு கணக்கிற்கு மாற்றுவது அல்லது ஒருவருக்கு பணம் செலுத்துவது ஆகியவை இதில் அடங்கும். எனவே, எந்தவொரு வங்கியின் தினசரி ரொக்கப் பரிவர்த்தனை வரம்பு ரூ.2 லட்சத்திற்கும் குறைவாகவே வைக்கப்பட்டுள்ளது.


சுருக்கமாக பண வைப்பு தொடர்பான விதிகள்



  • ரூ.50,000 வரை வங்கியில் டெபாசிட் செய்தால் பான் கார்டு தேவையில்லை

  • ரூ.50,000க்கு மேல் டெபாசிட் செய்தால் பான் கார்ட் சமர்பிக்க வேண்டும்.

  • ஒரு நாளில் உங்கள் சேமிப்புக் கணக்கில் ரூ.2 லட்சம் அல்லது அதற்கு மேல் டெபாசிட் செய்யப்பட்டால், வருமான வரிச் சட்டத்தின் 269ST பிரிவின் கீழ் 100 சதவிக்தம் அபராதம் விதிக்கப்படும்.

  • ஒரு வருடத்தில் உங்கள் சேமிப்புக் கணக்கில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.