என்பிஎஸ் திட்டத்தில் மாதம் ரூ.10 ஆயிரம் முதலீடு செய்தால் பென்ஷனாக ரூ.76,566 பெறலாம். தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்போருக்கு தான் ஓய்வுக்குப் பிந்தைய வாழ்க்கையைப் பற்றி பெரும் பயம் தொற்றிக் கொள்கிறது. அப்படி யோசிப்பவர்கள் தேசிய பென்ஷன் திட்டத்தில் (National Pension Scheme) தங்களை இணைத்துக் கொள்ளலாம்.
சம்பாத்தியத்தில் இருந்து குறிப்பிட்ட ஒரு தொகையை இளம் வயதிலிருந்தே சேமிக்க ஆரம்பித்தால் நிச்சயமாக அது வளர்ந்து விருட்சமாக நிற்கும். ஓய்வுக்குப் பின்னர் மாதம் ரூ.75 ஆயிரம் ஓய்வூதியம் என்பது உண்மையிலேயே ஒரு நல்ல தொகை.
NPS இரண்டு வகையான முதலீட்டு விருப்பங்களை வழங்குகிறது. அது, அடுக்கு I விருப்பம் மற்றும் அடுக்கு II விருப்பம் ஆகும்.
அடுக்கு I விருப்பம் என்பது என்பிஎஸ் திட்டத்தில் பங்கேற்க தனிநபர்கள் திறக்க வேண்டிய கட்டாயக் கணக்காகும். அடுக்கு II விருப்பமானது, அடுக்கு I விருப்பத்திற்கு கூடுதலாக தனிநபர்கள் திறக்கக்கூடிய தன்னார்வ கணக்காகும்.
NPS திட்டத்தின் கீழ், தனிநபர்கள் வருமான வரிச் சட்டத்தின் 80CCD (1B) பிரிவின் கீழ் ஆண்டுக்கு 50,000 ரூபாய் வரை வரி விலக்கு கோரலாம்.
NPS திட்டத்தில் தங்கள் முதலாளியால் செய்யப்பட்ட பங்களிப்புகளுக்கு, பிரிவு 80CCD (1C) இன் கீழ், அவர்கள் ஆண்டுக்கு 50,000 ரூபாய் வரை கூடுதல் வரி விலக்கு கோரலாம்.
இந்தத் திட்டத்தில் 60 வயதில் ஓய்வு பெற விரும்பும் 25 வயதுடைய நபர் நாள் ஒன்றுக்கு 200 ரூபாய் முதலீடு செய்தால், அவர்கள் 60 வயதில் சுமார் 50 லட்சம் ரூபாய் ஓய்வூதியக் கார்பஸைக் குவிக்க முடியும்.
இதன்மூலம் சராசரி ஆண்டு வருமானம் 8 சதவிகிதம் என்று வைத்துக் கொண்டால், இந்த தனிநபர் ஓய்வு பெற்ற பிறகு மாதத்திற்கு சுமார் 50,000 ரூபாய் ஓய்வூதியத்தைப் பெறலாம்.
என்.பி.எஸ். டயர் 2 கணக்கு
ஏற்கனவே என்.பி.எஸ் திட்டத்தை ஒரு முதலீட்டாளர் வைத்திருந்தால் அவரால் இந்த கணாக்கையும் துவங்க முடியும். அரசுப் பத்திரங்கள் மற்றும் இதர தொடர்புடைய கருவிகளில் முதலீடு செய்யும் NPS அடுக்கு II கணக்குத் திட்டம் G, கடந்த ஒரு வருடத்தில் இரட்டை இலக்க வருவாயைக் கொடுத்துள்ளது. ஆனாலும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் நபர்களுக்கு வருமான வரிவிலக்கு பிரிவு 80சியின் கீழ் கிடைக்காது.