குறைந்த பிரீமியம் தொகையில் அதிக வருமானம் பெறக்கூடிய திட்டமாக அஞ்சல் அலுவலக கிராம சுரக்சா திட்டம் உள்ளது. மேலும் . இந்த திட்டம் நிச்சயம் ஓய்வூதிய ஆண்டுகளில் சேமிக்கத் திட்டமிடுபவர்களுக்கு இது ஒரு நல்ல காப்பீட்டுத் திட்டமாக விளங்குகிறது.


இன்றைய சூழலில் சேமிப்பு மற்றும் பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என்பதில் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர் அந்த அளவிற்கு அவர்களுக்கு கொரோனா ஊரடங்கினால் ஏற்பட்ட பாதிப்பு உணர்த்தியுள்ளது. ஆனாலும் எதில் முதலீடு செய்யலாம், வயதான காலத்தில் நமக்கு எது பயனுள்ளதாக இருக்கும் என்பதில் பலருக்கும் பல்வேறு குழப்பங்கள் எழக்கூடும். இந்நிலையில் தான் குறைந்த வருமானத்தில் மக்களுக்கு பயனளிக்கும் திட்டமாக அஞ்சல் அலுவலகம் வழங்கக்கூடிய கிராம சுரக்சா திட்டம் நடைமுறையில் உள்ளது. எனவே இந்நேரத்தில் இத்திட்டத்தினால் ஏற்படும் பயன்கள் என்ன? மெசூரிட்டி தொகை எவ்வளவு கிடைக்கும்? என்பது குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.





கிராம சுரக்சா திட்டத்தில் 19 வயது முதல் 55 வயது வரையிலானவர்கள் முதலீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  குறைந்த பட்ச காப்பீட்டுத்தொகையாக 10 ஆயிரம் முதல் 10 லட்சம் வரை இதில் முதலீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை செலுத்துவதற்கு வசதியாக மாத வாரியாக, காலாண்டு, அரையாண்டு, ஆண்டு வாரிய விருப்பப்படி முதலீடு செய்யும் வசதிகள் உள்ளது. ஒரு வேளை பாலிசி காலத்தைத் தவறவிட்டாலும் மீதமுள்ள பிரீமியம் தொகையை அபராதம் கட்டிப்புதுக்கொள்ளலாம். எப்போதும் போதுள்ள நடைமுறை இதில் இருந்தாலும், ஓய்வூதிய காலத்தில் மிகுந்த பயனுள்ளதாக உள்ளது.  உதாரணமாக இத்திட்டத்தில் சேர நினைக்கும் வாடிக்கையாளர்கள் தனது 19 வயதில் ரூபாய் 10 லட்சத்திற்கு கிராம சுரக்சா பாலிசியை வாங்கினால்  அவர்களுக்கு 55 ஆண்டுகளுக்கு மாதாந்திர பிரீமியம் ரூ. 1515 ஆகவும், 58 ஆண்டுகளுக்கு  1463 ரூபாயாகவும், 60 ஆண்டுகளில் ரூ.1411 ஆக மாதாந்திர பிரீமியம் தொகை கட்ட வேண்டிருக்கும்.


இப்படி மாதம் குறைந்த பிரீமியம் தொகைக்கட்டும் வாடிக்கையாளர்களுக்கு முதிர்வு தொகையாக ரூபாய் 30 லட்சத்திற்கு மேலாக கிடைக்கப்பெறுவார்கள். குறிப்பாக 55 ஆண்டுகளில் ரூபாய் 31.60 லட்சம், 55 ஆண்டுகளில் ரூ.33.40 லட்சம், 60 ஆண்டுகளில் ரூ.34.60 லட்சம் என மெசூரிட்டி தொகையைப் பெறுவார்கள். மேலும் இந்த கிராம சுரக்சா திட்டத்தைப்பெறும் நபர்கள் 80 வயதை அடைந்தவுடன் அல்லது மரணம் ஏற்பட்டாலோ அவர்களின் சட்டபூர்வ வாரிசு தாரிடம் கொடுக்கப்படும் என்ற நடைமுறை உள்ளது. இந்த திட்டம் நிச்சயம் ஓய்வூதிய ஆண்டுகளில் சேமிக்கத் திட்டமிடுபவர்களுக்கு இது ஒரு நல்ல காப்பீட்டுத் திட்டமாக இருக்கும்.





தற்போது அஞ்சல் அலுவலகத்தில் உள்ள எந்தவொரு சேமிப்பு திட்டத்திலும் உங்களது பெயர் அல்லது மெயில் ஐடி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை புதுப்பிக்க விரும்பினால், அஞ்சல் அலுவலக வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள தபால் நிலையத்தில் நேரரிடையாக சென்று புதுப்பித்துக்கொள்ளலாம்.அல்லது கட்டணமில்லா ஹெல்ப்லைன் எண் 1800 180 5232/ 155232 அல்லது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் www.postallifeinsurance.gov.in என்ற முகவரியில் சென்று மாற்றிக்கொள்ளலாம்..