குடும்பத்தின் நிதிப் பாதுகாப்பு என வரும்போது, எல்ஐசி பல ஆப்ஷன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. அவற்றில் எல்ஐசி ஜீவன் சாரல் திட்டம் மிகவும் பாதுகாப்பான தேர்வாகும். எல்.ஐ.சி ஜீவன் சாரல் என்பது ஒரு எண்டோவ்மென்ட் திட்டமாகும், இதில் காப்பீடு வாங்குபவர் பிரீமியம் செலுத்தும் தொகை மற்றும் முறை ஆகியவற்றை அவரே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். 40 வயது முதல் 80 வயது வரை உள்ளவர்கள் இந்தத் திட்டத்திற்குத் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
எல்ஐசி ஜீவன் சாரல் திட்டம்
எல்ஐசி இணையதளத்தின்படி, எல்ஐசி ஜீவன் சாரல் திட்டம் என்பது இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (ஐஆர்டிஏஐ) வழிகாட்டுதல்களின்படி நிலையான உடனடி வருடாந்திரத் திட்டமாகும், இது அனைத்து ஆயுள் காப்பீட்டாளர்களுக்கும் ஒரே மாதிரியான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், பாலிசிதாரருக்குக் கிடைக்கும் இரண்டு ஆப்ஷன்களில் இருந்து வருடாந்திரத் தொகையைத் தேர்ந்தெடுக்கும் ஆப்ஷன் உள்ளது.
செலுத்தவேண்டியதும் பெறுவதும்
எல்ஐசி சாரல் பென்ஷன் திட்டம் முதலீட்டாளர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு பிரீமியம் செலுத்துவதன் மூலம் ரூ.12,000 பெற அனுமதிக்கிறது. பாலிசிதாரர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது வருடாந்திர ஓய்வூதியத்தைத் தேர்ந்தெடுக்கலாம். பாலிசிதாரர் அல்லது நாமினி 60 வயதை அடைந்தவுடன் ஓய்வூதியம் கிடைக்கத் துவங்கும். குறைந்தபட்ச வருடாந்திரம் ஆண்டுக்கு ரூ.12,000முதல் தொடங்குகிறது, அதிகபட்ச வரம்பு இல்லை. ஒரு நபர் 10 லட்சம் ரூபாய் பிரீமியமாக டெபாசிட் செய்தால், அவருக்கு ஒவ்வொரு ஆண்டும் 52,500 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும். பாலிசி காலம் முழுவதும் அல்லது அதற்கு முந்தைய இறப்பு வரை பிரீமியம் தொகை தானாகவே சம்பளத்திலிருந்து கழிக்கப்படும்.
பணம் பெரும் முறைகள்
எல்ஐசி சாரல் பென்ஷன் யோஜனாவின் கீழ் தேர்வு செய்ய இரண்டு ஆப்ஷன்கள் உள்ளன. ஒன்று செலுத்தும் தொகையை 100 சதவிகிதம் வருவாயுடன் வருடாந்திரம் பெறுவது. இதில் பாலிசியின் பலன்கள் முதலீட்டாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும், இது பாலிசிதாரர் உயிருடன் இருக்கும் வரை மாதாந்திர பணம் செலுத்துவதாக உறுதியளிக்கிறது. மற்றொன்று பாலிசிதாரர் இறந்தவுடன் மொத்த தொகையும் 100 சதவிகிதம் திரும்பக் கிடைக்கும் திட்டமாகும். இந்த ஆப்ஷன் கணவன் மற்றும் மனைவி அந்த ஓய்வூதியத்தைப் பெற அனுமதிக்கிறது. திட்டம் தொடங்கி ஆறு மாதங்களுக்குப் பிறகு பாலிசிதாரர் அதன் மீது கடன் பெரும் வசதியும் இதில் உண்டு.
பாலிசியை பெறுவது எப்படி?
பாலிசியின் தொடக்கத்தில் வருடாந்திர விகிதங்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்படுகின்றன, மேலும் வருடாந்திர தொகை ஆனது பெறுபவரின் வாழ்நாள் முழுவதும் செலுத்தப்படும். இந்த திட்டத்தை எல்ஐசியின் இணையதளமான www.licindia.in மூலம் ஆஃப்லைனிலும் ஆன்லைனில் வாங்கலாம் என்று எல்ஐசி தெரிவித்துள்ளது. இந்த பாலிசியை பெற விரும்புபவர்கள் முகவரிச் சான்று மற்றும் பிற KYC ஆவணங்களுடன் துல்லியமான மருத்துவ விவரங்களுடன் ஒரு விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும். மேலும், காப்பீட்டுத் தொகை மற்றும் நபரின் வயதைப் பொறுத்து தேவைப்படும் பட்சத்தில் மருத்துவப் பரிசோதனைகள் செய்யவேண்டி வரலாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்