இந்தியா முழுவதும் டிஜிட்டல் மயமான சூழலில், தங்கத்தினைப் பாதுகாப்பாகவும், டிஜிட்டல் முறையில் வாங்குவதற்காக தங்க முதலீட்டாளர்கள் மேற்கொண்ட டிஜிட்டல் தங்க முதலீடு மக்களால் அதிகம் பயன்பாட்டில் உள்ளது. இதற்கு முக்கியமாக 5 காரணங்கள் கூறப்படுகின்றன. அவை என்ன?
1. டிஜிட்டல் தங்க மதிப்பீட்டில் 100 % பாதுகாப்பு:
இந்திய உலோகங்கள் மற்றும் கனிம வர்த்தகக் கழகம்( Metals and Minerals Trading Corporation of India) மற்றும் PAMP-உடன் இணைந்து டிஜிட்டல் கோல்டு விற்பனை மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் 99.99 சதவீத தூய தங்கத்தைப் பாதுகாப்பாக வாங்கவும், விற்கவும் வழிவகைள் செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு ரூபாய்க்கு கூட தங்கத்தினை வாங்கலாம் என கூறப்படுகிறது. கூடுதலாக IDBI Trusteeship மூலம் டிஜிட்டல் முறையில் முதலீடு செய்யும் தங்கம் பாதுகாக்கப்படுகிறது.
2. டிஜிட்டல் தங்கத்தினை எந்நேரத்திலும் விற்க முடியும்!
கடந்த 10 ஆண்டுகளில் 300 சதவீத அளவிற்கு தங்கவிலை அதிகரித்துள்ளது. ஆனால் டிஜிட்டல் தங்கத்தில் உள்ள தங்கத்தினை விற்கும் பொழுது தற்போதுள்ள சந்தை மதிப்பீட்டில் மட்டுமே மேற்கொள்ளப்படும். இதனையடுத்து எந்தவித கட்டணமும் இன்றி சுலபமாக நம்முடைய வங்கி கணக்கிற்கு பணப்பரிமாற்றம் நடைபெறுகிறது. குறிப்பாக கொரோனா ஊரடங்கு காலத்தின் போது, தங்க நகைகள் செய்யப்பயன்படும் உலோகங்களின் பற்றாக்குறைக் காரணமாக கடந்த மார்ச் ஆண்டு மாதத்திலிருந்து தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 50 ஆயிரம் வரை உயர்ந்து காணப்பட்டது. தற்போது அதன் நிலை கொஞ்சம் சீராகி வருகின்றது. எனவே தான் மொத்த சந்தையின் அடிக்கடி நிகழும் விலை மாற்றங்களுக்கு மத்தியில், டிஜிட்டல் தங்க முதலீடு பாதுகாப்பான விஷயமாக உள்ளது.
3. 1 ரூபாய்க்கு கூட டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்யும் வசதி:
டிஜிட்டல் தங்கத்தில், ரூபாய்க்கு கூட தங்கத்தினை வாங்க முடியும் மற்றும் முதலீடு செய்ய முடியும். குறிப்பாக டிஜிட்டல் தங்கத்தின் விலை மொத்த சந்தை மதிப்பின் வீதத்தினால் (wholesale market rate ) தீர்மானிக்கப்படுகிறது. உள்ளுர் சந்தை நிலவரம் மற்றும் பெருந்தொற்று காலங்களில் ஏற்படும் விலை மாற்றங்களால் இதன் மதிப்பு கணக்கிடப்படுவதில்லை. எனவே நீங்கள் டிஜிட்டல் தங்கத்தினை முதலீடு செய்ய வேண்டும் என்றால் முதலில் MMTC-PAMP உடன் இணைப்பில் உள்ள Gpay, Pay TM, PhonePe ஆகியவற்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் Aditya Birla Capital, Fisdom, Motilal Oswal மற்றும் HDFC Securities ஆகியவற்றுடனும் தொடர்பு கொண்டு டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வது குறித்து கேட்டறியலாம்.
4. சந்தை மதிப்பீட்டினைக் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை:
கொரோனா பெருந்தொற்று காலக்கட்டத்தில் பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவற்றிற்கு இடையில் பாதுகாப்பானதாக இருக்கக்கூடிய தங்க முதலீட்டில் மீண்டும் மக்கள் கவனத்தை செலுத்த தொடங்கியுள்ளனர். இதில் பெரும்பாலும் நீண்டகால தங்க முதலீட்டினை தேர்ந்தெடுத்து டிஜிட்டல் உலகத்தில் பாதுகாப்பாக சேமிப்புத் திட்டத்தினை மேற்கொள்கின்றனர்.
5. பாதுகாப்பாக வீட்டிற்கே தங்கம் வர நடவடிக்கை!
டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்த தங்கத்தினை நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம். குறிப்பாக தற்போது கொரோனா பெருந்தொற்று காலம் என்பதால் வெளியில் வருவது என்பது மிகவும் சிரமமாக காரியம். எனவே உங்களது மொபைல் மூலமாகவே எவ்வளவு தங்கம் தேவைப்படுகிறது. எவ்வளவு மதிப்பிலான நகைகள் அல்லது தங்க நாணயங்களா? என்பதைத் தெரியப்படுத்த வேண்டும். இதனையடுத்து மிகவும் பாதுகாப்பாக உங்களுடைய தங்கம் வீட்டிற்கே வந்து சேர்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
மேற்கண்ட இந்த 5 காரணங்களால் மக்கள் பெரும்பாலும் டிஜிட்டல் தங்க முதலீட்டினை மேற்கொண்டுவருகின்றனர்.