பிரதான் மந்திரி சுரக்‌ஷா ஜோஜனா  (PMSBY) காப்பீடு திட்டதின் மூலம், விபத்து காப்பீடு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் இணைபவர்களுக்கு அரசு சார்பில் விபத்து காப்பீடு வழங்கப்படுகிறது. 


18 முதல் 70 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த திட்டத்தில் இணையலாம். இத்திட்டத்தில் இணைய ஆதார் கார்டு வைத்திருப்பது அவசியம்.  அதிக வருமானம் இல்லாதவர்கள், காப்பீட்டின் பிரீமியத்தை செலுத்துவது மிகவும் கடினம். அதனால், ஒவ்வொரு மாதமும் பிரீமியமாக 1 ரூபாயை மட்டுமே செலுத்தி, ஆண்டுக்கு 12 ரூபாய் பிரீமியத்தில் இந்த காப்பீட்டை பெறலாம்.


PMSYM | தினமும் ரூ.2 என்ற வீகிதத்தில் முதலீடு; ஆண்டுக்கு ரூ.36 ஆயிரம் வரை ஓய்வூதியம்..!


இத்திட்டத்தை பற்றி முக்கிய தகவல்கள்:



  • பிரதமரின் விபத்து காப்பீடு திட்டத்தில் இணைபவர்கள், 1 வருடத்திற்குள் விபத்தில் சிக்கி இறக்க நேரிட்டால் இத்திட்டத்தின் கீழ் அவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.

  • விபத்துகள், வெள்ளம் மற்றும் நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரழிவுகள் மூலம் ஏற்படும் மரணங்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் காப்பீடு வழங்கப்படுகிறது. 

  • ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ம் தேதி முதல் அடுத்த ஆண்டு மே 31-ம் தேதி இத்திட்டத்தின் பிரீமியம் செலுத்துவதற்கான காலம். எனவே, மே 31-ம் தேதிக்கு முன், இத்திட்டத்தை இணைந்து மக்கள் பயன் பெறலாம். 

  • SMS அல்லது சேவிங்ஸ் நெட் பேங்கிங் மூலம் இந்த திட்டத்திற்கு ஒருவர் விண்ணப்பிக்கலாம்.

  • அல்லது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து சேவிங்ஸ் அக்கவுண்ட் வைத்துள்ள வங்கியை அணுகி பிரதான் மந்திரி சுரக்‌ஷா ஜோஜனா திட்டத்தில் சேரலாம்.

  • அனைத்துப் பெரிய வங்கி நிறுவனங்களின் வங்கி கிளைகளிலும் இந்த சேவை வழங்கப்படுகிறது.


இதே போல, மற்றொரு திட்டமான பிரதான் மந்திரி ஷ்ராம் யோகி மந்தன் (PM-SYM) ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஒரு நாளைக்கு ரூ. 2 என்ற வீதம் மாதம்தோறும் 55 ஆயிரம் வரை பிரீமியம் செலுத்தி ஆண்டிற்கு ரூ 36,000 வரை பென்ஷன் பெற முடியும். ஓய்வூதியம் பெற முடியாதவர்களாகவும்,  அமைப்பு சாரா தொழிலாளர்களும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்தத்திட்டத்தில் சேரலாம். 18 வயதில் இருந்து இந்த திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்கும் விண்ணப்பதாரர்கள் இந்த திட்டத்தில் 42 வயது வரை முதலீடு செய்ய வேண்டும். விண்ணப்பதாரர் 60 வயது வரை பிரதமர் ஸ்ராம் யோகி மந்தன் யோஜனாவில் ரூ .27,720  மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். இந்த திட்டத்தின் பயனாளிகளுக்கு 60 வயதுக்கு பிறகு ஒவ்வொரு மாதமும் 3,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும்


Marburg Virus | மறுபடி முதல்ல இருந்தா? மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் 'மார்பர்க் வைரஸ்' தாக்கம்: எச்சரிக்கும் உலக சுகாதார மையம்..!