New PPF Rules: பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் பணத்தை முதலீடு செய்வதன் மூலம், மக்கள் தங்கள் ஓய்வூதியத்திற்கு தயாராகத் தொடங்குகிறார்கள்.
பொது வருங்கால வைப்பு நிதி:
பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) சிறந்த எதிர்காலத்திற்காக, முதலீடு செய்வதற்கான ஒரு சிறந்த வழியாகும். இதில் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் மக்கள் தங்கள் ஓய்வூதியத்திற்கு தயாராகத் தொடங்குகிறார்கள். சமீபத்தில் பிபிஎஃப் கணக்கு தொடர்பான சில விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன. புதிய வழிகாட்டுதல்கள், சிறார்களின் பெயரில் தபால் நிலையங்களால் திறக்கப்படும் பல பிபிஎஃப் கணக்குகள் மற்றும் தேசிய சிறுசேமிப்புத் திட்டத்தின் கீழ் என்ஆர்ஐகளுக்கான பிபிஎஃப் கணக்குகளை விரிவுபடுத்துவது தொடர்பான விதிகளை மாற்றியுள்ளது.
பிபிஎஃப் கணக்கு தொடர்பான 3 விதிகளில் மாற்றம்:
நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை, பிபிஎஃப் கணக்கு தொடர்பான 3 விதிகளை மாற்றியுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை ஆகஸ்ட் 21, 2024 அன்று வெளியிடப்பட்டது. அதன்பட், புதிய விதிகள் அக்டோபர் 1, 2024 முதல் அமல்படுத்தப்பட உள்ளன. சுற்றறிக்கையின்படி, முறையற்ற சிறுசேமிப்புக் கணக்குகளை முறைப்படுத்த நிதி அமைச்சகத்துக்கு அதிகாரம் உள்ளது. எனவே இது தொடர்பான அனைத்து விடயங்களும் நிதியமைச்சகத்திற்கு அனுப்பப்பட வேண்டும் என்பது முதல் மாற்றமாகும்.
கூடுதல் வட்டி ரத்து:
மைனர்களுக்கு (18 வயது நிரம்பாத) அஞ்சல் அலுவலக சேமிப்புக் கணக்கிற்கு இணையான வட்டி கிடைக்கும் என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது போன்ற முறையற்ற கணக்குகளுக்கு, மைனர் 18 வயதை அடையும் வரை தபால் அலுவலக சேமிப்புக் கணக்கிற்கு சமமாக வட்டி செலுத்தப்படும். இதற்குப் பிறகு அவருக்கு முழு வட்டி விகிதம் வழங்கப்படும். அத்தகைய கணக்கின் முதிர்வு மைனர் 18 வயதை எட்டிய தேதியிலிருந்து கணக்கிடப்படும்.
என்ஆர்ஐ பிபிஎஃப் கணக்கில் வட்டி சேராது:
நிதி அமைச்சகத்தின்படி, ஒன்றுக்கு மேற்பட்ட பிபிஎஃப் கணக்குகள் இருந்தால், திட்டத்தின் வட்டி விகிதத்தின்படி முதன்மைக் கணக்கில் பணம் தொடர்ந்து சேரும். இரண்டாவது கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட பணம் முதன்மைக் கணக்கிற்கு மாற்றப்படும். இது தவிர முதன்மை மற்றும் இரண்டாம் நிலை கணக்குகள் தவிர வேறு எந்த கணக்குக்கும் வட்டி வழங்கப்படாது. என்ஆர்ஐ பிபிஎஃப் கணக்கிற்கும் செப்டம்பர் 30 வரை அஞ்சல் அலுவலக சேமிப்புக் கணக்கிற்கு இணையான வட்டி வழங்கப்படும். அதன் பிறகு அவர்களுக்கு வட்டி எதுவும் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.