ITR 2024: ஒரு நிறுவனத்தில் பங்குதாரராக தனிநபர் பெறும் வருமானத்திற்கு வரி விதிக்கப்படாது.


வருமானவரி ஆலோசனைகள்:


வருமான வரிச்சட்டத்தின் 87A பிரிவின்படி, பொருந்தக்கூடிய வரி தள்ளுபடிகளை கடந்து,  வருமானம் ஈட்டும் அனைவரும் வருமான வரி செலுத்த வேண்டும். வரி செலுத்துவது கடமை என்றாலும், உழைத்து சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதி வருமான வரியாகப் போனால், அது வருத்தமாகத்தான் இருக்கும். அந்தப் பணம்  சம்பாதித்தவரிடம் இருந்தால், வேறு தேவைகளுக்கு பயன்பட வாய்ப்புள்ளது. அதேநேரம்,   நீங்கள் சம்பாதிக்கும் அனைத்து வகையான வருமானத்திற்கும் நீங்கள் வரி செலுத்த வேண்டியதில்லை. விலக்கு (Income Tax Exemptions) பெற உள்ள சில ஆலோசானைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


பழைய, புதிய வருமான வரி விதிப்பு முறை:


புதிய வருமான வரி விதிப்பு முறையின்படி, ஒரு நிதியாண்டில் ரூ. 7 லட்சம் வரை வருமானம் ஈட்டுப்வர்களுக்கு வரி விலக்கு உண்டு. பழைய வரி விதிப்பு முறையில் இந்த வரம்பு ரூ. 5 லட்சம் ஆகும். அதோடு,  ரூ. 50 ஆயிரம் வரை ஸ்டாண்டர்ட் டிடக்ஷனாக வழங்கப்படுகிறது. புதிய முறையில் வருமான வரி விலக்கு மற்றும் சலுகைகள் இருக்காது. வரி தள்ளுபடி வரம்பை மீறினால், ஸ்லாப் முறையில் வரி விதிக்கப்படும்.  பழைய வரி முறையின் கீழ், சில குறிப்பிட்ட வழிகளில் முதலீடுகள் செய்வதன் மூலம் வரி விலக்குகள் பெறலாம். வரி விதிக்கக்கூடிய வருமானம் இருந்தால், அதையும் குறைக்க வேறு வழிகள் உள்ளன.



வருமான வரி விதிக்கப்படாத வருமானம்: 



  • ஒரு நிறுவனத்தில் பங்குதாரராக நீங்கள் பெறும் வருமானத்திற்கு வரி விதிக்கப்படாது. நிறுவனம் ஏற்கனவே வரி செலுத்தியிருப்பதால் லாபத்திற்கு மட்டுமே நீங்கள் வரி செலுத்த வேண்டும்.

  • நீங்கள் பணியாளராக இருந்தால், முதலில் 'பண விதிகளை' புரிந்து கொள்ளுங்கள். ஒரு நிறுவனத்தில் 5 வருட சேவைக்குப் பிறகு கிராச்சுட்டி கிடைக்கும். இந்த கருணைத் தொகைக்கு வரி விலக்கு உண்டு. இருப்பினும், அதற்கு சில வரம்புகள் உள்ளன. அரசு ஊழியர் பெறும் கருணைத் தொகை ரூ. 20 லட்சம் வரை வரி செலுத்த தேவையில்லை. இதற்கு மேல் வருமான வரி செலுத்த வேண்டும். அதேபோன்று, தனியார் ஊழியர் பெறும் பணிக்கொடை ரூ. 10 லட்சம் வரை வருமான வரி செலுத்த வேண்டியதில்லை.

  • இயற்கை ஓய்வுக்கு முன் பணியாளர்கள் விருப்ப ஓய்வு பெறலாம். இது ஒரே நேரத்தில் பெரும் தொகையை பணியாளருக்கு கிடைக்கும். வருமான வரிச் சட்டத்தின்படி இந்தத் தொகையில் ரூ.5 லட்சம் வரை வரி செலுத்த வேண்டியதில்லை.

  • வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 10(2) இன் படி, இந்து பிரிக்கப்படாத குடும்பத்தால் (HUF) பெறப்பட்ட பணம் முற்றிலும் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. வருமான வரி கணக்கு (ITR) தாக்கல் செய்யும் போது இந்த சலுகையை பெறலாம்.

  • PPF இல் கிடைக்கும் வட்டியும் வருமான வரிக்கு உட்பட்டது அல்ல.


நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த வருமானத்தை வருமான வரியாக செலுத்த விரும்பவில்லை என்றால், வருமான வரியைச் சேமிக்க பல வழிகள் உள்ளன. நீங்கள் எந்த வழியை தேர்வு செய்தாலும், சட்டப்படி செல்லுங்கள். வருமான வரி தாக்கல் செய்யும் போது உங்கள் வருமானம் முழுமையாக வெளியிடப்படவில்லை என்றால், நீங்கள் பின்னர் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வருமான வரி ஏய்ப்பு என்பது சட்டப்படி குற்றம் மற்றும் தண்டனைக்குரியது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.