ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் லைப் இன்சுரன்ஸ் பெறுவதற்கு நீங்கள் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தேவையில்லை எனவும் அதற்குப்பதிலாக எஸ்பிஐயின் யோனா ஆப்பைப் (SBI yono) பயன்படுத்தி சுலபமாக மேற்கொள்ளலாம்.
இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களைக்கொண்ட பொதுத்துறை நிறுவனம் தான் ஸடேட் பாங்க் ஆப் இந்தியா. வாடிக்கையாளர்களை தங்கள் வசம் வைத்துக்கொள்வதற்காகவே புதிய புதிய அறிவிப்புகளையும், ஆஃபர்களையும் வழங்கிவருகிறது. குறிப்பாக வாடிக்கையாளர்களுக்கு தனிநபர் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்குமான லைப் இன்சுரன்ஸ்களை வழங்கி வருகிறது. முன்னதாக இந்த ஆயுள் காப்பீட்டு வசதிகளை பெற வேண்டும் என்றால், நாம் மேற்கொண்ட மருத்துவப்பரிசோதனையின் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.
ஆனால் இன்றைய கொரோனா பெருந்தொற்று காலக்கட்டத்தில் மருத்துவப்பரிசோதனை மேற்கொண்டு லைப் இன்சுரன்ஸ் திட்டத்தைப் பெற வேண்டும் என்றால் சாதாரணக் காரியம் இல்லை. மருத்துவமனைக்குச் சென்றாலே கொரோனா தொற்று ஏற்பட்டுவிடமோ என்ற அச்சத்தில் யாரும் இதற்கு முன்வர மாட்டார்கள். எனவே இதுப்போன்ற பிரச்சனைகள் ஏற்படாமலும், குறிப்பாக வீட்டை விட்டு வெளியே வராமலும் ஆயுள் காப்பீட்டுக் கொள்கையை நாம் பெற முடியும் என ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
அதில், நீங்கள் உங்களது லைப் இன்சுரன்ஸ் பாலிசி அதாவது ஆயுள் காப்பீட்டுக்கொள்கைளைப் பெற வேண்டும் என்றால் மருத்துவப் பரிசோதனை அல்லது ஆவணங்களைச் சமர்ப்பிக்க தேவையில்லை எனவும் அதற்குப் பதிலாக எஸ்பிஐ யோனா ஆப் ( SBI YONO) மூலம் எளதில் பெறலாம் என டிவிட் செய்துள்ளது. இதோ அதற்கான வழிமுறைகள்…
முதலில் பாரத ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர்கள் SBI Yono செயலிக்குள் செல்ல வேண்டும்.
பின்னர் நீங்கள் காப்பீடு (Policy) பிரிவுக்குச் செல்ல வேண்டும்.
இதனையடுத்து “buy a policy” என்ற பகுதிக்குச் செல்ல வேண்டும்.
அதனுள், Life insurance section க்குள் செல்ல வேண்டும்.
இறுதியில், நீங்கள் Group Term Plan விருப்பத்தைப் பெறுவீர்கள்.
இதனைப்பயன்படுத்தி உங்களுடைய லைப் இன்சுரன்ஸ் பாலிசியை நீங்கள் எந்தவித மருத்துவப்பரிசோதனைச் சான்றிதழ்கள் இல்லாமலே எளிதில் பெற்றுக்கொள்ளலாம். இந்த அறிவிப்பை டிவிட்டரில் பார்த்த எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் பல்வேறு கமெண்ட்ஸ்களை டிவிட் செய்துவருகின்றனர்.