எல்ஐசி ஜீவன் லாப் திட்டத்தின் இணைந்து தினமும் ரூ.238 சேமித்தால் பாலிசி முதிர்வின் போது பாலிசிதாரர் ரூ.54 லட்சம் பெற முடியும்.


இன்சூரன்ஸ் என்றாலே நமக்கெல்லாம் முதலில் நினைவுக்கு வருவது எல்ஐசி தான். காரணம் அதன் நம்பகத்தனமை. எல்ஐசி பல அற்புதமான திட்டங்களை மக்களுக்காக கொடுத்து வருகின்றது.  குழந்தைகள், பெரியோர், மாணவர்கள், திருமண வயதினர், மருத்துவம், ஓய்வுக்காலம் என பல தரப்பினருக்கும், பல்வேறுபட்ட தேவைகளுக்கும் அவ்வபோது நல்ல திட்டங்களை வழங்கி வருகிறது. இதனால், இந்திய மக்களில் பெரும்பாலானோர் எல்ஐசியின் நூற்றுக் கணக்கான பாலிஸி திட்டங்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்திருப்பார்கள்.


ஒருவேளை நீங்கள் ரிட்டயர்மென்ட் ப்ளானாக ஏதாவது தேர்வு செய்ய விரும்பினால் நீங்கள் நிச்சயமாக LIC Jeevan Labh Policy எல்ஐசி ஜீவன் லாப் திட்டத்தினை தேர்வு செய்யலாம்.


இந்த பாலிசியில் பங்கு சந்தை அபாயங்கள் கிடையாது. பாலிசி காலம் முதிர்வு வரை பிரீமியம் செலுத்த வேண்டியதில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக குழந்தைகளின் உயர் கல்வி மற்றும் திருமணத்தை திட்டமிடுவதற்கான சிறந்த பாலிசியாகவும் பார்க்கப்படுகிறது.


எல்ஐசி ஜீவன் லாப் திட்டத்தை கணக்கிடுவது எப்படி?
உங்களுக்கு 25 வயதாகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்படியென்றால் நீங்கள் 25 ஆண்டுகள் முதிர்வு திட்டத்தில் ஜீவன் லாப் திட்டத்தை எடுங்கள். உங்களுக்கு பாலிசி முதிர்வின் போது ரூ.54.50 லட்சம் கிடைக்கும். இதற்கு நீங்கள் அடிப்படை தொகையாக ரூ.20 லட்சத்தை தேர்வு செய்ய வேண்டும். ஆண்டுதோறும் ரூ.92,400 பாலிசி ப்ரீமியமாக கட்ட வேண்டும். இது அன்றாடம் ரூ.213 செலுத்துவதற்கு சமம். இவ்வாறு செலுத்தி வந்தால் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் ரூ.54.50 லட்சம் கிடைக்கும்.


எல்ஐசி ஜீவன் லாப் நன்மைகள்:
எல்ஐசி ஜீவன் லாப் திட்டத்தின் கீழ் ஏராளமான நன்மைகள் இருக்கின்றனர். பாலிசிதாரர் அனைத்து ப்ரீமியங்களையும் சரியாக செலுத்தியிருந்தால் அவருக்கு வாக்குறுதி அளிக்கப்பட்ட அடிப்படை தொகை கைக்கு வரும். அவர் உயிருடனும் இருக்கும்பட்சத்தில் சப்ளிமென்ட்டரி போனஸும் கிடைக்கும்.


எல்ஐசி ஜீவன் லாப் வரிச் அலுகைகள்:
இந்த எல்ஐசி ஜீவன் லாப் திட்டத்தை எடுக்கும் போது வருமான வரிச் சட்டம் 1961ன் படி பிரிவு 80Cயின் கீழ் வரிச் சலுகை கிடைக்கும். இதனால் ஆண்டுக்கு ரூ.46,800 வரை சலுகை பெற முடியும். 


பாலிசிதாரர் பாலிசி காலத்தின் போது இறந்து விட்டால், வாரிசுதாரருக்கு, அடிப்படை காப்பீடு தொகை மற்றும் திரட்டப்பட்ட எளிய போனஸ் தொகை மற்றும் இறுதி கூட்டல் போனஸ் (FAB) என அனைத்தும் சேர்ந்து பெறுவார்கள். ஆக பாலிசி எடுக்கும்போது நாமினி விவரங்களை சரியாக கொடுக்க வேண்டும்.