ஆதார் கார்டு, பான் கார்டு ஆகியவைகளில் இந்தியாவில் வசிக்கும் ஒருவரது முக்கியமான அடையாளமாக பார்க்கப்படுகிறது. ஆனால் சிலர் அதனை தவற விடுவதுண்டு,


பான் கார்டு தொலைந்துவிட்டால் அதனை மீண்டும் அப்படி பெறுவது என்பது குறித்தான வழிமுறைகள்.மின்னணு பான் கார்டு அல்லது இ-பான் (e-PAN) அட்டையை பதிவிறக்கம் செய்யலாம். இந்த பான் கார்டு பிடிஃஎப்ஐ திறக்க உங்களின் பிறந்த நாளை தேதி, மாதம், வருடம் (ddmmyyyy) என்ற வகையில் பதிவிட வேண்டும். 


கையில்தான் பான் கார்டு வேண்டும் என்றால், ரீபிரிண்டட் பான் கார்டை நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட் (NSDL) வழங்குகிறது.


சில எளிய வழிமுறைகளை பின்பற்றி என்.எஸ்.டி.எல் தளத்தில் பான் கார்டு ரீபிரிண்டட் வெர்ஷனை நீங்கள் அஞ்சல் மூலம் பெற முடியும். சராசரியாக வருடம் ஒன்றுக்கு 5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் கொண்டவர்கள் வருமான வரி செலுத்த வேண்டும். அவர்களுக்கு பான் கார்டு மிகவும் அவசியம். மேலும் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வங்கிகளில் செலுத்தவோ எடுக்கவோ பான் கார்டு எண் கொடுக்க வேண்டும்.


அது மட்டுமில்லாமல் வாகனம், நிலம், வீடு போன்ற மதிப்புள்ள பொருட்களை வாங்கும்போதும் பான் கார்டு எண் அவசியமாகிறது. தவிர, அரசு வேறு எதற்கெல்லாம் பான் கார்டு எண்ணைக் குறிப்பிட வலியுறுத்துகிறதோ அங்கெல்லாம் கொடுக்க வேண்டும். அதே நேரத்தில் ஒருவர் பான் கார்டு வாங்கியதாலேயே அவர் வருமான வரி கட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை. வருமானம் குறிப்பிட்ட அளவைத் தாண்டும்போதுதான் வரி கட்ட வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது. பான் கார்டு வைத்திருப்பதில் மேலும் சில நன்மைகள் உண்டு. அதை கொண்டு அரசு மற்றும் அரசு சாராத நிறுவனங்களில் தேவைக்கேற்ப அடையாள அட்டையாகப் பயன்படுத்தி உங்கள் வேலையை எளிதாக்கலாம்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: Corona Rise | சென்னையில் அச்சுறுத்தும் கொரோனா... கடந்த 10 நாளில் 5 மடங்காக அதிகரிப்பு! முழு விவரம்..


திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 சமணர் படுகைகள் கண்டுபிடிப்பு


Share Market | புது வருடம்.. புது தொடக்கம்.. பங்குச்சந்தை நிலவரம் :500 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ், 150 புள்ளிகள் உயர்ந்த நிஃப்டி