இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக நாம் தனியாக ஒரு முதலீடு செய்ய வேண்டும் என்பது அத்தியாவசியம். கல்விக்கென்ற ஒரு பெரிய தொகையை சேர்த்துவைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பிறகு அவர்களின் திருமணம், எதிர்காலம் என அடுத்தடுத்து பலவற்றிற்கும் சேமிப்பு மிகவும் அவசியம். இது எப்படி சாத்தியம் என்று புரியாத பலருக்கு ஒரு புதிய திட்டத்தை குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவே அறிமுகம் செய்துள்ளனர் பாரத ஸ்டேட் வங்கி .


தனது வாடிக்கையாளர்கள் அவர்களின் குழந்தைகளின் எதிர்காலத்திற்கான நிதி சக்தியை அதிகரித்து கொள்ள முடியும். “எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் சாம்ப் இன்சூரன்ஸ்” மற்றும் “எஸ்பிஐ லைஃப் – ஸ்மார்ட் ஸ்காலர்” எனும் இரண்டு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டங்களை கொண்டு உங்கள் குழந்தைகளின் கனவுகளை நிஜமாக்க முடியும். மேலும் இந்த திட்டம் அவர்களின் 18 வயதிற்கு மேல் தேவைப்படும் எதிர்கால கல்வியின் தேவைகளையும் பாதுகாக்க முடியும். அவர்களின் கல்வி எந்த ஒரு தடையும் இல்லாமல் பாதுகாப்பாக இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமில்லை.


எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் சாம்ப் இன்சூரன்ஸ்:

இது ஒரு பாரம்பரியமான குழந்தை காப்பீடு திட்டமாகும். இதன் மூலம் பாலிசிதாரரின் குழந்தையின் கல்வி தேவைகளை பாதுகாக்க முடியும். இந்த திட்டம் 0 வயது முதல் தொடங்குகிறது. வருடாந்தர பிரீமியம் வரம்பு ரூ.6,000 முதல் தொடங்குகிறது. குழந்தைகளின் வயதிற்கேற்ப பிரீமியத்தில் தள்ளுபடியும் பேஅவுட்களைப் பெறலாம். பாலிசிதாரரின் வசதிக்கேற்ப மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு, வருடாந்திர, ஒற்றை பிரீமியம் செலுத்தும் வசதிகளை வகுத்துள்ளது SBI.





பாலிசியின் நன்மைகள்:

இந்த பாலிசி மூலம் பாலிசிதாரரின் குழந்தை 18, 19, 20 மற்றும் 21 வயதை நிறைவு செய்யும் போது பாலிசி ஆண்டின் இறுதியில் ஸ்மார்ட் நன்மைகள் வழங்கப்படும். அதாவது அடிப்படைத் தொகையில்  25 % மற்றும் போனஸ்சாக 25 % வழங்கப்படும். ஸ்மார்ட் பழங்கள், பிரீமியம் தள்ளுபடி, ஒட்டுமொத்தமாக பட்டுவாடா என உங்கள் குழந்தைகளுக்கு மும்மடங்கு பாதுகாப்பை வழங்குகிறது இந்த திட்டம்.  

உங்கள் குழந்தைகளின் பாதுகாவலரான நீங்கள் அவர்களின் எதிர்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டு இன்று முதல் சேமிப்பதற்கான சிறந்த திட்டமாக இந்த எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் சாம்ப் இன்சூரன்ஸ் விளங்குகிறது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண