தேசிய வங்கிகள் உள்பட சில நிதி நிறுவனங்கள் தங்களது பிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்களை அண்மைக் காலமாக உயர்ந்திவரும் நிலையில், ப்ளோடிங் ஃபிக்சட் டெபாசிட், குறுக்கிய மற்றும் நடுத்தர எப்டி போன்ற பல ஸ்கீம்கள் உங்களுக்கு நல்ல லாபத்தை வழங்கும்.
மக்கள் பெரும்பாலும் தங்களது பணத்தை ஃபிக்சட் டெபாசிட் எனப்படும் நிலையான வைப்பு நிதி, மற்றும் ஆர்டி எனப்படும் தொடர்ச்சியான வைப்பு நிதி போன்ற பலவற்றில் செலுத்தி வருகின்றனர். இதன் மூலம் தாங்கள் டெபாசிட் செய்யும் பணத்திற்கு தகுந்த வட்டி விகிதங்களைப் பெறுவதோடு நல்ல சேமிப்பு பழக்கமாகும் இது பார்க்கப்படுகிறது. இவ்வாறு வங்கிகள் அல்லது சில நிறுவனங்களில் செலுத்தப்படும் பணத்திற்கு கணிசமாக வட்டி விகிதங்களை மக்கள் பெற்று வந்தனர். ஆனால் கடந்த 3 ஆண்டுகளில் ஃபிக்செட் டெபாசிட் வட்டி விகிதம் கணிசமாகக்குறைந்துள்ளது. குறிப்பாக கடந்த மே 2020 முதல் ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 4 சதவீதமாக உள்ளதால் முதலீட்டாளர்களை வருமானம் ஈட்ட மாற்று வழிகளைத் தேட வழிவகுத்தது.
இந்நிலையில் தான் அண்மைக் காலமாக தேசிய வங்கிகள் உட்பட சில நிறுவனங்ள் தங்களது ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்களை உயர்த்திவருகிறது. எனவே அதிக வருமானத்தைப் பெறுவதற்கு எதில் முதலீடு செய்யலாம் என்பது குறித்த முதலீட்டு நுட்பங்கள் குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.
ப்ளோட்டிங் ஃபிக்சட் டெபாசிட்:
வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஃப்ளோட்டிங் ரேட் ஃபிக்சட் டெபாசிட்களை வழங்குகின்றன. தற்போதைய நிலையாக விகித FD களுடன் ஒப்பிடும் போது, ஃப்ளோட்டிங் ரேட் விகிதத்தில் பெரிய வித்தியாசம் இல்லை. இருந்தப்போதும், விகிதம் அதிகரித்தால், ப்ளோட்டிங் ரேட்டில் நல்ல வட்டி விகிதம் கிடைக்கும் என்பதால் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக குறுகிய கால எப்டிகளை வாடிக்கையாளர்கள் அவ்வப்போது அதிக வட்டி தரும் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு மாற்றுவோருக்கு இந்த ஃப்ளோட்டிங் ரேட் வட்டி விகிதம் நல்ல திட்டமாக அமையும்.
குறுகிய கால ஃபிக்சட் டெபாசிட்:
நீங்கள் செலுத்தும் பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் நன்கு குறைந்தப் பிறகு, உங்களுக்கு வட்டி விகிதம் அதிகரிக்கும் பட்சத்தில், நீண்ட கால பிக்சட் டெபாசிட் திட்டங்களைக் காட்டிலும் குறுகிய மற்றும் நடுத்தர கால பிக்சட்களில் மாற்றத்தை விரைவாக காண முடியும் எனக்கூறப்படுகிறது. நீங்கள் செலுத்தும் வட்டி விகிதம் படிப்படியாக அதிகரிக்க வாய்ப்புள்ளதால், குறுகிய கால பிக்சட் டெபாசிட் திட்டங்களே சிறந்த தேர்வாகும்.
லாடரிங் முறையிலான ஃபிக்சட் டெபாசிட்:
லாடரிங் ஃபிக்சட் டெபாசிட் என்பது வட்டி விகிதம் அதிகரிக்கும் வாய்ப்பு மட்டுமின்றி எஃப்.டிகளில் அதிக வருவாயை உறுதி செய்வதற்கான சிறந்த வழியாகவும் இது உள்ளது. உதாரணமாக நீங்கள் இந்த லாடரிங் ஃபிக்சட் டெபாசிட்டில் ரூ. 5லட்சத்தை முதலீடு செய்ய விரும்பினால், அதனை 1 ஆண்டு, 2 ஆண்டு, 5 ஆண்டு முதிர்வு காலம் என உங்களது ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களாகப் பிரிக்க வேண்டும்.
ஒருவேளை முதிர்ச்சியின்போது, உங்களுக்கு பணத்தேவை இருந்தால், அதனை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். உங்களுக்கான பணம் தேவையில்லை என்று நீங்கள் நினைத்தால் உங்களது பிக்சட் டெபாசிட் திட்டத்தை மேலும் சில ஆண்டுகளுக்கு நீங்கள் நீட்டித்துக்கொள்ளலாம். இதனை நீங்கள் தேர்வு செய்வதற்கு முன்னதாக எந்தெந்த வங்கிகளில் என்னென்ன வட்டி விகிதங்கள் வழங்குகின்றன என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
இதோடு ஃபிக்சட் டெபாசிட்டுகளில் முதலீடு செய்வதற்கு முதலில் நீங்கள் வரி விகித உயர்வுக்காக காத்திருக்க வேண்டாம். ஏனென்றால் எப்போது வேண்டுமானாலும் வட்டி விகிதம் உயரும் என்று யாருக்கும் உறுதியாகத் தெரியவில்லை. எனவே உங்களுக்கு எந்த ஃபிக்சட் டெபாசிட் பலனளிக்கும் என்று நினைக்கிறீர்களோ? அதனை நீங்கள் தேர்வு செய்துக்கொண்டு பயன்பெறுங்கள்.