GOLD Vs Gold Bonds: தங்கம் மற்றும் தங்கப் பத்திரங்கள் ஆகிய இரண்டின் மீதான முதலீட்டிற்கான, வருவாய் விவரங்கள் கீழே ஒப்பிடப்பட்டுள்ளன.


தங்கத்தில் முதலீடு:


எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு சேமிப்பிற்கு தங்கத்தை சிறந்ததாகக் கருதி, அதில் பணத்தை முதலீடு செய்ய விரும்பினால், தங்கம் அல்லது தங்கப் பத்திரங்கள் எது சிறந்தது? என்பத நீங்கள் முதலில் தெளிவாக அறிய வேண்டும்.


தங்கம் Vs தங்கப் பத்திரங்கள்:


தங்கம் ஒரு பாரம்பரிய முதலீட்டு வழி. தங்கத்தில் முதலீடு செய்வது என்பது பல தசாப்தங்களாக தொடரும் சூழல்ல்,  காலப்போக்கில் தங்கத்தில் முதலீடு செய்யும் முறைகள் மட்டும் மாறியுள்ளன. முதலீட்டுக் கண்ணோட்டத்தில் நாம் பார்த்தால், இப்போது முதலீடு செய்யக்கூடிய பல வழிகள் உள்ளன. அதில் நகைகளாக அணியும் தங்கம் மட்டுமின்றி,  டிஜிட்டல் தங்கம், தங்கப் பத்திரங்கள் ஆகியவை அடங்கும். நீங்கள் சம்பாதிக்கத் தொடங்கியுள்ளீர்கள் அல்லது விரைவில் சம்பாதிக்கத் தொடங்க உள்ளீர் என்றால், ஒருவேளை தங்கத்தில் பணத்தை முதலீடு செய்ய விரும்பினால், நேரடி தங்கம் அல்லது தங்கப் பத்திரங்கள் உங்களுக்கான சரியான தேர்வாகும். இரண்டு விருப்பங்களில் எது அவர்களுக்கு சிறந்தது? 


தங்கம்/தங்கப்பத்திரம் எது சிறந்த வருமானத்தை அளிக்கும்?


முதலீட்டைப் பொறுத்தவரை எந்த விதமான ரிஸ்க்கையும் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், நீங்கள் FD, PF மற்றும் தங்கம் போன்றவற்றில் முதலீடு செய்யலாம். FD மற்றும் PF ஆகியவற்றின் வருமானம் பணவீக்கத்தை வெல்லவில்லை என்றாலும், தங்கம் 'நடுத்தர ஆபத்து நடுத்தர வருவாய்' பிரிவில் வருகிறது. நீண்ட கால முதலீட்டில் தங்கம் பணவீக்கத்திற்கு சமமான வருமானத்தை அளிக்கிறது.


அதேநேரம், நீங்கள் பணவீக்கத்தை வெல்ல விரும்பினால், தங்கத்திற்குப் பதிலாக இந்திய அரசாங்கத்தால் வெளியிடப்படும் தங்கப் பத்திரத்தைத் தேர்வு செய்யலாம். தங்கத்தின் மதிப்பு அதிகரிக்கும் போது, ​​இந்த பத்திரத்தின் மதிப்பும் அதிகரிக்கும் என்பது இதன் நன்மை. இது தவிர, அரசாங்கம் உங்களுக்கு 2.5 சதவிகித வட்டியையும் வழங்குகிறது. அதன்படி, தங்கப் பத்திரங்களில் இரட்டிப்புப் பலன் கிடைக்கும், தங்கத்தின் விலையும் அதிகரிக்கிறது, மேலும் ஆண்டுக்கு 2.5 சதவீத வட்டியும் கிடைக்கும்.


தங்கப் பத்திரங்களை எங்கே வாங்கலாம்


- வங்கிகளில் இருந்து ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் வாங்கலாம்
- தபால் அலுவலகத்திலும் வாங்கலாம்.
- பங்கு வைத்திருக்கும் நிறுவனம் மூலம் வாங்கலாம்
- பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ தளங்களில் இருந்தும் வாங்கலாம்


எவ்வளவு தங்க பத்திரங்களை தனிநபர் வாங்கலாம்?


எந்தவொரு தனிநபரும் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 1 கிராம் முதல் அதிகபட்சம் 4 கிலோ மதிப்பிலான தங்க பத்திரங்கள் வரை முதலீடு செய்யலாம். தங்கப் பத்திரத்தின் பதவிக்காலம் பத்திரம் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 8 ஆண்டுகள் ஆகும். இருப்பினும், 5 ஆண்டுகளுக்குப் பிறகு  முதிர்ச்சிக்கு முந்தைய தொகையை பெறலாம். நீங்கள் வங்கிகள், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (SHCIL), தபால் அலுவலகங்கள் மற்றும் பங்குச் சந்தைகளில் அதாவது பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ ஆகியவற்றில் தங்கப் பத்திரத்தை விற்கலாம்.