எஸ்பிஐ ஏடிஎம்களில் 10 ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கு மேல் பணம் எடுத்தால் ஓடிபி எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும் என்பதை எஸ்பிஐ வங்கி கட்டாயமாக்கியுள்ளது.


இன்றைய வளர்ந்துவரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு அதற்கேற்றால் நூதன மோசடிகளும் அதிகரிக்கத்தான் செய்கிறது. அதிலும் குறிப்பாக வங்கி மோசடி தான் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக வங்கிகளிலிருந்து கால் செய்கிறோம் என்று கூறி நம்முடைய அதனைத்தகவல்களையும் பெற்றுக்கொண்டு பணம் திருடப்படுவதாக பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ளது. இதனையடுத்து தான் தற்போது ஒவ்வொரு வங்கியும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அறிவுறுத்திவருகிறது.





இந்த சூழலில் தான் இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களைக்கொண்ட எஸ்பிஐ வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஏடிஎம் கார்டினைப்பயன்படுத்தி 10 ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கு மேல் பணம் எடுக்கும் போது வங்கிகளில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும். அதனை ஏடிஎம் இயந்திரத்தில் என்ட்ரி செய்தால் மட்டுமே பணத்தை நம்மால் எடுக்க வேண்டும். இதுப்போன்று ஒவ்வொரு பரிவத்தனைக்கும் தனித்தனியாக ஓடிபி எண்ணைப்பெற்று பயன்படுத்த வேண்டும். இதனால் வங்கி  வாடிக்கையாளர்களை மோசடியில் இருந்து பாதுகாக்க இந்த நடவடிக்கையை எடுக்கப்பட்டுள்ளதாக எஸ்பிஐ வங்கி கூறியுள்ளது.


அதே போல் நாளை முதல் எஸ்பிஐ  வங்கியின் கிரெடிட் கார்டு மூலம் செய்யப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 99 ரூபாய் தனி வரி செலுத்த வேண்டும்  என்றும் அனைத்து வணிகர் இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கும் 99 ரூபாய் மற்றும் செயலாக்கக் கட்டணமாக வரி செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் நாட்டில் இரண்டாவது பெரிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி , தனது வாடிக்கையாளர்களுக்கு டிசம்பர் 1 முதல் சேமிப்பு கணக்கில் செலுத்தப்படும் வட்டியை குறைக்க முடிவு செய்துள்ளது . வங்கி சேமிப்புக் கணக்கின் வட்டி விகிதத்தை ஒவ்வொரு வருடமும் 2.90 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாக குறைத்துள்ளது .


இது ஒருபுறம் இருக்க மக்கள் அன்றாடம் உபயோகிக்கும் அத்தியாவசிய பொருள்களின் விலையும் நாளை முதல் உயரப்போகிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பாக 1 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த தீப்பெட்டியின் விலை அதன்படி கடந்த 14 ஆண்டுகளுக்குப்பிறகு தீப்பெட்டியின் விலை நாளை முதல் 2 ரூபாய்க்கு விற்பனையாகவுள்ளது.  தீப்பெட்டி தயாரிப்பு மூலப்பொருள்களின் விலை அதிகரித்துள்ளதால் தீப்பெட்டியின் விலை உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





இதோடு அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சியான செய்தியாக கேஸ் சிலிண்டர் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஒவ்வொரு மாதமும் முமல் தேதியில் அரசு எண்ணை நிறுவனங்கள் சிலிண்டர் எண்ணிக்கையை உயர்த்திவரும் நிலையில், தற்போது கச்சா எண்ணெய்யின் விலை பெருமளவில் குறைந்துள்ளது. எனவே நாளை முதல் அதாவது டிசம்பர் 1 ஆம் தேதி முதல் கேஸ் சிலிண்டர் விலை குறையலாம் எனக்கூறப்படுகிறது.  எல்பிஜி கேஸ் சிலிண்டர்களின் விலையை ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் அரசு எண்ணை நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன . தற்போது கச்சா எண்ணெய் விலையில் பெரிய குறைப்பு ஏற்பட்டுள்ளது . அதனால் டிசம்பர் 1 முதல் கேஸ் சிலிண்டர் விலை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .