பணம் வேண்டாம் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். ஒரு வேளை பணம் வேண்டாம் என்று சொல்வதாக இருந்தால் கூட அதற்கும் பணம் தேவை என்பதே நிதர்சனம். பணம் சம்பாதிக்க, பெருக்க என ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியை பின்பற்றலாம். ஆனால் பணம் சில குறிப்பிட்ட பர்சனாலிட்டி இருப்பவர்களிடம் மட்டுமே அதிகமாக சேர்வதாக 2018-ம் ஆண்டு நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. இந்த ஐந்து குணங்கள் முக்கியமானவை.
ஒருவேளை இவை உங்களிடம் இல்லாமல் கூட இருக்கலாம். அதற்காக ஒரே நாளில் மாற முடிவெடுத்தால் அது நடக்காது. குறைந்தபட்சம் சில மாற்றங்களை செய்வதற்கான முயற்சிகளையாவது தொடங்கலாம்.
எக்ஸ்டிராவெர்ட் (extrovert)
சமூகத்துடன் இணைந்த நபர் என எளிமையாக புரிந்துகொள்ளலாம். சாதனையாளர்களோ, பணம் சம்பாதிக்க நினைப்பவர்களோ தனியாக எதுவும் செய்ய முடியாது. சமூகத்துடன் இணைந்தே செய்ய முடியும். பணியாளர்கள், நண்பர்கள், உறவினர்கள் என சுற்றி இருப்பவர்களிடம் இயல்பாக இருப்பவர்களால் அதிகமாக சாதிக்க முடியும் என தெரியவந்திருக்கிறது.
SBI Accidental Coverage: விபத்து காப்பீடு ரூ.2 லட்சம்.. எஸ்பிஐ புதிய அறிவிப்பு - விவரம்!
அதற்காக இண்டாரவெர்ட் நபர்களால் சாதிக்க முடியாது என்று சொல்ல முடியாது. இந்த பிரிவில் சில பெரிய வெற்றியை அடைந்திருக்கிறார்கள். அதேபோல எக்ஸ்டிராவெர்ட் நபர்கள் எப்போது சமூகத்துடன் இருப்பதால் அவர்களால் தனியாகவே இயங்க முடியாது. அதனால் கவனம் சிதறவும் வாய்ப்பு இருக்கிறது. இருந்தாலும் எக்ஸ்டாராவெர்ட் பர்சனாலிட்டி நபர்களிடம் அதிக பணம் சேருகிறது.
நீண்ட காலத்தை நம்புகிறவர்கள்
தற்போதைய கல்லூரி முடித்தவர்கள் அனைத்து செயல்களிலும் instant gratification எதிர்பார்க்கிறார்கள். இன்றைக்கு மரம் வைத்து இன்றே அதன் பயனை அனுபவிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். இன்றைய பலன்களில் கவனம் செலுத்தினால் பெரிய பணம் சம்பாதிக்க முடியாது. நீண்ட கால நோக்கத்தில் இருந்தால்தான் பெரிய பணம் சம்பாதிக்க முடியும். குறுகிய கால நோக்கமே இலக்காக இருக்கும்போது நல்ல முடிவுகள் எடுக்க முடியாது. நீண்ட கால நோக்கத்தில் செயல்பட்டால் இன்று இல்லாவிட்டாலும் நாளை பணம் கிடைக்கும். ஆனால் இன்று பணம் கிடைக்கவில்லை என்று வேறு முடிவை எடுத்தால் இன்றும் பணம் கிடைக்காது. நாளையும் பணம் கிடைக்காது என்பதே உண்மை. குறுகிய கால லாப நஷ்ட கணக்குகளை தவிர்த்துவிடுங்கள்.
நிலையான மனநிலை
முடிவெடுக்கும்போது நிலையான மனநிலையில் இருந்தால் மட்டும் அந்த முடிவு சரியானதாக நீண்ட காலத்துக்கானதாக இருக்கும். உணர்ச்சி வசப்பட்டு எடுக்கும் எந்த முடிவும் அந்த நொடிக்கான முடிவாக மட்டுமே இருக்கும். மேலும் கவலை, பயம், கலக்கமான மனநிலை போன்றவை முடிவுகளை பாதிக்கும். இதுபோன்ற எமோஷனலுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்தால் மட்டுமே வெற்றியை சந்திக்க முடியும்.
சுயத்தை அறிதல்
தன்னை அறிந்தால் மட்டுமே, நம்மால் என்ன முடியும் என்பது தெரியும். அப்போதுதான் எவ்வளவு வெற்றி அடைய முடியும் என்பதை அறிய முடியும். ஆனால் அதே சமயம் வெற்றி என்பது கூட்டு முயற்சியே தவிர, தனிப்பட்ட நபர்களுக்கு கிடைத்தல்ல என்னும் புரிதலும் அவசியம். தனிப்பட்ட நபரின் சிந்தனையில் பலரின் முயற்சி இருந்தால் மட்டுமே வெற்றி சாத்தியம். வெற்றி அடைந்தால் பணம் அதனை பின் தொடரும்.