Ups Vs Nps Pension Scheme: ஒருங்கிணைந்த மற்றும் தேசிய  ஓய்வூதிய திட்டங்களில், எது ஊழியர்களுக்கு அதிக பலன் தரும் என்பது கீழே விவரிக்கப்பட்டுள்ளது.


யுபிஎஸ் மற்றும் என்பிஎஸ்:


மத்திய அரசு பணியாளர்கள் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (என்பிஎஸ்) தொடர்ந்து இருக்க விரும்புகிறீர்களா அல்லது புதிய உத்தரவாத ஓய்வூதியத் திட்டமான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (யுபிஎஸ்) தேர்வு செய்ய விரும்புகிறீர்களா? யுபிஎஸ் மூலம் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவார்கள்.  அவர்களுக்கு என்பிஎஸ்ஸில் இல்லாத உறுதியான ஓய்வூதியம் புதிய திட்டத்தின் மூலம் கிடைக்கும். ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வரும். தற்போது NPS உடன் இணைக்கப்பட்டுள்ள ஊழியர்களும் UPSக்கு மாறலாம்.


ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்:


ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஓய்வு பெறுவதற்கு 12 மாதங்கள் வரையிலான சராசரி அடிப்படைச் சம்பளம் மற்றும் DA ஆகியவை உறுதிசெய்யப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும். ஆனால் இதற்கு ஊழியர் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் தொடர்ச்சியான சேவையைப் பெற்றிருக்க வேண்டும். ஒருங்கிணைக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள பணியாளர்கள் தங்கள் அடிப்படை ஊதியம் மற்றும் டிஏவில் 10 சதவீதத்தை யுபிஎஸ்ஸில் உள்ள ஓய்வூதிய நிதிக்கு அளிக்க வேண்டும். இருப்பினும், அரசு ஓய்வூதிய நிதிக்கு 18.5 சதவிகிதம் பங்களிக்கும், NPS க்கு 14 சதவிகிதம்.


யுபிஎஸ் Vs என்பிஎஸ்: எதில் அதிக ஓய்வூதியம் கிடைக்கும்?


அடுத்த நிதியாண்டில் யுபிஎஸ் திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் UPS அல்லது NPS இன் எந்த ஓய்வூதியத் திட்டம் மத்திய ஊழியர்களுக்கு ஓய்வுக்குப் பிறகு அதிக ஓய்வூதியத்தை வழங்கும் என்பது பரவலான கேள்வி ஆக உள்ளது. ஒருவர் 25 வயதில் அரசு வேலையைத் தொடங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருடைய ஆரம்ப அடிப்படை சம்பளம் மாதம் ரூ. 50,000, அவர் 35 வருட சேவைக்குப் பிறகு ஓய்வு பெறும்போது, ​​UPS மற்றும் NPS இன் கீழ் ஓய்வூதியம் மற்றும் மொத்த ஓய்வூதிய பலன்களில் பெரும் வித்தியாசம் இருக்கும். UPS-ன் கீழ் ஓய்வு பெறும்போது, ​​ஒரு ஊழியர் மொத்த ஓய்வூதியத் தொகையாக ரூ. 4.26 கோடியை வைத்திருப்பார். அடுத்த மாதம் ரூ.2.13 லட்சம் ஓய்வூதியத்தைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவே, ஒரு ஊழியர் NPSஐத் தேர்வுசெய்தால், அவர் 3.59 கோடி ரூபாய் ஓய்வூதியத்தைப் பெறுவார் மற்றும் ஒவ்வொரு மாதமும் சுமார் 1.79 லட்சம் ரூபாய் ஓய்வூதியத்தை மட்டுமே பெறுவார்.


ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்களின் ஓய்வூதிய நிதிக்கு 18.5 சதவிகிதம் பங்களிக்கிறது. ஆனால்,  இந்த பங்களிப்பு NPS இல் 14 சதவிகிதம் மட்டுமே. எனவே, ஊழியர்களின் பென்ஷன் கார்பஸில் பெரிய வித்தியாசம் உள்ளது. ஊழியர்கள் NPS உடன் இருக்க வேண்டுமா அல்லது உறுதியான ஓய்வூதியத்திற்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வு செய்ய வேண்டுமா என்பது குறித்து, வேல்யூ ரிசர்ச்சின் CEO, திரேந்திர குமார், Moneycontrol அறிக்கையில் மத்திய ஊழியர்கள் பங்குச் சந்தை வருமானத்திற்காக ஓய்வு பெறும் வரை NPS உடன் இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார்.