பெண் குழந்தைகளின் திருமணம் மற்றும் உயர்கல்விக்காகவே எல்ஐசியில் கன்யாதான் பாலிசி நடைமுறையில் உள்ளது. இதன் மூலம் 25 ஆண்டுகளில் 27லட்ச ரூபாய் வரை பெற முடியும்.


 வாழ்க்கையில் தான் பட்ட கஷ்டங்களை தம்முடைய குழந்தைகள் அனுபவிக்கக்கூடாது என அனைத்து பெற்றோர்களும் நினைப்பார்கள். அதிலும் ஒரு வீட்டில் பெண் குழந்தைப்பிறந்துவிட்டால் அவர்களின் கல்வி, திருமணம் எதிர்காலத்தை நினைத்து  நிச்சயம் வருத்தமடைவார்கள். பின்னர் அவர்களது வாழ்க்கையில் அடுத்த முடிவு  எல்.ஐ.சி அல்லது தபால் நிலையங்களில் ஏதாவது ஒரு திட்டத்தில் சேர்ந்துப் பணத்தினை சேமிப்பதாக தான் இருக்கும். இந்த சூழலில் தான் பெற்றோர்களின் கனவினை நிவர்த்திச் செய்யும் வகையில் எல்.ஐ.சியில் கன்யாதான் என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் தினமும் ரூ.121 என மாதம் ரூ.3600 பிரீமியம் தொகை செலுத்தினால் 25 ஆண்டுகளில் ரூ.27 லட்சம் பெற முடியும். பெண் குழந்தைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தில் வேறு என்ன சிறப்புகள் உள்ளது? எப்படி இதனை தொடங்க வேண்டும் என்று இங்கே அறிந்து கொள்வோம்.





எல்ஐசி கன்யாதான் பாலிசியை பெறுவதற்கான வயது வரம்புகள்:


பெண் குழந்தைகளின் எதிர்காலத்தைக்காலத்தை கருத்தில் கொண்டு எல்ஐசியின் இந்த கன்யாதான் திட்டத்தைத் தொடங்க நினைத்தால், பாலிசிதார்களுக்கு 30 வயதும், அவர்களது குழந்தைகளுக்கு ஒரு வயதும் கண்டிப்பாக இருக்கு வேண்டும். அப்பொழுது தான் இந்த பாலிசி அவர்களுக்கு எதிர்காலத்தில் கல்வி மற்றும் திருமணத்திற்கு உதவியாக இருக்கும். இந்த பாலிசி 13 அல்லது 25 ஆண்டுகள் இருக்கும் நிலையில் முதல் 3 ஆண்டுகளுக்கு கண்டிப்பாக பிரிமீயம் தொகை செலுத்துவதை நிறுத்தக்கூடாது. அதேப்போல் 25 ஆண்டுகால பாலிசி என்றாலும் 22 ஆண்டுகள் பாலிசி பிரீமியம் தொகைக்கட்டினால் போதும். அதாவது கடைசி மூன்று ஆண்டுக்கு பிரீமியம் தொகை செலுத்தத்தேவையில்லை.


மேலும் இந்த பாலிசிக்கான பிரீமியம் தொகையைத் தினமும் ரூ.121 என மாதம் ரூ. 3600 என செலுத்திக்கொள்ளலாம்.  சில பாலிசிகளில் ஆரம்பத்தில் நீங்கள் என்ன பிரீமியம் செலுத்துகிறீர்களோ,? இறுதிவரையில் அதனையே நீங்கள் செலுத்த வேண்டியதாகி இருக்கும். ஆனால் இந்த கன்யாதான் பாலிசியில் உங்கள் கையில் பணம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அதிகரித்தும், குறைவாக குறைவாக இருக்கும் போது குறைவான பிரீமியம் தொகை செலுத்தக்கூடிய ஆப்சன் இதில் உள்ளது.


 எல்.ஐ.சி கன்யாதான் பாலிசியை பெறும் எளிய முறைகள்:


எல்.ஐ.சி கன்யாதான் பாலிசியைப் பெற விரும்புவோர் அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்துக்கொள்ள வேண்டும். இதோடு ஆதார் அடையாள அட்டை, வருமானவரிச்சான்றிதழ், முகவரிச்சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் போட்டா மற்றும் முதல் மாத பிரீமியம் தொகைச் செலுத்துவதற்கு கையொழுத்திட்ட காசோலை அல்லது பணத்தினை எல்.ஐ.சி முகவர்கள் அல்லது எல்.ஐ.சி அலுவலகத்தில் கொடுத்து இந்த பாலிசியை தொடங்கலாம். இதனுடன்  குழந்தைகளின் பிறப்புச்சான்றிதழையும் கட்டாயம் இணைத்திருக்க வேண்டும்.





ஒரு வேளை மெச்சுரீட்டி காலம் முடிவதற்குள்  பாலிசிதாரர் இறக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்தினர் பிரீமியம் தொகை கட்டத்தேவையில்லை. மேலும் விபத்தினால் உயிரிழந்திருந்தால்  ரூ.10 லட்சமும், இயற்கை மரணம் என்றால் ரூ.5 லட்சம் வழங்கப்படும். இதோடு  பாலிசியின் மெசுரிட்டி காலம் வரை குடும்பத்திற்கு ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும்.  மேலும் 25 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.27 லட்சம் நாமினிக்கு வழங்கப்படும்.