இந்தியாவில் மக்களுக்கு பயன்பெறக்கூடிய சேமிப்புத் திட்டங்களில் தொடர் வைப்பு நிதி அதாவது ஆர்.டி சேமிப்புக் கணக்கு முக்கியமான ஒன்றாக உள்ளது.  ஓராண்டு முதல் 5 ஆண்டுகள் என சேமிக்கும் தொகைக்கு வட்டியுடன் முதிர்வு தொகையினை பெறக்கூடிய நிலையில் மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதங்களில் அதிக சலுகைகள் கிடைக்கப்பெறுகின்றன.


நம் வாழ்க்கையினை நடத்துவதற்கு வருமானம் என்பது முக்கியமான ஒன்றாக உள்ளது. என்னதான் மாத வருமானம் வாங்கினாலும்  அதற்கான செலவுகள் நாளுக்கு நாள் அதிகரிக்கத்தான் செய்கின்றது. இந்த நிலையில் எதிர்காலத்தினைக் கருத்தில் கொண்டு பணத்தினை சேமிக்க வேண்டும் என்று நினைப்பவர்களில் பெரும்பாலும் தொடர் வைப்பு நிதி அதாவது ஆர். டி கணக்கினை துவங்குகின்றனர். நம்மால் முயன்ற சிறிய தொகையினை செலுத்திக்கூட தொடங்க முடியும் என்பதால் இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் அனைவரும் பல ஆண்டுகளாக இதனை நல்ல சேமிப்புத் திட்டமாக கருதி வருகின்றனர்.


இந்த ஆர்.டி கணக்கினை வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களில் துவங்கி மாதத்தோறும் பணத்தினைச் செலுத்தலாம். மேலும் நாம் ஒரு முறை எவ்வளவு தொகை கட்டப்போகிறோம்? என்று நிர்ணயித்துக்கொண்டால் அதனை திருப்பி மாற்ற முடியாது என்ற நடைமுறை உள்ளது. குறிப்பாக எஸ்.பி.ஐ வங்கி மற்றும் தபால் அலுவலகங்களில் வாடிக்கையாளர்களின் வசதிக்காக வட்டி விகிதங்களில் பல்வேறு மாறுபடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது.  என்னென்ன சமீபத்திய வட்டிகளை எஸ்.பி.ஐ மற்றும் தபால் அலுவலக ஆர்.டி கணக்குகள் வழங்குகின்றது என தெரிந்துகொள்வோம்.


 


எஸ்.பி.ஐ வங்கியின் சமீபத்திய வட்டி விகிதங்கள்:



  1. பொதுமக்களுக்கு எஸ்.பி.ஐ வங்கியின் ஆர்.டி கணக்கிற்கான வட்டி விகிதங்கங்கள் 5%- 5.4% என்று மாறுபடுகின்றன. மற்றும் மூத்த குடிமக்களுக்கள் வங்கியில் ஆர். டி கணக்குகள் வைத்திருக்கும் பட்சத்தில் கூடுதலாக 50 பைசா ( 50 paise point)வழங்கப்படுகிறது.

  2. எஸ்.பி ஐ வங்கியில் ஓராண்டு முதல் 10 ஆண்டுகள் வரை ஆர்.டி கணக்கு துவங்குவதற்கான முதிர்வு காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  3. குறைந்த பட்சம் ரூ.100 ரூபாயினைக்கொண்டே வங்கியில் ஆர்.டி கணக்கில் பணத்தினை செலுத்திக்கொள்ளலாம். மேலும் இவ்வளவு தான் செலுத்த வேண்டும் என்ற அதிகபட்ச வரம்பு இல்லை.


மேலும் 1ஆண்டு, 3 ஆண்டுகள், 5 ஆண்டுகள் என திட்டத்திற்கு ஏற்ப ஆர்.டி கணக்கிற்கான வட்டி விகிதங்கள் மாறுபடுகின்றன. ஆனால் வழக்கமான சேமிப்புக் கணக்கில் வாடிக்கையாளர்களுக்கு எவ்வளவு வட்டி கிடைக்குமோ? அதை விட 1 சதவீதம் அதிகமாகத் தான் ஆர்.டி கணக்கிற்கு கொடுக்கப்படுகிறது. குறிப்பாக ஜனவரி 2021 ல் எஸ்.பிஐ வங்கியின் ஆர்.டி கணக்கிற்கான வட்டி விகிதங்களில் மாறுபாடுகள் ஏற்பட்டுள்ளது. அதன்படி,.


 1 ஆண்டு முதல் 2 ஆண்டுகளுக்கும் குறைவானது - 4.9%


2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகளுக்கு குறைவானது - 5.1%


3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் குறைவானது - 5.3%


5 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகள் வரை - 5.4%


என்ற அடிப்படையில் வட்டி விகிதங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.



 தபால் அலுவலகத்தில் ஆர். டி கணக்கிற்கான சமீபத்திய வட்டி விகிதங்கள்:


இது ஒருபுறம் இருக்க, தபால் அலுவலகங்களில் தொடர் வைப்பு நிதி அதாவது ஆர்.டி கணக்கிற்கு எத்தனை சதவீதம் வட்டி மற்றும் அதன் முதிர்வு காலம் என்ன என்பதனை தெரிந்து கொள்வோம். தபால் அலுவலகங்களில் 5 ஆண்டுகளுக்கான ஆர்.டி கணக்குகள் துவங்கப்படுகிறது.


இதில் மாதம் ரூ.10 அல்லது அதற்கு மேல் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் செலுத்திக்கொள்ளலாம். அதிகபட்ச வரம்பு இல்லை. ஆனால்  நாம் முதலில் எவ்வளவு தொகையினை கட்டி தொடங்குகிறோமோ? அதனைத்தான் தொடர்ந்து ஆர்.டி கணக்கில் செலுத்த வேண்டும். 5 ஆண்டுகளுக்கு காலாண்டு வட்டியுடன் 5.8 சதவீத வட்டியுடன் முதிர்வுத்தொகையினை மக்கள் பெற முடியும். குறிப்பாக கடந்த ஏப்ரல் 1, 2021 ஆம் ஆண்டு தபால் அலுவலகங்கள் 5 ஆண்டுகளுக்கான தொடர்ச்சியான வைப்பு நிதிக்கணக்கினை கொண்டுள்ளது.