நம்முடைய வாழ்க்கையில் அனைவருக்கும் சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்ற கனவு இருக்கும். ஆனால் அதனை வாங்கும்முன் நாம் செய்யும் சில தவறுகள் எதிர்காலத்தில் நமக்கு நிதி சிக்கல்களை உருவாக்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதனைப் பற்றிக் காணலாம்.

Continues below advertisement

காரணம் வாழ்நாள் முழுவதும் உழைத்து ஒரு வீட்டை வாங்கும்போது உண்டாகும் சிக்கல் நம்மை மனதளவில், உடலளவில் பாதிப்பை உண்டாக்கும். இன்றைய காலக்கட்டத்தில் பலரும் நிலத்தின் மதிப்பை, வீட்டின் மதிப்பை உணர்ந்து வருவதால் அதன் விலையும் எகிரி வருகிறது. சிலர் இந்த வீட்டை வாங்குவதற்காக கடன் பெற்று குறிப்பிட்ட காலம் வரை மாதந்தோறும் தவணை செலுத்துகிறார்கள். 

வீடு வாங்கினால் போதும் என கண்ணை மூடிக்கொண்டு கேட்கும் இடங்களில் எல்லாம் கையெழுத்து போட்டு பல லட்சம் பணம் மட்டுமல்லா, பிரச்னைகளையும் நீங்கள் எதிர்கொள்கிறீர்கள். எதிர்காலத்தில் உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க. வீடு வாங்கும் போது சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வாழ்நாள் முழுவதும் பிரச்னை இருக்கும். 

Continues below advertisement

பட்ஜெட்டுக்கு ஏற்ற கடன் 

வீட்டுக் கடன் வாங்கும்போது, ​​உங்கள் நிதி நிலைமை மற்றும் வருமானத்தை சரியாக மதிப்பிட்டு பணம் பெறுங்கள். அதாவது, நீங்கள் பெறும் கடன் தொகை மற்றும் செலுத்த வேண்டிய EMI ஐ தேர்வு செய்ய வேண்டும். இந்த விஷயங்களை சரியாக கவனிக்காமல் புறக்கணிப்பது எதிர்காலத்தில் நிதி சிக்கல்களை ஏற்படுத்தும். கடன் தொகையை எத்தனை ஆண்டுகள் செலுத்த வேண்டும் என்பதை நீங்கள் கவனமாக சிந்திக்க வேண்டும். நீங்கள் வைத்திருக்கும் கடன் காலத்தின் நீளம் உங்கள் வருமானம் மற்றும் பிற செலவுகளைப் பொறுத்து அமைய வேண்டும். குறைவான காலம் அதிக கடன் இஎம்ஐ செலுத்தலாம் என நிகழ்கால பொருளாதாரத்தை கையாள முடியாமல் திணறாதீர்கள்.

வீடு வாங்குவதாக இருந்தால் கவனம் 

ஒருவேளை நீங்கள் கட்டிய வீட்டை வாங்குவதாக இருந்தால் அதிக விலை கொண்ட, ஆடம்பரமான வீட்டை தேர்வு செய்யும் முன் உங்கள் நிதி நிலைமை பற்றி யோசியுங்கள். எதிர்காலத்தில் அதற்கு பணம் செலுத்த முடியாவிட்டால் தவிர்ப்பது நல்லது. 

சரியான இடம் 

மருத்துவமனை, பள்ளி, வங்கி, சந்தை போன்ற அடிப்படை வசதிகள் உங்கள் வீட்டிலிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளன என்பதைச் சரிபார்த்து வீட்டை தேர்வு செய்யவும். வசதிகள் இல்லாத இடத்தில் வீடு வாங்குவது தற்போது பயனளிக்காமல் எதிர்காலத்தில் பயனளிக்கலாம்.

முன்கூட்டியே சேமியுங்கள் 

வீடு வாங்குவதற்கு முன், உங்களிடம் குறைந்தது அடுத்த 6 மாதத்திற்கான செலவுக்குரிய நிதி கையிருப்பில் இருக்க வேண்டும். அவை தான் உங்கள் மாதச் செலவுகளைப் பராமரிக்கும். எதிர்காலத்தில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் கூட நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யும்.

பிற சொத்துக்களுடன் ஒப்பிடுதல்

வீடு வாங்குவதற்கு முன், உங்கள் வீட்டின் விலையை அருகிலுள்ள பிற சொத்துக்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இது வீட்டின் விலை பற்றிய தெளிவான பார்வையை உங்களுக்கு வழங்கும். சில நேரங்களில் நீங்கள் ஏமாற்றப்படலாம்.