ஒவ்வொரு வங்கியும் தனது வாடிக்கையாளர்களை கவர்வதற்காகவும், வாடிக்கையாளர்களின் நலன் கருதியும் தனிநபர் கடன் வழங்கி வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் எந்தெந்த வங்கிகள் தனிநபர் கடனுக்கு எத்தனை சதவீதம் வட்டி வசூலிக்கிறது? என்பதை கீழே காணலாம்.
1.HDFC Bank - 9.99 சதவீதம் முதல்
இந்த வங்கியில் 5 ஆண்டுகள் கால வரம்பில் 1 லட்சம் கடன் வாங்கினால் மாதந்தோறும் ரூபாய் 10 ஆயிரத்து 621 தவணை செலுத்த வேண்டும். 5 ஆண்டுகள் கால வரம்பில் 1 லட்சம் ரூபாய் கடன் வாங்கினால் ரூபாய் 2 ஆயிரத்து 124 தவணை கட்ட வேண்டும்.
2. Tata Capital - 10.99 சதவீதத்திற்கு மேல்
டாடா கேபிடல்லில் 10.99 சதவீதம் முதல் வட்டி வசூலிக்கப்படுகிறது. இங்கு 5 ஆண்டுகள் கால வரம்பில் 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கினால் மாதந்தோறும் குறைந்தது ரூபாய் 10 ஆயிரத்து 869 தவணையாக செலுத்த வேண்டும். 5 ஆண்டுகள் கால வரம்பில் 1 லட்சம் கடன் வாங்கினால் ரூபாய் 2 ஆயிரத்து 174 செலுத்த வேண்டும்.
3. State Bank Of India - 10.05 - 15.05 சதவீதம் வட்டி
எஸ்பிஐ வங்கியில் 10.05 முதல் 15.05 வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. 5 ஆண்டுகள் கால வரம்பில் 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கினால் மாதந்தோறும் தவணையாக ரூபாய் 10 ஆயிரத்து 636 முதல் ரூபாய் 11 ஆயிரத்து 908 கட்ட வேண்டும். 5 ஆண்டுகள் கால வரம்பில் ரூபாய் 1 லட்சம் கடன் வாங்கினால் ரூபாய் 2 ஆயிரத்து 127 முதல் 2 ஆயிரத்து 382 தவணையாக செலுத்த வேண்டும்.
4. ICICI வங்கி - 10.45 சதவீதத்திற்கு மேல்
ICICI வங்கியில் 5 ஆண்டுகள் கால வரம்பில் 5 லட்சம் கடன் வாங்கினால் மாதந்தோறும் ரூபாய் 10 ஆயிரத்து 735 தவணை செலுத்த வேண்டும். 1 லட்சம் ரூபாய் கடன் வாங்கினால் மாதந்தோறும் குறைந்தது ரூபாய் 2 ஆயிரத்து 147 தவணை கட்ட வேண்டும்.
5. Bank Of Baroda - 10.45 - 18.05 சதவீதம்
பரோடா வங்கியில் 10.45 சதவீதம் முதல் 18.05 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. 5 ஆண்டுகள் கால வரம்பில் 5 லட்சம் ரூபாய் கடனுக்கு மாதந்தோறும் ரூபாய் 10 ஆயிரத்து 722 முதல் 12 ஆயிரத்து 710 வரை தவணை கட்ட வேண்டும். அதே கால வரம்பில் ரூபாய் 1 லட்சம் கடன் வாங்கினால் ரூபாய் 2 ஆயிரத்து 144 முதல் ரூபாய் 2 ஆயிரத்து 542 வரை தவணை கட்ட வேண்டும்.
6. Axis வங்கி - 9.99 சதவீதம் முதல்
Axis வங்கியில் 5 ஆண்டுகள் கால வரம்பில் ரூபாய் 5 லட்சம் கடன் வாங்கினால் மாதந்தோறும் குறைந்தது ரூபாய் 10 ஆயிரத்து 621 தவணை கட்ட வேண்டும். அதே கால வரம்பில் ரூபாய் 1 லட்சம் கடன் வாங்கினால் மாதந்தோறும் ரூபாய் 2 ஆயிரத்து 124 குறைந்தது கட்ட வேண்டும்.
7. Kotak Mahindra Bank - 10.99 சதவீதம் முதல்
Kotak Mahindra வங்கியில் 10.99 சதவீதம் முதல் வட்டி வசூலிக்கப்படுகிறது. 5 ஆண்டுகள் கால வரம்பில் ரூபாய் 5 லட்சம் கடன் வாங்கினால் 10 ஆயிரத்து 869 முதல் தவணை செலுத்த வேண்டும். ரூபாய் 1 லட்சம் கடன் வாங்கினால் ரூபாய் 2 ஆயிரத்து 174 வரை தவணை செலுத்த வேண்டும்.
8. Canara Bank - 9.95 முதல் 15.40 சதவீதம் வரை
Canara வங்கியில் 5 ஆண்டுகள் கால வரம்பில் ரூபாய் 5 லட்சம் கடன் வாங்கினால் மாதந்தோறும் ரூபாய் 10 ஆயிரத்து 611 முதல் ரூபாய் 12 ஆயிரம் வரை தவணை செலுத்த வேண்டும். அதே கால வரம்பில் ரூபாய் 1 லட்சம் கடன் வாங்கினால் 2 ஆயிரத்து 122 முதல் ரூபாய் 2 ஆயிரத்து 400 வரை தவணை செலுத்த வேண்டும்.
9.Punjab National Bank - 10.50 முதல் 17.05 சதவீதம் வரை
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 5 ஆண்டுகள் கால வரம்பில் 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கினால் மாதந்தோறும் ரூபாய் 10 ஆயிரத்து 747 முதல் ரூபாய் 12 ஆயிரத்து 440 வரை தவணை செலுத்த வேண்டும். அதே கால வரம்பில் ரூபாய் 1 லட்சம் கடன் வாங்கினால் மாதந்தோறும் ரூபாய் 2 ஆயிரத்து 149 முதல் ரூபாய் 2 ஆயிரத்து 488 வரை தவணை செலுத்த வேண்டும்.
10. HSBC வங்கி - 9.99 சதவீதம் முதல்
HSBC வங்கியில் 5 ஆண்டுகள் கால வரம்பில் ரூபாய் 5 லட்சம் கடன் வாங்கினால் மாதந்தோறும் ரூபாய் 10 ஆயிரத்து 621 முதல் தவணை செலுத்த வேண்டும். அதே கால வரம்பில் ரூபாய் 1 லட்சம் கடன் வாங்கினால் ரூபாய் 2 ஆயிரத்து 124 செலுத்த வேண்டும்.
11. Federal Bank - 11.99 சதவீதம் முதல்
Federal வங்கியில் 5 ஆண்டுகள் கால வரம்பில் 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கினால் மாதந்தோறும் ரூபாய் 11 ஆயிரத்து 120 முதல் தவணை செலுத்த வேண்டும். அதே கால வரம்பில் ரூபாய் 1 லட்சம் கடன் வாங்கினால் ரூபாய் 2 ஆயிரத்து 224 தவணை செலுத்த வேண்டும்.
12. Union Bank Of India - 10.35 முதல் 14.45 சதவீதம் வரை
யூனியன் வங்கியில் 5 ஆண்டுகள் கால வரம்பில் ரூபாய் 5 லட்சம் கடன் வாங்கினால் மாதந்தோறும் ரூபாய் 10 ஆயிரத்து 710 முதல் ரூபாய் 11 ஆயிரத்து 751 தவணை கட்ட வேண்டும். அதே கால வரம்பில் ரூபாய் 1 லட்சம் கடன் வாங்கினால் ரூபாய் 2 ஆயிரத்து 142 முதல் ரூபாய் 2 ஆயிரத்து 350 தவணை கட்ட வேண்டும்.
13. Bajaj Finserv - 10 முதல் 31 சதவீதம் வரை
Bajaj Finserv-வில் ரூபாய் 5 லட்சத்தை 5 ஆண்டுகள் கால வரம்பில் கடன் வாங்கினால் மாதந்தோறம் ரூபாய் 10 ஆயிரத்து 624 முதல் ரூபாய் 16 ஆயிரத்து 485 செலுத்த வேண்டும். அதே கால வரம்பில் ரூபாய் 1 லட்சம் வாங்கினால் ரூபாய் 2 ஆயிரத்து 125 முதல் ரூபாய் 3 ஆயிரத்து 297 வரை செலுத்த வேண்டும்.
14. Punjab Sind Bank - 9.60 முதல் 13.85 சதவீதம் வரை
இந்த வங்கியில் 5 ஆண்டுகள் கால வரம்பில் ரூபாய் 5 லட்சம் கடன் வாங்கினால் மாதந்தோறும் ரூபாய் 10 ஆயிரத்து 525 முதல் ரூபாய் 11 ஆயிரத்து 595 செலுத்த வேண்டும். அதே கால வரம்பில் ரூபாய் 1 லட்சம் கடன் வாங்கினால் மாதந்தோறும் ரூபாய் 2 ஆயிரத்து 105 முதல் ரூபாய் 2 ஆயிரத்து 319 செலுத்த வேண்டும்.
15. Indian Overseas Bank - 10.50 சதவீதம் முதல்
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 5 ஆண்டுகள் கால வரம்பில் ரூபாய் 5 லட்சம் கடன் வாங்கினால் மாதந்தோறும் ரூபாய் 10 ஆயிரத்து 747 தவணை கட்ட வேண்டும். அதே கால வரம்பில் ரூபாய் 1 லட்சம் கடன் வாங்கினால் மாதந்தோறும் ரூபாய் 2 ஆயிரத்து 149 தவணை செலுத்த வேண்டும்.
16. UCO வங்கி - 10.20 முதல் 13.45 சதவீதம் வரை
UCO வங்கியில் ரூபாய் 5 லட்சம் கடனை 5 ஆண்டுகள் கால வரம்பில் வாங்கினால் மாதந்தோறும் ரூபாய் 10 ஆயிரத்து 673 முதல் ரூபாய் 11 ஆயிரத்து 492 செலுத்த வேண்டும். ரூபாய் 1 லட்சம் கடன் வாங்கினால் ரூபாய் 2 ஆயிரத்து 135 முதல் ரூபாய் 2 ஆயிரத்து 298 தவணையாக செலுத்த வேண்டும்.
17. IDFC First Bank - 9.99 சதவீதம் முதல்
IDFC First வங்கியில் 5 ஆண்டுகள் கால வரம்பில் ரூபாய் 5 லட்சம் கடன் வாங்கினால் மாதந்தோறும் ரூபாய் 10 ஆயிரத்த 621 முதல் தவணை செலுத்த வேண்டும். அதே கால வரம்பில் ரூபாய் 1 லட்சம் கடன் வாங்கினால் ரூபாய் 2 ஆயிரத்து 124 செலுத்த வேண்டும்.
18. Bank Of Maharashtra - 8.75 சதவீதம் முதல் 13.55 சதவீதம் வரை
மகாராஷ்ட்ரா வங்கியில் 5 ஆண்டுகள் கால வரம்பில் ரூபாய் 5 லட்சம் கடன் வாங்கினால் மாதந்தோறும் ரூபாய் 10 ஆயிரத்து 319 முதல் ரூபாய் 11 ஆயிரத்து 518 வரை தவணை செலுத்த வேண்டும். அதே கால வரம்பில் ரூபாய் 1 லட்சம் கடன் வாங்கினால் ரூபாய் 2 ஆயிரத்து 064 முதல் ரூபாய் 2 ஆயிரத்து 304 வரை செலுத்த வேண்டும்.
19. Central Bank Of India- 9.65 சதவீதம் முதல் 11.55 சதவீதம் வரை
சென்ட்ரல் வங்கியில் 5 ஆண்டுகள் கால வரம்பில் ரூபாய் 5 லட்சம் வசூல் செய்தால் மாதந்தோறும் ரூபாய் 10 ஆயிரத்து 538 முதல் ரூபாய் 11 ஆயிரத்து 009 தவணை செலுத்த வேண்டும். அதே கால வரம்பில் ரூபாய் 1 லட்சம் கடன் வாங்கினால் ரூபாய் 2 ஆயிரத்து 108 முதல் ரூபாய் 2 ஆயிரத்து 202 தவணை செலுத்த வேண்டும்.
20. Indusind Bank - 10.49 சதவீதம் முதல்
Indusind வங்கியில் 10.49 சதவீதம் முதல் வட்டி வசூலிக்கப்படுகிறது. 5 ஆண்டுகள் கால வரம்பில் ரூபாய் 5 லட்சம் கடன் வாங்கினால் ரூபாய் 10 ஆயிரத்து 744 வட்டி வசூலிக்கப்படுகிறது. 5 ஆண்டுகள் கால வரம்பில் ரூபாய் 1 லட்சம் கடன் வாங்கினால் மாதந்தோறும் ரூபாய் 2 ஆயிரத்து 149 தவணை செலுத்த வேண்டும்.
ஒவ்வொரு வங்கிக்கும் ப்ராஸஸிங் கட்டணம் தனித்தனியாக வசூலிக்கப்படுகிறது.