PPF Scheme benefits: PPF திட்டம் மூலம் நீங்கள் ரூ.1.03 கோடி பெற்று கோடீஸ்வரர் ஆகலாம் 


பல ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய அரசாங்கத்தால் 1968 இல் நிதி அமைச்சகத்தின் தேசிய சேமிப்பு நிறுவனத்தால் தொடங்கப்பட்ட திட்டம் பப்ளிக் ப்ரொவிடென்ட் ஃபண்ட் (PPF) திட்டம். சிறு சேமிப்பாளர்களுக்கு, வரி சேமிப்பு செய்ய விருப்பம் உள்ளவர்களுக்கு பயனளிக்கும் இந்த திட்டம் இந்தியாவில் மிகவும் பிரபலம். 


PPF வட்டி விகிதம் மற்றும் முடிவு காலம்:


தற்போது இந்த திட்டத்திற்கு மாதாந்திர அடிப்படையில் 7.1% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. PPF கணக்கில் 15 ஆண்டுகள் வரை பணத்தை முதலீடு செய்யலாம். 15 ஆண்டுகளுக்கு மேலும் முதலீட்டாளர்கள் தொடர்ந்து இத்திட்டத்தை அவர்களின் தேவைக்கேற்ப காலத்தை நீட்டித்துக் கொள்ளலாம். இதற்கு PPF கணக்கு நீட்டிப்பு படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் இந்த காலநீட்டிப்பு 5 வருட பகுதிகளாக மட்டுமே நீட்டிக்கமுடியும். PPF கணக்ககில் ஆண்டுக்கு ரூ. 500 முதல் ரூ.1.5 லட்சம் வரையிலும் முதலீடு செய்யலாம். 



ரூ.1.03 கோடி எப்படி பெறுவது?


நல்ல வட்டி, ஆபத்து இல்லாத முதலீடு, வரி விலக்கு என பல நன்மைகளை தருவதோடு முறையாக முதலீடு செய்து வருவதால் 1 கோடி ரூபாய் வரை முதிர்வு  தொகையை திருப்ப பெறலாம். ஆனால் அதற்கு முதலீட்டாளர்கள் குறிப்பிட்ட முறையை பின்பற்ற வேண்டும். ஒரு நாளைக்கு ரூ. 417 முதலீடு செய்தால் ஒரு மாதத்திற்கு ரூ. 12,500, ஒரு வருடத்திற்கு ரூ. 1,50,000 வரை சேமிக்க முடியும். 15 ஆண்டுகளில் ரூ. 40.58 லட்சமாக இருக்கும். அதன் பிறகு ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் இரண்டு முறை பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டும். 25 வயது தொடங்கி 50 வயது வரை இந்த திட்டத்தின் மூலம் முறையாக செலுத்தி வந்தால் முடிவு தொகையாக ரூ.1.03 கோடி கிடைக்கும். வட்டி மட்டுமே 66 லட்சமாக இருக்கும் மற்றும் மொத்த தொகைக்கும் வட்டி விலக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நீங்கள் டெபாசிட் செய்த மொத்தத் தொகை ரூ.37 லட்சமாக இருக்கும். 


குறைந்த முதலீடு ரூ. 500:


இந்த திட்டத்தில் மாதந்தோறும் வட்டி கணக்கிடப்படுவதால் உங்கள் முதலீடு மூலம் அதிக வருமானம் பெறுவதற்கு ஒவ்வொரு மாதமும் 1 முதல் 5 ஆம் தேதிக்குள் பணத்தை டெபாசிட் செய்வதே சிறந்த வழியாகும். இருப்பினும் அந்த தேதிக்குள்தான் செலுத்த வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. இந்த திட்டம் அடிப்படையிலேயே நெகிழ்வானது அதனால் தனிநபர்கள் தங்கள் கணக்குகளில் ஆண்டுக்கு குறைவான முதலீடான ரூ. 500 முதல் சேமித்து கொள்ளலாம்.