EPFO Update: ஈபிஎஃப்ஒ கணக்கில் பயனர்கள் தங்களது தனிப்பட்ட விவரங்களை திருத்துவது எளிதாக்கப்பட்டுள்ளது.
ஈபிஎஃப்ஒ அப்டேட்:
பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு எனப்படும் EPFO, அதன் உறுப்பினர்களுக்கு ஒரு நல்ல அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, EPFO கணக்குகள் தொடர்பான இரண்டு புதிய அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் EPFO உடன் இணைக்கப்பட்ட 7.6 கோடி உறுப்பினர்கள் பயனடைவார்கள். அதனடிப்படையில் உறுப்பினர்கள் தங்களது பெயர், பிறந்த தேதி போன்ற தங்களின் தனிப்பட்ட விவரங்களை, இனி வேலை செய்யும் நிறுவனத்தின் (EMPLOYER) சரிபார்ப்பு அல்லது EPFO இன் ஒப்புதல் இல்லாமலேயே ஆன்லைனில் எளிதாக மாற்றலாம்.
மேலும், e-KYC EPF கணக்குகளைக் கொண்ட (ஆதாரருடன் இணைக்கப்பட்ட) ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) உறுப்பினர்கள், நேரடியாக தங்கள் EPF பரிமாற்ற உரிமைகோரல்களை (CLAIM)ஆதார் OTP ( ஒரு முறை கடவுச்சொல் ) மூலம் முதலாளியின் தலையீடு இல்லாமல் ஆன்லைனில் தாக்கல் செய்யலாம் . இந்த இரண்டு புதிய சேவைகளையும் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிமுகப்படுத்தினார். இதன் காரணமாக ஈபிஎப்ஓ செயல்முறை எளிதாகும், மேலும் முதலாளிகள் மீதான அழுத்தமும் குறையும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
புதிய அப்டேட் - பலன்கள் என்ன?
- அக்டோபர் 1, 2017க்குப் பிறகு வழங்கப்பட்ட UAN இன் சந்தாதாரர்கள் இந்த வசதியைப் பெறலாம். அவர்கள் ஏதேனும் மாற்றங்களைச் செய்ய விரும்பினால், துணை ஆவணங்கள் எதுவும் தேவையில்லை.
- EPFO உறுப்பினர்களின் பெயர், பிறந்த தேதி, பாலினம், திருமண நிலை, மனைவி பெயர் போன்ற விவரங்களை மாற்றுவது எளிது.
- ஆதாருடன் இணைக்கப்படாத UAN கணக்குகளின் விஷயத்தில் நீங்கள் மாற்றங்களைச் செய்ய விரும்பினால், நீங்கள் ஆவணங்களை உரிமையாளரிடம் சமர்ப்பித்து, சரிபார்ப்பை முடித்து, EPFO க்கு ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும்.
- அக்டோபர் 1, 2017 க்கு முன் வழங்கப்பட்ட UAN உடன் சந்தாதாரர்கள் தங்கள் விவரங்களை மாற்றுவதற்கு EPF ஒப்புதல் தேவையில்லாமல் செயல்முறையை முடிக்க முடியும். இதற்கு தேவையான ஆவணங்களும் குறைக்கப்பட்டுள்ளன.
EPFO போர்ட்டலில் EPF UAN ஐ ஆதாருடன் இணைப்பது எப்படி:
- EPFO உறுப்பினர் இ-சேவா இணையதளத்தை அணுக வேண்டும்
- உங்கள் UAN, கடவுச்சொல், கேப்ட்சாவைப் பயன்படுத்தி உள்நுழையவும்.
- 'நிர்வகி' மெனுவில், 'KYC' விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- KYC பக்கத்தில், ஆதாரைத் தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் ஆதார் அட்டையில் 12 இலக்க ஆதார் எண் மற்றும் பெயரை உள்ளிடவும்.
- தகவலைச் சரிபார்ப்பதற்காகச் சமர்ப்பிக்க, 'சேமி' என்பதைக் கிளிக் செய்யவும்.
- UIDAI அவர்களின் தரவுகளுடன் உங்கள் விவரங்களைச் சரிபார்க்கும்.
- வெற்றிகரமாக சமர்ப்பித்த பிறகு, உங்கள் ஆதார் உங்கள் EPF கணக்குடன் வெற்றிகரமாக இணைக்கப்படும்.