4 ஆண்டுகளில் கோடீஸ்வரர் ஆக வேண்டுமென்றால் LIC Jeevan Shiromani Policyயை நீங்கள் ட்ரை பண்ணுங்க.
இன்சூரன்ஸ் என்றாலே நமக்கெல்லாம் முதலில் நினைவுக்கு வருவது எல்ஐசி தான். காரணம் அதன் நம்பகத்தன்மை. எல்ஐசி பல அற்புதமான திட்டங்களை மக்களுக்காக கொடுத்து வருகின்றது. குழந்தைகள், பெரியோர், மாணவர்கள், திருமண வயதினர், மருத்துவம், ஓய்வுக்காலம் என பல தரப்பினருக்கும், பல்வேறுபட்ட தேவைகளுக்கும் அவ்வபோது நல்ல திட்டங்களை வழங்கி வருகிறது. இதனால், இந்திய மக்களில் பெரும்பாலானோர் எல்ஐசியின் நூற்றுக் கணக்கான பாலிஸி திட்டங்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்திருப்பார்கள்.
எல்லா வயதினருக்கும் எல்லா விதமான சம்பாத்தியக்காரர்களுக்கும் ஏற்றார் போல் எல்ஐசி திட்டம் இருக்கும்.
அப்படியொரு கவர்ச்சிகரமான திட்டம் தான் எல்ஐசி ஜீவன் ஷிரோமணி (LIC Jeevan Shiromani Policy ) பாலிஸி.
இந்த பாலிஸி High Net Worth Individuals or HNIs எனப்படும் அதிகமாக சொத்துகளை ஸ்டாக் மற்றும் பாண்டுகளில் வைத்திருப்பவர்களுக்கானது. இது அவர்களுக்கு மிகவும் லாபகரமானது. HNI பிரிவு மக்களிடம் அதிக செல்வம் இருந்தாலும் கூட குடும்பத்தை கவனிக்கும் நபர் இல்லாத நிலையில் அந்த குடும்பத்திற்கு நிலையான வாழ்க்கையை வழங்குவதே இந்தப் பாலிஸியின் நோக்கம்.
எல்ஐசி ஜீவன் ஷிரோமணி பாலிசி என்றால் என்ன?
எல்ஐசி இணையதளத்தில் இத்திட்டம் பற்றி தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. இது பங்குச்சந்தைகளுடன் இணைக்கப்படாத, தனிநபர் சார்ந்த ஆயுள் காப்பீடு மற்று சேமிப்பு திட்டம். இது லிமிடட் ப்ரீமியம் மனி பேக் வசதி கொண்டது. இதில் அடிப்படை உறுதித் தொகை ரூ.1 கோடி. உத்தரவாதம் உடைய கூடுதல் வைப்புகளானது முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.1000க்கு ரூ.50 என்ற வகையிலும், ஆறாவது ஆண்டில் இருந்து ரூ.1000க்கு ரூ.55 என்ற வகையிலும் அமையும்.
எல்ஐசி ஜீவன் ஷிரோமணி பாலிசி எடுக்க தகுதி என்ன?
எல்ஐசி ஜீவன் ஷிரோமணி பாலிசிதாரராக குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். அதிகபட்ச வயது 55.
55 வயதுடையவர்களுக்கு பாலிசி காலம் 14 வருடங்கள். 51 வயது மேற்பட்டவர்களுக்கு பாலிசி காலம் 16 ஆண்டுகள். 48 வயதுள்ளவர்களுக்கு 18 ஆண்டுகள், 45 வயதுடையவர்களுக்கு 20 ஆண்டுகள் என்று பாலிசி காலம் வேறுபடுகிறது. பாலிசிதாரர் 69 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க முடியாது என்ற வகையில் பாலிசி ஆண்டுகள் திட்டமிடப்பட்டுள்ளன.
எல்ஐசி ஜீவன் ஷிரோமணி திட்டத்தில் ஒரு கோடி பெறுவது எப்படி?
எல்ஐசி ஜீவன் ஷிரோமணி திட்டத்தில் ஒரு கோடி எப்படிப் பெறுவது என்று பார்ப்போம். இது 14, 16, 18 மற்றும் 20 ஆண்டுகளில் முதிர்ச்சி பெறும் தன்மை உடையது. பாலிசி தாரர் மாதம் ரூ.94,000 ப்ரீமியம் கட்ட வேண்டும். பாலிசி காலம் முழுவதும் ப்ரீமியம் தொகையை சரியாகக் கட்ட வேண்டும். ஓராண்டுக்கு ப்ரீமியம் தொகையை முறையாக செலுத்தினால், லோன் பெறலாம்.