அஞ்சல சேமிப்பில் எப்டியை விட அதிக வட்டியுடன் முதிர்வுத்தொகைப் பெறுவதற்கு பொது வருங்கால வைப்பு நிதி அதவாது பிபிஎப் நல்ல தேர்வாக அமைகிறது.


நம்முடைய எதிர்காலத் தேவைகளை யாருடைய தயவும் இல்லாமல் நிவர்த்தி செய்ய வேண்டும் என்றால், அதற்கு முதலில் நாம் நடைமுறைப்படுத்த வேண்டியது சேமிக்கும் பழக்கத்தைத் தான். சேமிப்பு ஒன்று இல்லாவிடில் இன்றை சூழலில் எதுவுமே நம்மால் மேற்கொள்ள முடியாது. இதற்காகவே மக்கள் அதிகம் பயன்படுத்திவரும் பொதுத்துறை நிறுவனமாக அஞ்சல் துறையில் பல சேமிப்புத் திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. குறிப்பாக பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் திட்டம்,  முதியோர்க்கான திட்டம்,  மாதாந்திர வருமானத்திட்டம், ஆர்டி, எப்டி , வருங்கால வைப்பு நிதி என்ற பிபிஎப் போன்ற பல்வேறு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. 



இதில் எதிர்கால நலன்களை அதிகளவில் பெறும் வகையில் அமைந்துள்ளது தான் பொது வருங்கால வைப்பு நிதி எனப்படும் நீண்ட கால சிறந்த முதலீட்டு ஆகும். பெண் குழந்தைகளுக்கு எப்படி செல்வமகள் சேமிப்பு திட்டம் உள்ளது போல ஆண் குழந்தைகளின் எதிர்கால நலன்களுக்காக உள்ளது பிபிஎப். பிக்சட் டெபாசிட்டை விட அதிக வட்டி கிடைப்பதுடன் இதில் பல்வேறு சலுகைகளையும் நாம் பெற முடிகிறது.


குறிப்பாக இந்த பிபிஎப் கணக்கில் 15 ஆண்டுகளுக்கு நாம் பணம் செலுத்த வேண்டும். ரூ.500 செலுத்தியும் இந்த கணக்கை நாம் துவங்கலாம்.


இதோடு நிதியாண்டில் 12 முறை இதில் பணம் டெபாசிட் செய்ய வேண்டும். ஆண்டிற்கு ரூ.1.50 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.


15 ஆண்டுகளில் முதிர்ச்சிஅடையும் நிலையில் இக்கணக்கை முடிக்காமல் 5 ஆண்டுகள் கூடுதலாக சேமிக்கத் தொடங்கினால் நல்ல பலனளிக்கும்.


மேலும் பிபிஎப் கணக்கு துவங்கி 5 ஆண்டுகளுக்குப்பிறகு மருத்துவ செலவு, படிப்பு செலவுக்காக கணக்கை மூட அனுமதியளிக்கப்படும். இதோடு 7 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு முறை மட்டும் பணத்தை எடுக்க அனுமதி உண்டு..


இந்த அஞ்சல சேமிப்பு திட்டம், குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்தேவைகளுக்கு உதவக்கூடியதாக இருக்கும். குறிப்பாக பிபிஎப் திட்டத்தில் 7.1 சதவீதம் வட்டி கிடைக்கிறது. ஒவ்வொரு நிதியாண்டில் இறுதியிலும் வட்டி டெபாசிட் செய்யப்படும். இந்த டெபாசிட்டுகளுக்கு வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் வருவதால், வரி விலக்கு கிடைக்கிறது.. எனவே அனைவருக்கும் லாபகரமான முதலீட்டு திட்டமாக அமைகிறது. . 


இப்படி பல்வேறு நலன்களை அளிக்கும் சேமிப்புத்திட்டத்தில் நீங்கள் இணையும் பட்சத்தில் நேரடியாக  உங்களால் பணம் செலுத்த முடியவில்லை என்றால், ஆன்லைன் வாயிலாக அதாவது இந்திய போஸ்ட் பெமெண்ட் வங்கியின் மூலம் செலுத்திக்கொள்ளலாம். இதை எப்படி செலுத்த வேண்டும் என தெரிந்துக்கொள்ளுங்கள்.


முதலில் நீங்கள் வங்கிக் கணக்கிலிருந்து IPPB கணக்கில் பணத்தைச் செலுத்த வேண்டும். அடுத்தாக DOP சர்வீசுக்கு செல்ல வேண்டும்.


அப்பக்கத்தில் தொடர் வைப்புத்தொகை, பொது வருங்கால வைப்பு நிதி, சுகன்யா சம்ரிதி கணக்கு, எப்டி, லோன் போன்ற பல ஆப்ஷன்கள் இதில் வரும். 





இதில் நீங்கள் எதற்கு பணம் டெபாசிட் செய்ய வேண்டுமோ? அதனை நீங்கள் தேர்வு செய்துக்கொள்ள வேண்டும். ஒரு வேளை நீங்கள் பிபிஎப் கணக்கை தேர்வு செய்தால் அப்பக்கத்தில் உங்களது பிபிஎப் கணக்கு நம்பர், DOP கஸ்டமர் ஐடியை பதிவிட வேண்டும்.


இதனையடுத்து வரும் பக்கத்தில் நீங்கள் எவ்வளவு பணம் செலுத்த வேண்டுமோ? அதனை டெபாசிட் செய்து PAY என்பதை கிளிக் செய்ய வேண்டும்.


இந்த நடைமுறை முழுமையாக முடிந்ததும்,  உங்களுக்கு ஒரு மெசேஜ் வரும்.