பாலிசிதாரர் மாதம் இந்த திட்டத்தில் ரூ. 800 சேமித்தால் போதும் 25 ஆண்டுகள் கழித்து வட்டியுடன் உங்கள் கைக்கு வரும் பணம் 5.25 லட்சம் ரூபாய் கிடைக்கப்பெறும் திட்டம் தான் எல்.ஐ.சியின் ஜீவன் லாப் திட்டம்.
நாம் பாதுகாப்பாகவும் எந்தவித ரிஸ்க் இல்லாமலும் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைத்தால் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது எல்.ஐ.சி காப்பீட்டு திட்டங்கள் தான். பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை என அனைவருக்கும் ஏற்ற பல காப்பீட்டு திட்டங்கள் எல்.ஐ.சியில் உள்ளது. அதில் ஒன்று தான் ரிஸ்க் எதுவும் இல்லாத எல்.ஐ.சியின் ஜீவன் லாபம் திட்டம். அப்படி என்ன அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளது? யார் யாரெல்லாம் இந்த பாலிசியைப்பெறுவதற்கு தகுதிவாய்ந்தவர்கள் என தெரிந்துகொள்ளலாம்.
எல்.ஐ.சியின் ஜீவன் லாபம் திட்டத்தின் அம்சங்கள்:
ஜீவன் லாபம் ஒரு தனி பாலிசி திட்டமாகும்.
எல்.ஐ.சியில் ஜீவன் லாப திட்டத்தில் 8 வயது முதல் 59 வயது வரையிலான அனைவரும் இந்த பாலிசியில் முதலீடு செய்ய முடியும்.
16 முதல் 25 ஆண்டுகள் வரை பாலிசிதாரர்கள் ஜீவன் லாப பாலிசியைத் தேர்வு செய்துக்கொள்ளலாம்.
குறிப்பாக இந்த பாலிசியில் பாலிசிதாரர் மெசூரிட்டி காலத்திற்கு முன்னதாக இறந்துவிட்டாலும் இந்த பாலிசியின் அனைத்துப்பயன்களும், யார் நாமினியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்களோ? அவர்களுக்கு கிடைக்கப்பெறும். எனவே நாமினியைத் தேர்வு செய்யும் போது கவனமாகவும், நமக்குப்பின்னால் யாருக்கு உபயோகமாக வேண்டும் என்பதை புரிந்து தேர்ந்தெடுக்க வேண்டும்.
பாலிசிதாரர் மாதம் இந்த திட்டத்தில் ரூ. 800 சேமித்தால் போதும் 25 ஆண்டுகள் கழித்து வட்டியுடன் உங்கள் கைக்கு வரும் பணம் 5.25 லட்சம் ரூபாய் கிடைக்கப்பெறும்.
இத்திட்டத்தைப்பொறுத்தவரை முதலீட்டாளர்களுக்கு விருப்பம் இருந்தால் நேரடியாகவே இந்த திட்டத்தில் முதலீடு செய்துக்கொள்ளலாம். பங்குசந்தையில் எந்த ஏற்ற இறக்கம் கண்டாலும் இத்திட்டத்தின் மூலம் எந்த பாதிப்பும் ஏற்படாது. எனவே தான் இதனை ரிஸ்க்கே இல்லாத பாலிசி என்று நாம் கூறுகிறோம்.
எனவே குழந்தைகளின் எதிர்காலத்தைக்கருத்தில் கொண்டு இந்த திட்டத்தை பாலிசிதாரர்கள் தேர்ந்தெடுக்கலாம். இன்றைய காலக்கட்டத்தில் திருமணம், கல்விக்கு தான் அதிக பணம் செலவாகும் என்பதால் ஜீவன் லாப திட்டத்தை நிச்சயம் நீங்கள் தேர்வு செய்துக்கொள்ளலாம். குறிப்பாக இந்த பாலிசி 25 ஆண்டு காலம் என்பதால் அதிக வட்டியை நிச்சயம் நம்மால் பெறமுடியும்.
மேலும் இந்த பாலிசியைத் தேர்ந்தெடுத்து தொடர்ந்து பணம் செலுத்தி வந்த நிலையில், 3 ஆண்டுகளுக்குப்பிறகு இதில் கடன் கூட நம்மால் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் இந்த திட்டத்தில் போனஸூம் உள்ளதால் பாலிசிதாரர்கள் கூடுதல் நன்மை அடைவார்கள்.
குறிப்பாக இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக எல்.ஐ.சியில் ரூ.1000க்கு கீழ் முதலீடு செய்தால், 5 லட்சம் வரை லாபம் பார்க்ககூடிய திட்டமாகவும்ஜீவன் லாபம் பார்க்கப்படுகிறது.
அனைத்துத் தரப்பட்ட மக்களும் தங்களுடைய குழந்தைகள் மற்றும் குடும்பத்தேவைகளைக்கருத்தில் கொண்டு இத்திட்டத்தைத்தேர்வு செய்யலாம்.. மேலும் இத்திட்டங்கள் குறித்த கூடுதல் விவரங்களை அருகில் உள்ள எல்.ஐ.சி முகவர்கள் மற்றும் எல்.ஐ.சியில் இணையதள முகவரியில் தெரிந்துக்கொள்ளலாம்.