பாதுகாப்பான முதலீட்டோடு நல்ல பலன்களோடு திட்டங்களை வழங்கி வருகிறது எல்ஐசி. எல்ஐசி வழங்கும் திட்டங்களில் தங்களுக்கு ஏற்ற திட்டத்தை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்துகொள்ளலாம். இங்கு நாம் எல்ஐசி வழங்கும் ஜீவன் லாப் திட்டம் பற்றி பேசவுள்ளோம். ஒவ்வொரு மாதமும் சுமார் 233 ரூபாய் முதலீட்டுடன், மொத்தமாக சுமார் 17 லட்சம் ரூபாய் வரை இந்தத் திட்டத்தின் கீழ் பணம் ஈட்டலாம்.
ஜீவன் லாப் திட்டம் குறிப்பிட்ட நேரத்திற்கு உட்பட்டது. மேலும், இதன் ப்ரீமியம் தொகை குறிப்பிட்ட அளவில் வழங்கப்படுகிறது. எல்ஐசி நிறுவனம் சார்பில் நன்கொடையும் இதில் வழங்கப்படும். இந்தத் திட்டத்தில் பாதுகாப்பும், சேமிப்பும் ஒருசேர வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் முடிவடையும் போது, திட்டதாரர் பெரிய தொகையை ஈட்ட முடியும். மேலும் எதிர்பாராத விதமாக, திட்டதாரர் மரணமடைந்தால், அவரது குடும்பத்திற்குப் பொருளாதார உதவியும் இந்தத் திட்டத்தின் மூலமாக கிடைக்கும்.
இந்தத் திட்டத்திற்கும், பங்குச் சந்தைக்கும் எந்தத் தொடர்பும் இல்லாததால், பங்குச் சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் உங்கள் முதலீட்டின் மீது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. உங்கள் நிதி பாதுகாப்பாக இருக்கும். உங்கள் குழந்தைகளின் திருமணச் செலவு, கல்விக் கட்டணம், சொந்த வீடு வாங்கும் கனவு முதலானவற்றை நிறைவேற்ற இந்தத் திட்டத்தின் முதலீடு செய்யலாம். இதில் ஆயுள் காப்பீடும் இருப்பதால், மேலும் நன்மைகள் கிடைக்கின்றன.
எல்ஐசி வழங்கும் ஜீவன் லாப் திட்டத்தால் கிடைக்கும் நன்மைகள்!
1. எல்ஐசி வழங்கும் ஜீவன் லாப் திட்டம் சேமிப்பையும், பாதுகாப்பையும் ஒருசேர வழங்குகிறது.
2. இந்தத் திட்டம் 8 முதல் 59 வயது வரை உள்ளோருக்குக் கிடைக்கிறது.
3. இந்தத் திட்டத்தின் கீழ் காப்பீட்டின் காலத்தை 16 முதல் 25 ஆண்டுகள் வரை தேர்வுசெய்து கொள்ளலாம்.
4. குறைந்தபட்சமாக 2 லட்சம் ரூபாய் வரை படிப்படியாக இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வது கட்டாயம்.
5. அதிகபட்சமாக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்து கொள்ளலாம்.
6. தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்குத் தங்கள் ப்ரீமியம் தொகையைச் செலுத்தும் திட்டதாரர்கள், தங்கள் முதலீட்டைக் காட்டி, கடன் பெற்றுக் கொள்ளலாம்.
7. இந்தத் திட்டத்தின் கீழ் பதிவுசெய்திருப்பவர் எதிர்பாராத விதமாக மரணம் அடைந்தால், அவரது குடும்ப உறுப்பினருக்குப் பணம் கிடைப்பதோடு, கூடுதல் சிறப்பம்சங்களும் அளிக்கப்படுகின்றன.
இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்பவர் மரணமடைந்தால் அவரது குடும்பத்தினருக்குக் கூடுதல் பணமாக, மரணம் அடைந்ததற்கான தொகை, ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக வழங்கப்படும் போனஸ் ஆகியவை வழங்கப்படும், இந்தத் திட்டம் முடிவடைவதற்குள் திட்டதாரர் தன் முதலீடு முழுவதுமாக செலுத்தியிருந்தால், மேலே கூறப்பட்டிருப்பவற்றைத் தாண்டி கூடுதலாக போனஸ் சேர்த்து வழங்கப்படும்.