UAN Recovery: UAN எனப்படும் யுனிவர்சல் அக்கவுண்ட் எண்ணைமீட்பதற்கான, படிப்படியான வழிமுறைகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.
UAN-ஐ எவ்வாறு மீட்டெடுப்பது?
EPFO உறுப்பினர்களுக்கு UAN (யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர்) என்பது மிகவும் முக்கியமானது மற்றும் அத்தியாவசியமானது. நீங்கள் EPFO இல் உறுப்பினராக இருந்தால், UAN மற்றும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றி நன்கு அறிவீர்கள். உங்கள் EPFO கணக்கின் UAN உங்களுக்குத் தெரியாவிட்டால், உங்களுக்கு எவ்வளவு முக்கியமான வேலை இருந்தாலும் உங்கள் EPFO கணக்கை அணுக முடியாது. அந்த எண் இருந்தால் மட்டுமே, EPFO கணக்கில் இருந்து முன்பனம் பெறுவது மட்டும் அதில் ஏதேனும் தவறுகள் இருந்தால், அதனை திருத்துவது போன்ற அனைத்து பணிகளையுமே மேற்கொள்ள முடியும்.
UAN எண் இல்லாமல் முக்கியமான வேலைகள் தடைபடலாம்..!
UAN என்பது 12 இலக்க எண், இது ஒவ்வொரு EPFO உறுப்பினருக்கும் மிகவும் முக்கியமானது. உங்கள் EPFO கணக்கு தொடர்பான சில அவசர வேலைகள் உங்களுக்கு திடீரென இருந்தால், உங்கள் UAN உங்களுக்குத் தெரியாவிட்டால், நீங்கள் எந்த வேலையும் செய்ய முடியாது. ஆனால் UAN ஐ கண்டுபிடிக்க மிகவும் எளிதான செயல்முறை நடைமுறையில் உள்ளது. அதனை பயன்படுத்தி, உங்கள் UAN எண்ணை நீங்கள் மறந்துவிட்டாலும் கூட, உங்கள் UAN எண்ணை எளிதாக மீட்டெடுக்கலாம். UAN எண்ணை மீட்டெடுப்பதற்கான முழுமையான செயல்முறை கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.
UAN எண்ணை கண்டுபிடிக்கும் வழிமுறை:
- https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface என்ற இணைய முகவரி வாயிலாக முதலில் நீங்கள் UAN இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்
- இப்போது நீங்கள் வலது புறத்தில் தோன்றும் முக்கியமான இணைப்புகளுக்குச் சென்று, உங்கள் UAN ஐத் தெரிந்து கொள்ளுங்கள் என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
- இப்போது நீங்கள் பதிவுசெய்த மொபைல் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு OTP வேண்டும் என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
- தொடர்ந்து உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP வரும், அந்த OTP மற்றும் கீழே தெர்யும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்ட பிறகு, OTP சரிபார் என்பதைக் கிளிக் செய்யவும்.
- இப்போது உங்கள் முழுப்பெயர், பிறந்த தேதி, ஆதார் எண் அல்லது பான் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு ஷோ மை யுஏஎன் என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்
- ஷோ மை யுஏஎன் என்பதைக் கிளிக் செய்தவுடன், உங்கள் யுஏஎன் எண் உங்கள் திரையில் தோன்றும்
- இப்போது நீங்கள் உங்கள் UAN ஐ இங்கிருந்து நகலெடுத்து அதை எங்காவது சேமித்து வைத்துக் கொள்ளலாம், இதனால் தேவைப்பட்டால் பின்னர் எந்த பிரச்சனையும் சந்திக்க வேண்டியதில்லை.