கொரோனா போடுற ஆட்டத்தப் பார்த்தா ஏதாவது ஒரு இன்சூரஸாவது போட்டு வைக்கணும்னு நினைக்காதவர்களே இருக்கமாட்டோம்.


இன்சூரன்ஸ் என்றாலே நமக்கெல்லாம் முதலில் நினைவுக்கு வருவது எல்ஐசி தான். காரணம் அதன் நம்பகத்தனமை. எல்ஐசி பல அற்புதமான திட்டங்களை மக்களுக்காக கொடுத்து வருகின்றது.  குழந்தைகள், பெரியோர், மாணவர்கள், திருமண வயதினர், மருத்துவம், ஓய்வுக்காலம் என பல தரப்பினருக்கும், பல்வேறுபட்ட தேவைகளுக்கும் அவ்வப்போது நல்ல திட்டங்களை வழங்கி வருகிறது.


இப்படியாக இன்சூரன்ஸ் திட்டம் உள்ளவர்களுக்காக, எல்ஐசி சூப்பரா ஒரு பென்ஷன் திட்டத்தை அறிவித்திருக்கிறது. 40 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பயன்பெறும் வகையில் இத்திட்டம் உள்ளது.


என்னென்ன சிறப்பம்சங்கள்?


இந்தத் திட்டத்தின் பெயர் சரல் பென்ஷன் திட்டம் (Saral Pension). ஜூலை 1ம் தேதி முதல் இத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது.


இந்தத் திட்டத்தில் சேர குறைந்தபட்ச வயது வரம்பு 40. அதிகபட்ச வயது வரம்பு 80.


நீங்கள் இந்தப் பாலிசியை எடுத்துக் கொள்ளும்போதே, ஆண்டுத்தொகை உத்தரவாதம் அளிக்கப்பட்டுவிடும்.


அதன்படி, ஆண்டுக்கு குறைந்தபட்சமாக ரூ.12,000 செலுத்த வேண்டும். அப்பர் லிமிட் எனப்படும் அதிகபட்ச ப்ரீமியத்துக்கு வரம்பு இல்லை. அதை நீங்களே நிர்ணயம் செய்து கொள்ளலாம்.


ப்ரீமியத்தை செலுத்த ஆண்டு, காலாண்டு, அரையாண்டு என மூன்று தவணை வசதியும் உள்ளது.


இந்த பாலிசியிலும் தனிநபர், ஜாயின்ட் என்று இரண்டு வகைகள் உள்ளன. இரண்டு வகையிலுமே 100% பிரீமியம் திரும்பப் பெறும் வசதி உள்ளது.


சரல் பென்ஷன் திட்டத்தில் சேர்ந்தால் குறைந்தபட்சம் ரூ.1000 பென்ஷனாவது கிடைக்கும்.


இவற்றையெல்லாம்விட பம்பர் சலுகை போல், இத்திட்டத்தில் சேர்ந்த 6-வது மாதமே கடன் தொகையும் பெற்றுக்கொள்ளலாம். பாலிசியின் கீழ் வழங்கக்கூடிய அதிகபட்ச கடன் தொகையின் அளவு,  வருடாந்திர தொகையில் 50 சதவீதத்தை தாண்டாது. பாலிசியின் கீழ் செலுத்த வேண்டிய வருடாந்திர தொகையிலிருந்து கடன் வட்டி மீட்கப்படும்.


அதேபோல், 6 மாதத்திற்குப் பின் பாலிசியை சரண்டரும் செய்துகொள்ளலாம்.


ஒருவேளை பாலிசி காலத்தின் போது பாலிசிதாரர் உயிரிழக்க நேரிட்டால், அவரின் வாரிசுக்கு (நாமினிக்கு) பிரீமியம் தொகை அளிக்கப்படும். இந்த பாலிசியின் ஒரே பின்னடைவு என்று கணக்கிட்டால் அது இதில் முதிர்ச்சி பலன் என்பது கிடையாது என்பது மட்டுமே.


எப்படி, எங்கே சேர்வது?


சரல் பென்ஷன் திட்டம் உங்களுக்கு லாபகரமானதாக இருக்கும் என நீங்கள் உணர்ந்தீர்கள் என்றால், உடனே தாமதிக்காமல் இந்தத் திட்டத்தில் சேர்ந்துவிடுங்கள்.


நேரடியாக எல்ஐசி கிளையிலேயோ அல்லது licindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்திலோ இந்த பாலிசியை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.


இத்தனை சலுகைகள் கொண்ட எல்ஐசியின் சரல் திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. லைஃப்லாங் பென்ஷன்; ஒரே ப்ரீமியம் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது எனக் கூறுகின்றனர் இன்சூரன்ஸ் துறை அறிந்தவர்கள்.