EPFO: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) பயனாளர்கள், திட்டச் சான்றிதழை (scheme certificate) கொண்டிருக்காவிட்டால் ஓய்வூதியம் பெறுவதில் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்.


திட்டச் சான்றிதழ்:


நீங்கள் சம்பளம் பெறும் நபராக இருந்து, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) பயனாளராக தொடர்ந்தால், திட்டச் சான்றிதழைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும். இந்த சான்றிதழ் ஊழியர்களுக்கு பல வழிகளில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இபிஎஃப்ஓவில் பணியாளரும் முதலாளியும் செய்யும் பங்களிப்பு இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது என்பதை அனைவரும் அறிவோம். ஒன்று நீங்கள் மொத்தமாகப் பெறும் EPFக்கு செல்கிறது, மேலும் ஒரு பகுதி உங்கள் ஓய்வூதிய நிதிக்கு செல்கிறது. ஊழியர் 10 வருட சேவையை முடித்து 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் EPF க்கு பங்களித்திருந்தால், அவர் 58 வயதிற்குப் பிறகு EPFO ​​இலிருந்து ஓய்வூதியம் பெற தகுதியுடையவராவார்.


ஆனால் 10 ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு, ஒரு நபர் EPFO ​​கணக்கில் பங்களிப்பு செய்யவில்லை, ஆனால் ஓய்வு பெறும் வயதில் அவர் தனது முந்தைய பங்களிப்புக்கு பதிலாக ஓய்வூதியத்தை விரும்பினால், அவர் எப்படி ஓய்வூதியத்தை பெறுவார்? அந்த நேரத்தில் தான் திட்டச் சான்றிதழ் உதவிகரமாக இருக்கும்.


திட்டச் சான்றிதழ் என்றால் என்ன?


EPFO ​​ஆல் வழங்கப்படும் திட்டச் சான்றிதழில், ​​உறுப்பினர் மற்றும் அவரது குடும்பத்தினரின் விவரங்கள் இருக்கும். இது EPFO ​​உறுப்பினர் ஓய்வூதியத் திட்டத்தில் உறுப்பினராக இருப்பதற்கான சான்றாகும். ஒரு EPFO ​​உறுப்பினர் தனது வேலையை மாற்றுகிறார் என்று கருதுவோம், ஆனால் புதிய வேலையில் அவரது நிறுவனம் EPFO ​​இன் வரம்புக்குள் வரவில்லை என்றால், EPFO ​​உறுப்பினர் திட்டச் சான்றிதழை எடுக்க வேண்டும். ஒருவேளை, அந்த நபர் மீண்டும் தனது வேலையை மாற்றிக்கொண்டு, புதிய நிறுவனத்தில் சேர்ந்தால், அவரது பங்களிப்பு EPFO ​​இல் மறுதொடக்கம் செய்யப்பட்டால், அவர் திட்டச் சான்றிதழின் மூலம் புதிய கணக்கில் தன்னை உறுப்பினராக சேர்க்கலாம். இதற்கு, அவர் முதலாளி மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதைச் செய்வதன் மூலம், புதிய பங்களிப்பு அவரது முந்தைய பங்களிப்பில் தொடங்குகிறது. 


திட்டச் சான்றிதழ் பயன்: 


இபிஎஃப்ஓ உறுப்பினராக 10 ஆண்டுகளை பூர்த்தி செய்தவர்களுக்கும் இந்தச் சான்றிதழ் பயனுள்ளதாக இருக்கும். ஓய்வூதியம் பெறுவதற்கான குறைந்தபட்ச வயது 50 ஆண்டுகளாக இருக்கிறது. அதற்கு முன்பே ஒருவர் பணி செய்வதில் இருந்து விலகிவிட்டால், 50 முதல் 58 வயதுக்குள் திட்டச் சான்றிதழைப் பெற்று ஓய்வூதியம் பெறலாம். ஆனால், 50 முதல் 58 வயது வரை குறைந்த விகிதத்திலான ஓய்வூதியமே கிடைக்கும். 58 ஆண்டுகளுக்குப் பிறகே முழு ஓய்வூதியமும் பயனாளருக்கு கிடைக்கப்பெறும்.


திட்ட சான்றிதழை பெறுவது எப்படி?


திட்டச் சான்றிதழைப் பெற, நீங்கள் படிவம் 10C ஐ நிரப்ப வேண்டும். இந்த படிவத்தை EPFO ​​இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அருகில் உள்ள EPFO ​​அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். இதனுடன், பிறந்த தேதி சான்றிதழ், ரத்து செய்யப்பட்ட காசோலை, பணியாளரின் குழந்தைகளின் பெயர்கள் மற்றும் விவரங்கள் போன்ற சில ஆவணங்களை நீங்கள் வழங்க வேண்டும்.