ஒரு காலத்தில் அரசு வேலை பார்ப்பவர்களுக்கு மட்டுமே இருந்த ஓய்வூதிய திட்டத்தை மாற்றி , இந்திய அரசு அனைத்து தொழிலாளருக்குமான ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில்  ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) தேசிய ஓய்வூதிய முறையின் (NPS) கீழ் குறைந்தபட்ச உறுதியளிக்கப்பட்ட வருவாய்த் திட்டத்தை (MARS) வடிவமைக்க உதவும் ஆலோசகராக EY ஆக்சுவேரியல் சர்வீசஸ் LLP ஐ நியமித்துள்ளது.




Minimum Assured Return Scheme என அழைக்கப்படும் இந்த குறைந்தபட்ச உறுதியளிக்கப்பட்ட வருவாய் திட்டம் தற்போது ஆலோசனையில் இருந்து வருவதால் பயன்பாட்டிற்கு வருவதற்கு 6 முதல் 8 மாதங்கள் வரை ஆகலாம் என தெரிகிறது. Minimum Assured Return Scheme  NPS சந்தாதாரர்களுக்கு, குறிப்பாக  risk இல்லாதவர்களுக்கு, உத்தரவாதமான குறைந்தபட்ச வருவாய் விகிதத்தை வழங்கக்கூடிய திட்டம் என்பது கூடுதல் சிறப்பு.  தற்போது, ​​நிலவும் சந்தை நிலவரங்களின் அடிப்படையில்தான் NPS ஆண்டுதோறும் வருமானத்தை அளிக்கிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். திட்டத்தின் உண்மையான வருமானம் சந்தை நிலவரத்தைப் பொறுத்தது என்றாலும் எந்தவொரு சிக்கலும் ஸ்பான்சரால் சரி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.




Minimum Assured Return Scheme  திட்டத்தில் இரண்டு விருப்பங்கள் வழங்கப்படலாம். ஒன்று, நிலையான உத்தரவாத விருப்பத்தின் கீழ், உத்திரவாதமான வருமானம் கிடைக்கப்பெறும். மற்றொருன்று குறுகிய கால வருமானம் . அதாவது  floating guarantee விருப்பத்தின் கீழ் இதில்  உத்திரவாதமான வருமானம் கிடைக்காது. Floating உத்தரவாதமானது ஓய்வு பெறும் வரையிலான 1 ஆண்டு வட்டி விகிதத்தின் வளர்ச்சியைப் பொறுத்தது அதனால் குறைந்த அளவிலான வருமானமே கிடைக்கும். EY ஆக்சுவேரியல் சர்வீசஸ், ஓய்வூதிய நிதியால் தற்போதுள்ள மற்றும் வருங்கால சந்தாதாரர்களுக்கு வழங்கக்கூடிய MARS ஐ உருவாக்க அல்லது வடிவமைக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலீட்டில் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச பண வரம்புகள் பரிந்துரைக்கப்படலாம். முதலீட்டாளர்களுக்கு ஈர்ப்பு அம்சமாக, குறைந்தபட்ச உத்தரவாதமான வருமானம் அமைந்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஓய்வூதிய நிதிகள் மற்றும் அதன் ஸ்பான்சர்கள் MARS போன்ற தயாரிப்புகளை வழங்குவதற்கு, PFRDA ஏற்கனவே ஸ்பான்சர்களுக்கான மூலதனத் தேவை விதிமுறைகளை மாற்றியமைத்துள்ளது மற்றும் நாட்டில் ஓய்வூதிய நிதியை அமைக்க விரும்புவோருக்கு அதிக நிகர மதிப்பு மற்றும் செலுத்தப்பட்ட மூலதனத்தை நிர்ணயித்துள்ளது. நிர்வாகத்தின் கீழ் உள்ள இந்தியாவின் ஓய்வூதிய சொத்துக்கள் ஏற்கனவே ₹7-லட்சம் கோடியைத் தாண்டிவிட்டன, மேலும் இந்த நிதியாண்டின் இறுதிக்குள் ₹7.5-லட்சம் கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. PFRDA ஆனது 2030-க்குள் ₹30-லட்சம் கோடிக்கு AUM (நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துக்கள்) என்பதே இலக்காக உள்ளது.