Housing Loan Interest Rate: இந்திய ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதத்தை கடந்த இரண்டு வருடத்தில் மிகப்பெரிய அளவில் குறைத்துள்ள நிலையில், வங்கிகளின் வாராக் கடன் சுமையைக் குறைக்கவும், வர்த்தகத்தை வலிமைப்படுத்தவும் வங்கிகள் கையில் எடுத்துள்ள மிக முக்கியமான திட்டம் தான் வீட்டுக் கடன்(Housing Loan). நாட்டின் முன்னணி தனியார் வங்கிகள் பொதுத்துறை வங்கிகளுக்கு இணையாகப் போட்டிப்போட்டு வட்டியைக் குறைக்கும் காரணத்தால் வரலாற்றிலேயே மிகவும் குறைந்த வட்டியை தற்போது வங்கிகள் வழங்கி வருகிறது. இந்திய பொருளாதாரமும், வர்த்தகச் சந்தையும் கொரோனா 2வது அலையில் இருந்து வேகமாக மீண்டு வரும் நிலையில் முழுமையான வளர்ச்சியை அடைய இந்தப் பண்டிகை கால வர்த்தகத்தை மட்டுமே நம்பியிருக்கும் நிலை உருவாகியுள்ளது. முதல் கொரோனா அலையில் பண்டிகை காலம் பெரிய அளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பண்டிகை காலத்தில் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற வேண்டும் என்பதற்காக நாட்டின் முன்னணி வங்கிகளில் ஒன்றான கோட்டக் மஹேந்திரா வங்கி, பண்டிகை காலத்திற்காகவே ஸ்பெஷல் ஹோம் லோன் வட்டி விகிதத்தை அறிவித்துள்ளது.



செப்டம்பர் 20 முதல் கோட்டக் மஹேந்திரா வங்கியில் கடன் தொகையை வித்தியாசம் இல்லாமல் அனைத்து ஹோம் லோன்களுக்கும் 6.5 சதவீதம் என நிலையான வட்டி விகிதம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 20 லட்சம் ரூபாய் என்றாலும் சரி 5 கோடி ரூபாய் என்றாலும் சரி அனைத்து வீட்டுக் கடன்களுக்கும் 6.7 சதவீத வட்டி மட்டுமே. பொதுவாக வங்கிகளில் கடன் அளவு பொருத்து வட்டி விகித அளவீடுகள் மாறும், ஆனால் பண்டிகை காலத்தில் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற வேண்டும் என்பதற்காக நிலையான அனைத்து வீட்டுக் கடன்களுக்கும் 6.5 சதவீதம் வட்டியை அறிவித்துள்ளது கோட்டக் மஹேந்திரா வங்கி. இந்த 6.5 சதவீத வட்டி என்பது நவம்பர் 8 வரையில் மட்டுமே இருக்கும் எனவும் கோட்டக் மஹேந்திரா வங்கி அறிவித்துள்ளது. இதேபோல் கோட்டக் மஹேந்திரா வங்கியில் வீட்டுக் கடன் பெற வேண்டும் என்றால் வங்கிக்கோ அல்லது ஆன்லைன் வாயிலாகவோ பெறலாம். தற்போது வங்கிகளில் மிகவும் குறைந்த அளவிலான கடன் ஆவணங்களை மட்டுமே பெறும் காரணத்தாலும் வேகமாகக் கடன் விண்ணப்பத்திற்கு ஒப்புதல் அளிக்கப்படும் காரணத்தால் எளிதாகவும், விரைவாகவும் கடனை பெற முடியும். மற்ற வங்கிகளில் வீட்டுக் கடனுக்கு எவ்வளவு வட்டி விகிதம்?



வங்கிகளில் வீட்டுக் கடன் வட்டி விகிதம் என்ன? | Housing Loan Interest Rates in Banks?:


சிட்டி வங்கி - 6.75 சதவீதம்


யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா - 6.80 சதவீதம்


பேங்க் ஆஃப் பரோடா - 6.75 சதவீதம்


சென்டரல் பேங்க் ஆப் இந்தியா - 6.85 சதவீதம்


பேங்க் ஆஃப் இந்தியா - 6.85 சதவீதம்


ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா - 6.75 சதவீதம்


ஹெச்டிஎஃப்சி வங்கி - 6.70 சதவீதம்


ஐசிஐசிஐ வங்கி - 6.90 சதவீதம்


எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் - 6.90 சதவீதம்


ஆக்சிஸ் வங்கி - 6.90 சதவீதம்


கனரா வங்கி - 6.90 சதவீதம்


பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி - 6.85 சதவீதம்


IDFC முதல் வங்கி - 6.90 சதவீதம்


மஹாராஷ்டிரா வங்கி - 6.90 சதவீதம்


இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - 7.05 சதவீதம்


பஞ்சாப் நேஷனல் வங்கி - 6.95 சதவீதம்


யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா - 8.00 சதவீதம்


UCO வங்கி - 6.90 சதவீதம்


டிபிஎஸ் வங்கி - 7.30 சதவீதம்


ஐடிபிஐ வங்கி - 6.95 சதவீதம்


எச்எஸ்பிசி வங்கி - 6.64 சதவீதம்


கரூர் வைஸ்யா வங்கி - 7.20 சதவீதம்


சரஸ்வத் வங்கி வீட்டுக் கடன் - 6.70 சதவீதம்


ஜம்மு காஷ்மீர் வங்கி - 7.20 சதவீதம்


சௌத் இந்தியன் பேங்க் - 7.85 சதவீதம்


பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் - 7.35 சதவீதம்


பெடரல் வங்கி - 7.65 சதவீதம்


ஸ்டாண்டர்டு சார்ட்டட் வங்கி - 7.99 சதவீதம்


ஆவாஸ் பைனான்சியர்ஸ் - 8.00 சதவீதம்ட


கர்நாடக வங்கி - 7.50 சதவீதம்


சுந்தரம் ஹோம் பைனான்ஸ் - 6.95 சதவீதம்


தனலட்சுமி வங்கி - 7.85 சதவீதம்


டாடா கேப்பிடல் - 6.90 சதவீதம்


தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கி - 8.25 சதவீதம்


ஐஐஎஃப்எல் - 10.50 சதவீதம்


DHFL ஹவுசிங் பைனான்ஸ் - 8.75 சதவீதம்


பந்தன் வங்கி - 8.50 சதவீதம்


யெஸ் வங்கி - 8.95 சதவீதம்


ஹட்கோ வீட்டுக்கடன் - 9.45 சதவீதம்


இந்தியாபுல்ஸ் - 8.65 சதவீதம்


ஆதித்யா பிர்லா - 9.00 சதவீதம்


ஜிஐசி வீட்டுவசதி நிதி - 7.45 சதவீதம்


ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் - 9.75 சதவீதம்


ஸ்ரீராம் ஹவுசிங் - 8.90 சதவீதம்


இந்தியா ஷெல்டர் பைனான்ஸ் - 12.00 சதவீதம்


ஆக, நாட்டிலேயே குறைந்த வட்டி விகிதத்தில் தற்போது வீட்டு கடன்களை வழங்கிக்கொண்டிருப்பது கோட்டக் மஹேந்திர வங்கி தான்.