Mutual Fund Tips: மியூட்சுவல் ஃபண்டில் இருந்து பணத்தை எடுக்க சரியான நேரத்தை தேர்வு செய்வது குறித்து கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
மியூட்சுவல் ஃபண்ட்:
பங்குச் சந்தை வீழ்ச்சியால் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளனர். சந்தை சரிவு காரணமாக, முதலீட்டாளர்களின் போர்ட்ஃபோலியோக்கள் வீழ்ச்சி கண்டுள்ளன. மியூச்சுவல் ஃபண்டுகளின் நிகர சொத்து மதிப்பு வீழ்ச்சி கண்டுள்ளதால், முதலீட்டாளர்களின் யூனிட்களின் மதிப்பீடு குறைந்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் தான், ஒரு மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர் தனது பணத்தை எப்போது எடுக்க வேண்டும்? முதலீட்டாளர்கள் சரியான நேரத்தை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும்? என்ற கேள்விகள் எழுகின்றன. நீங்களும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தேடுகிறீர்கள் என்றால், பதற்றம் கொள்ளத் தேவையில்லை. உங்கள் எல்லா கேள்விகளுக்கும் இங்கே பதில்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
மியூச்சுவல் ஃபண்டுகளில் இருந்து எப்போது பணம் எடுக்கலாம்?
இலக்கை நெருங்கிவிட்டீர்களா?
உங்கள் நிதி இலக்கை நெருங்கி, வலுவான வருமானத்தைப் பெற்றிருந்தால், நீங்கள் பணத்தை திரும்பப் பெறலாம். கல்வி அல்லது ஓய்வு போன்ற தேவைகளுக்காக திரட்டப்பட்ட நிதியின் இலக்கு முடிந்த பிறகு பணத்தை எடுப்பது நல்லது. குறைந்த ரிஸ்க் அல்லது நிலையான வருமான ஆதாரங்களில் பணத்தை முதலீடு செய்யலாம். இது ஆபத்தை குறைக்கிறது.
நிதியின் செயல்திறன்:
மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தின் செயல்திறன் அவ்வப்போது மதிப்பீடு செய்யப்பட வேண்டும். மதிப்பாய்வின் போது, உங்களது முதலீட்டு நிதி சரியாகச் செயல்படவில்லை என்றால், அதிலிருந்து வெளியேறுவது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும். மோசமாக செயல்படும் ஃபண்டில் இருந்து பணத்தை எடுத்து நல்ல ஃபண்டில் முதலீடு செய்யலாம்.
நிதியில் முக்கிய மாற்றங்கள்:
பல நேரங்களில் ஃபண்ட் ஹவுஸ் அதன் திட்டத்தில் பெரிய மாற்றங்களைச் செய்கிறது. ஃபண்ட் ஹவுஸ் செய்த மாற்றம் உங்கள் முதலீட்டு இலக்கை அடையவில்லை என்று நீங்கள் நினைத்தால், அந்த ஃபண்டிலிருந்து பணத்தை எடுப்பது நல்லது.
மிக முக்கியமான வேலை அல்லது அவசரநிலை
மிக முக்கியமான வேலை அல்லது அவசரநிலை இருந்தால், கடன் வாங்குவதற்குப் பதிலாக, மியூச்சுவல் ஃபண்டிலிருந்து பணத்தை எடுப்பதே சிறந்த முடிவாக இருக்கும். இதைச் செய்வதன் மூலம், உங்கள் நிதித் தேவைகளை எளிதாகப் பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல், கடன் வலையில் சிக்குவதையும் தவிர்க்கலாம்.