பென்ஷன் விதிகளில் மாற்றம்


அக்டோபர் 1, 2021 முதல் 80 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய ஓய்வூதியதாரர்கள், நவம்பர் 30, 2021 வரை ஓய்வூதியத்திற்கான டிஜிட்டல் லைஃப் சர்டிபிகேட் (Digital Life Certificates) சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 80 வயதுக்குட்பட்ட ஓய்வூதியதாரர்கள் நவம்பர் 1 முதல் நவம்பர் 30 வரை டிஜிட்டல் லைஃப் சர்டிபிகேட் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆட்டோ டெபிட்


புதிய விதிகளின் படி, அக்டோபர் 1 முதல் அனைத்து ஆட்டோ பரிவர்த்தனைகளுக்கும் Additional Factor Authentication வரம்பிற்குள் கொண்டு வரப்படும். இதன் மூலம் பணம் செலுத்துவதற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதா? என்பதை உறுதிப்படுத்த 5,000 ரூபாய்க்கு மேலான பரிவர்த்தனைகளுக்கு ஒன் டைம் பாஸ்வர்ட் (OTP) தேவைப்படும். இதற்காக எஸ்.எம்.எஸ் மற்றும் இமெயில் மூலம் அனுப்புவார்கள். இதன்மூலம் அக்கவுன்ட் வைத்திருப்பவரின் அறிவிற்கு செல்லாமல் பணம் இனி பரிவர்த்தனை ஆகாது.





செக்புக் விதிகளில் மாற்றம்


அக்டோபர் 1 முதல் ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா ஆகிய இரண்டு வங்கிகளின் பழைய காசோலை புத்தகங்கள் செல்லாது என பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது. ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளர்கள், பஞ்சாப் நேஷனல் வங்கியின் காசோலை புத்தகத்தினை பெற்றுக் கொள்ளலாம். புதிய புத்தகத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஐஎஃப்எஸ்சி (IFSC code) கோடு மற்றும் எம்ஐசிஆர் கோடு (MICR code) உடன் வரும் எனவும் தெரிவித்துள்ளது. ஆக அக்டோபர் முதல் புதிய பரிமாற்றங்கள் தடைபடாமல் இருக்க, புதிய செக், ஐஎஃப்எஸ்சி கோடுகளை பெற்றுக் கொள்ளலாம். மேற்கொண்டு புதிய காசோலைப் புத்தகத்தை சம்பந்தப்பட்ட வங்கி கிளைகளை சென்று அணுகலாம் எனவும் தனது அறிக்கையில் பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் ஏடிஎம், இன்டர்நெட் பேங்கிங் உள்ளிட்ட அதிகாரப்பூர்வமாக தளங்களிலும் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் அதிகாரப்பூர்வ கட்டணமில்லா கஸ்டமர் கேர் நம்பரான 18001802222 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.





மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு


மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களின் நலன்களை மனதில் கொண்டு, இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் ஒரு விதியை கொண்டு வந்துள்ளது. அது மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் பணிபுரியும் ஜீனியர் ஊழியர்கள் 10% தங்களது மொத்த சம்பளத்தில் முதலீடு செய்ய வேண்டும். இதே அக்டோபர் 2023 அன்று 20% முதலீடு செய்யலாம். இந்த முதலீடுகள் 'லான் இன்' காலத்தை கொண்டுள்ளது. இது ஊழியர்களுக்கு எதிர்காலத்தில் இரு அசெட்டினை உருவாக்கும் என்றாலும், அவர்களின் சம்பளம் குறையும் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.


தனியார் மதுபான கடைகள் மூடப்படலாம்


டெல்லியில் தனியார் மதுபான கடைகள் அடுத்த மாதம் முதல் மூடத் தொடங்கலாம். இது நவம்பர் 16, 2021 வரை மூடப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரையில் அரசு கடைகள் மட்டுமே செயல்படும். புதிய கலால் கொள்கையின் படி, தலை நகரை 32 மண்டலங்களாகப் பிரிப்பதன் மூலம் உரிமங்கள் ஒதுக்கீடு செயல்முறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விதியின் படி, புதிய பாலிசியின் படி வரும் கடைகள் மட்டுமே நவம்பர் 17 முதல் செயல்பட அனுமதிக்கப்படும்.