உலகளாவிய வர்த்தகர்கள் அடிவாங்கி வரும் நிலையிலும் இந்திய பங்கு சந்தை முன்னேற்றத்தை சந்தித்து வருகிறது. இன்று காலை 300 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.


இந்திய பங்குச்சந்தை


உலக அளவில் பங்குச் சந்தைகள் நஷ்டத்தில் சென்றுகொண்டிருக்கும் நிலையில், வங்கி, நிதி மற்றும் உலோகப் பங்குகளின் லாபம் மும்பை பங்குச்சந்தையில் ஏற்றத்தை கொடுத்துள்ளது. இன்று காலை ஆரம்ப வர்த்தகத்தில் பிஎஸ்இ ஈக்விட்டி பெஞ்ச்மார்க் சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. NSE நிஃப்டி 17700 புள்ளிகளை நெருங்கியது. ஆரம்ப வர்த்தகத்தில் 30-பங்குகள் கொண்ட பிஎஸ்இ சென்செக்ஸ் 305.74 புள்ளிகள் உயர்ந்து 59391.17 ஆக இருந்தது. இதேபோல், பரந்த என்எஸ்இ நிஃப்டி 85.05 புள்ளிகள் முன்னேறி 17690 ஆக இருந்தது.



எந்தந்த பங்குகள் லாபம்


சென்செக்ஸ்-இல், டாடா ஸ்டீல், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, இண்டஸ்இண்ட் வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், டைட்டன், பஜாஜ் ஃபின்சர்வ், பார்தி ஏர்டெல் மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவை முன்னணியில் இருந்தன. HCL டெக்னாலஜிஸ் மட்டுமே இவற்றில் பின்தங்கி இருந்தது.


தொடர்புடைய செய்திகள்: Liger Movie Review: மனோகரா... எம்.குமரன் S/O மகாலட்சுமி... அப்டேட் வெர்சனா லைகர்? படம் முடிந்ததும் முதல் விமர்சனம்!


நேற்றைய முடிவு நிலவரம்


ஆசியாவில், சியோல், டோக்கியோ மற்றும் ஷாங்காய் சந்தைகள் இடைக்கால ஒப்பந்தங்களில் லாபம் கண்டன. வால் ஸ்ட்ரீட் பங்குகள் நேற்று (புதன்கிழமை) உயர்வுடன் முடிவடைந்தது. பிஎஸ்இ பெஞ்ச்மார்க் புதன்கிழமை 54.13 புள்ளிகள் அதாவது, 0.09 சதவீதம் உயர்ந்து 59085.43 இல் நிலைத்தது. நிஃப்டி 27.45 புள்ளிகள் (0.16 சதவீதம்) உயர்ந்து 17604.95 ஆக இருந்தது.



சர்வதேச ஒப்பீடு


இதனிடையே, தொடக்க வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 6 காசுகள் அதிகரித்து 79.80 ஆக இருந்தது. சர்வதேச எண்ணெய் அளவுகோலான பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 0.45 சதவீதம் உயர்ந்து 101.68 அமெரிக்க டாலராக இருந்தது. நேற்று வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) ரூ. 23.19 கோடி பரிமாற்ற தரவுகளின்படி, "உலகளாவிய பங்குகள் குறைந்து வந்தாலும், இந்திய சந்தையின் வளர்ச்சிக்கு முக்கியமாக இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, பொருளாதாரத்தின் வலுவான வளர்ச்சி. இரண்டு, டாலரின் மதிப்பு உயர்ந்தாலும் இந்தியாவில் நிலையான அந்நிய முதலீடு உள்ளது" ,என்று ஜியோஜித் ஃபைனான்சியல் சர்வீசஸில் மூலோபாய நிபுணர் வி.கே.விஜயகுமார் கூறினார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.